கண்களை சுற்றி இருக்கும் சுருக்கங்களை போக்கனுமா?பலன் தரும் கைவைத்தியங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

கண்கள்தான் நீங்கள் இளமையாக இருக்கிறீர்களா அல்லது வயதாகிவிட்டதா என உண்மையை படக்கென்று சொல்லிவிடும். வயது பிரச்சனையில்லை. சிலர் 30, 40 வயதை தாண்டினாலும் இளமையாக இருப்பார்கள். அதற்கு ஒரே காரணம் கண்களைச் சுற்றி எந்த மாற்றமும் நிகழாமல் இருப்பதே.

வயது ஆக ஆக, கண்கள் சற்று உள்ளே போகும். கண்ணைச் சுற்றிலும் பள்ளம் விழுந்தது போல் உண்டாகும். கண் ரப்பைகள் வீங்கும். கண் பக்கவாட்டில் சுருகங்கள் உண்டாகும். இதனை வைத்து அவர்களின் வயதை அறிந்து கொள்ளலாம்.

நேரத்திற்கு சாப்பிட்டு தூங்கினால் இந்த பாதிப்பு எளிதில் வராது என்றாலும், வயதாகும்போது இப்படி மாற்றங்கள் உருவாவது இயற்கையே. அவற்றை எப்படி போக்கலாமென இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அவகாடோ மாஸ்க் :

அவகாடோ மாஸ்க் :

அவகாடோவின் சதைப் பகுதியை எடுத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தேன் கலந்து , மெலிதாக கண்ணைச் சுற்றிலும் முழுவதும் தடவ வேண்டும். காய்ந்த பின் கழுவுங்கள். மெலிதான துணியினால் ஈரத்தை ஒற்றி எடுங்கள்.

நன்மை :

நன்மை :

அவகாடோவில் விட்டமின் ஈ, ஏ, சி, ஆகியவை உள்ளது. விட்டமின் ஈ சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் இது சுருக்கங்களுக்கு முழு எதிரியாக விளங்குகிறது. ஆகவே கண்கள் சுருக்கமின்றி பளபளப்பாக மிளிரும்.

பால் :

பால் :

பாலில் நனைத்த பஞ்சினால் உங்கள் கண்களை அடிக்கடி ஒற்றிக் கொள்ள வேண்டும். காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள்.

நன்மைகள் :

நன்மைகள் :

பாலில் உள்ள லாக்டிம் அமிலம் கொலாஜன் உருவாவதை தூண்டுகிறது. இதனால் அங்கே உருவான சுருக்கங்கள் நளடைவில் மறைகிறது. கருவளையமும் குணமாகும்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தினமும் இரவு தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெய் கொண்டு கண்களை மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்தால் ஒரே வாரத்தில் கண் சுருக்கங்கள் மறையும்.

நன்மைகள் :

நன்மைகள் :

தேங்காய் எண்ணெயில் இருக்கும் லினோலினிக் அமிலம் கண்களைச் சுற்றி காணப்படும் பாதிப்படைந்த திசுக்களை ரிப்பேர் செய்கிறது. தூங்கும்போதும் தடவுவதால் திசுக்கள் நன்றாக உறிந்து விரைவில் சுருக்கங்களை மறைக்கிறது.

பப்பாளி :

பப்பாளி :

பப்பாளியுடன் சிறிது பால் கலந்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். தினமும் ஒரு தடவை அல்லது வாரம் 3 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

நன்மைகள் :

நன்மைகள் :

பப்பாளி சுருக்கங்களை போக்க வல்லது. சரும துவாரங்களை சுருங்கச் செய்யும். இதனால் சருமம் இறுகும். கண்கள் இளமையாக இருக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

நன்மைகள் :

நன்மைகள் :

விட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவைகள் அதிகம் இருப்பதால் அவை சுருக்கங்களை போக்கி, கண்களை மிளிரச் செய்யும்.

 புதினா :

புதினா :

புதினா இலைகளை அரைத்து அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து கண்கள் சுற்றிலும் தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து கழுவலாம்.

நன்மைகள் :

நன்மைகள் :

புதினாவில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. இவை சுருக்கங்களை போக்கி, கண்களை சுற்றியும் புது செல்கள் உருவாக தூண்டும். இதனால் கண்கள் மென்மையாக மாறும்.

கேரட் :

கேரட் :

கேரட்டை அரைத்து அதனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

நன்மைகள் :

நன்மைகள் :

கேரட்டில் கரோட்டின் அதிகம் இருப்பதால் அவை கண்களின் பாதிப்பை போக்கின்றன. கண்களுக்கு தேவையான நீர்ச்சத்தையும் தருகின்றது.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் சிறிது விளக்கெண்ணெய் கலந்து க்ரீம் போல் செய்து கொள்ளுங்கள். இதனை கண்களைச் சுற்றிலும் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளலாம்.

நன்மைகள் :

நன்மைகள் :

வெள்ளரிக்காயின் குளிர்ச்சி கண்களைச் சுற்றிலும் இருக்கும் ரத்தக் குழாய்களை அமைதிப் படுத்துகிறது. இதனால் ரத்தம் நன்றாக பாய்ந்து புத்துணர்ச்சி தருகிரது. நாளடைவில் சுருக்கங்கள் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural home remedies to treat crow's feet

Natural home remedies to treat crow's feet
Story first published: Wednesday, November 22, 2017, 17:07 [IST]