கருப்பான உதட்டை விரைவில் சிவப்பாக்க உதவும் அருமையான குறிப்புகள்!!

Written By:
Subscribe to Boldsky

சிவந்த உதடுகள் அழகை இன்னும் அதிகபப்டுத்தும். ஆனால் சிரு வயதிலிருந்தே அல்லது லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் விரைவில் கருப்பாகிவிடும். பின்னர் லிப்ஸ்டிக் இல்லாமல் வெளியே போக முடியாத அளவிற்கு உதடு கருத்துப் போகும்.

Natural 5 Lip scrubs to take care of chapped dark lips

இதற்கு நிரந்தர தீர்வே பலன் தரும். அதனை மறைப்பது இன்னும் இன்னும் பாதிப்புகளையே தரும். அதில் ஒன்றுதான் உதட்டில் வறட்சி மற்றும் பிளவு உண்டாவது.

நிரந்தரமாக தீர்வை தேடிப் போகவேண்டுமெனில் இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காஃபி ஸ்க்ரப் :

காஃபி ஸ்க்ரப் :

காஃபியிலுள்ள காஃபின் இறந்த செல்களை அகற்றி செல்களுக்கு புத்துயிர் அளிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உதடு மீண்டும் பழைய நிறத்திற்கு வரும்.

காபிப் பொடியை ஆலிவ் எண்ணெய் கலந்து தினமும் உதட்டில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும். தினமும் செய்தான் நல்ல பலன் தரும்.

குங்குமப் பூ ஸ்கர்ப் :

குங்குமப் பூ ஸ்கர்ப் :

குங்குமப்பூ துகளை சிறிது பாலில் போட்டு ஊற வைக்கவும் 15 நிமிடம் கழித்து ஊறிய பாலில் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்தால் ஸ்க்ரப் ரெடி. இதனை உதட்டில் தேய்த்து வந்தால் உதடு சிவப்பாக மாறுமென்பதில் சந்தேகமில்லை.

புதினா ஸ்க்ரப் :

புதினா ஸ்க்ரப் :

கருமையான உதட்டிற்கான சிறந்த தீர்விற்கு புதினாவை விட சிறந்த தீர்வு எதுவுமில்லை. புதினாவை அரைத்து அதனுடன் சிரிது சர்க்கரையை பொடி செய்து கலக்கவும் . இந்த கலவையை தினமும் உதட்டில் தேய்த்து காய்ந்ததும் கழுவுங்கள். சிறந்த பலனைத் தரும்.

கடல் உப்பு ஸ்க்ரப் :

கடல் உப்பு ஸ்க்ரப் :

கோகோ ஸ்க்ரப் கடைகளில் காஸ்ட்லியாக இருக்கும். ஆனால் இதனை வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயில் சிறிது கடல் உப்பு கலந்து உதட்டி தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். உதட்டில் கருமை நிறம் மறைந்து விரைவில் சிவப்பாகும்.

தேன் ஸ்கர்ப் :

தேன் ஸ்கர்ப் :

தேன் ஈரப்பதம் அதிகம் கொண்டது. வறட்சியை போக்கும். தேன், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சிறந்த கூட்டணியாகும். இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து உதட்டில் தேய்த்து வந்தால் ஒரே வாரத்தில் உதட்டிலிருக்கும் கருமை மறைந்து மென்மை பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural 5 Lip scrubs to take care of chapped dark lips

Natural 5 Lip scrubs to take care of chapped dark lips
Story first published: Thursday, June 1, 2017, 9:00 [IST]