5 நிமிடத்தில் வீட்டிலேயே ஷேவிங் க்ரீம் செய்வது எப்படி எனத் தெரியுமா?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஷேவிங் என்பது நாம் அடிக்கடி செய்யக் கூடிய விஷயமாக உள்ளது. எனவே தான் உங்கள் ஷேவிங் க்ரீம் கெமிக்கல்கள் நிறைந்த ஆர்கானிக் க்ரீம் என்றால் அடிக்கடி பயன்படுத்தும் போது உங்கள் சரும நிறத்தை பாதிப்படையச் செய்து விடும்.

Here's How You Can Make Your Own Shaving Cream

எனவே தான் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் ஷேவிங் செய்ய இயற்கை மூலப் பொருட்கள் அடங்கிய க்ரீம் தேவைப்படுகிறது. மேலும் இதில் ஜின்செங், பட்டை மற்றும் வெந்தயம் போன்றவை பயன்படுத்துவதால் நல்ல நறுமணத்தையும் தரும்.

ஆண்களுக்கான மிகச்சிறந்த ஆஃப்டர் ஷேவ் ஆயில்கள்!!!

எனவே நீங்கள் இதற்காக தனியாக பூக்கள் நறுமண பெர்ஃப்யூம்களை சேர்க்கனும் அவசியமில்லை. சரி வாங்க இப்பொழுது எப்படி வீட்டிலேயே ஷேவிங் க்ரீம் தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் ப்லாஸ்ட்

சிட்ரஸ் ப்லாஸ்ட்

1 கப் ஷீயா பட்டர்

2 விட்டமின் ஈ மாத்திரைகள்

1 கப் ஆலிவ் ஆயில்

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா

சிறிது துளிகள் சிட்ரோனெல்லா ஆயில்

சிறிது துளிகள் ஆரஞ்சு ஆயில்

செய்முறை

ஷீயா பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்கிக் கொள்ள வேண்டும். நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஆற விடவும்.

இதனுடன் விட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் மற்ற ஆயிலை கலக்க வேண்டும். பிறகு பேக்கிங் சோடாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கலவையானது க்ரீம் தன்மைக்கு வரும் வரை கலக்க வேண்டும்.

இறுதியில் இந்த க்ரீமை பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி பயன்படுத்திக்கலாம்.

 ஜின்செங் க்ரீம் :

ஜின்செங் க்ரீம் :

தேவையான பொருட்கள்

1 கப் ஷீயா பட்டர்

2 விட்டமின் ஈ மாத்திரைகள்

1கப் இனிப்பு சுவை பாதாம் எண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் ஜின்செங் பவுடர்

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை

ஷீயா பட்டர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்க வேண்டும். இந்த கலவை ஆறிய பிறகு விட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் ஜின்செங் பவுடரையும் போட்டு கலக்க வேண்டும். இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் சோடா சேர்த்து க்ரீம் தன்மை வரும் வரை கலக்கி, இந்த க்ரீம்யை பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.

பெருஞ்சீரகம் க்ரீம் :

பெருஞ்சீரகம் க்ரீம் :

தேவையான பொருட்கள்

1 கப் கோக்கோ பட்டர்

1 கப் ஆலிவ் ஆயில்

2 விட்டமின் ஈ மாத்திரைகள்

1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் பொடி

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை

கோக்கோ பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்கி ஆற வைக்க வேண்டும். பிறகு இதனுடன் விட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் சோடா சேர்த்து க்ரீம் தன்மை வரும் வரை கலக்கி டப்பாக்களில் அடைத்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.

பட்டை க்ரீம் :

பட்டை க்ரீம் :

தேவையான பொருட்கள்

1 கப் கற்றாழை ஜெல்

1 கப் ஹேஸ்டில் சோப் (எண்ணெய் உள்ள சோப்)

2 டேபிள் ஸ்பூன் இனிப்பு சுவை பாதாம் எண்ணெய்

சிறிது துளிகள் பட்டை ஆயில் அல்லது 2 டேபிள் ஸ்பூன் பட்டை பொடி

செய்முறை

சோப்பை அரை கப் தண்ணீரில் கரைத்து நுரை பதத்திற்கு ஆக்கிக் கொள்ளவும். இதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் கலக்க வேண்டும். பிறகு பட்டை பொடி அல்லது பட்டை எண்ணெய் கலந்து டப்பாக்களில் அடைத்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.

மெருகேற்றும் வெந்தயம் க்ரீம்

மெருகேற்றும் வெந்தயம் க்ரீம்

தேவையான பொருட்கள்

1 கப் ஆர்கானிக் சாம்பு

1 கப் ஆர்கானிக் க்ரீம் கண்டிஷனர்

கொஞ்சம் வெந்தயப் பொடி

செய்முறை

சாம்பு, கண்டிஷனர் மற்றும் வெந்தயப் பொடி கலந்து நல்ல நுரை பதத்திற்கு கலக்க வேண்டும். நுரைப்பதம் வருவதற்கு முட்டை அடிக்கும் கருவியை பயன்படுத்தலாம். பிறகு டப்பாக்களில் அடைத்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.

இந்த 5 வகை ஷேவிங் க்ரீம் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல பலனை தரும். மேலும் பாதுகாப்பான ஆரோக்கியமான சருமத்தையும் கொடுக்கும். இத ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக நல்ல மாற்றம் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Here's How You Can Make Your Own Shaving Cream

Here's How You Can Make Your Own Shaving Cream
Story first published: Friday, July 28, 2017, 16:30 [IST]