அக்குள் கருமையை போக்க இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தாலே போதுமே!

Written By:
Subscribe to Boldsky

இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதால், அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லை என்றால் நீங்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிந்தால் அது அசிங்கமாக இருக்கும்.

சருத்தில் மடிப்பு விழுந்த இடங்கள், மூட்டுக்கள் இணையும் இடங்கள் போன்றவை கருமையாக இருக்கும். சிலருக்கு அக்குள் மிகவும் கருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அக்குளில் உள்ள கருமையை போக்கினால் தான் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை சங்கடப்படாமல் அணிந்து கொள்ள முடியும்.

அதற்கு குறிப்பாக அக்குளில் வளரும் தேவையற்ற முடிகளை தவறாமல் நீக்க வேண்டும். அதிலும் வேக்சிங், ஹேர் ரிமூவல் க்ரீம் அல்லது ஷேவிங் மூலம் நீக்கலாம். மேலும் அக்குளில் உள்ள கருமையை மேக் அப்பின் மூலம் சரிசெய்ய முடியாது. ஆனால் ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு அக்குளை பராமரிப்பதன் மூலம் போக்க முடியும். இங்கு அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தினமும் இரவில் படுக்கும் போது அக்குளில் தடவி, காலையில் எழுந்து கழுவி வந்தால், விரைவில் அக்குளில் உள்ள கருமையைப் போக்கலாம். இந்த பகுதியில் அக்குள் கருமையை போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தயிர்

1. தயிர்

தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

2. பேக்கிங் சோடா

2. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவி, உலர வைக்க வேண்டும். இந்த முறையினாலும் அக்குள் கருமையைப் போக்கலாம்.

3. வெள்ளரிக்காய்

3. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயிலும் உருளைக்கிழங்கில் உள்ளது போன்ற ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அத்தகைய வெள்ளரிக்காயை தினமும் வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும் அல்லது வெள்ளரிக்காய் சாற்றில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

4. ஆரஞ்சு தோல்

4. ஆரஞ்சு தோல்

எலுமிச்சையைப் போன்றே ஆரஞ்சிற்கும் கருமையைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அத்துடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

5. அதிமதுரவேர்

5. அதிமதுரவேர்

அதிமதுர வேரை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதனை அக்குளின் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைக்க வேண்டும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

6. கற்றாழை

6. கற்றாழை

கற்றாலையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

7. குங்குமப்பூ

7. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து பின் நீரில் கழுவவேண்டும். இதை தினமும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி அக்குள் வெள்ளையாகிவிடும்.

8. மஞ்சள், தயிர்

8. மஞ்சள், தயிர்

இயற்கையாகவே மஞ்சள் மற்றும் தயிரில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே முகத்தில் உள்ள கருமையைப் போக்க மஞ்சளை தயிரில் கலந்து அக்குளில் தேய்த்து ஊறைவத்து கழுவினால் அக்குள் கருமையை நிச்சயம் போக்கிவிடும்.

9. தயிர் எலுமிச்சை

9. தயிர் எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

10. சந்தனப்பவுடர் பால்

10. சந்தனப்பவுடர் பால்

சந்தனப்பவுடரை பால் ஊற்றி குலைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அக்குளில் தடவி காய வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால் அக்குள் வெள்ளையாகும்.

11. கடலைமாவு, மஞ்சள், பால்

11. கடலைமாவு, மஞ்சள், பால்

கடலைமாவு, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து குளிக்கும் முன் அக்குளில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து பின் குளித்தால் அக்குள் கருமை நீங்கிவிடும்.

12. ரோஸ்

12. ரோஸ்

ரோஸ் ஒரு அருமையான மலர். இது அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த ரோஜா இதள்களை நன்றாக அரைத்து அக்குளில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருமை மறையும்.

13. வேம்பு

13. வேம்பு

சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் போக்க உதவும் பொருள் வேப்பில்லை ஆகும். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பில்லையை அரைத்து அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

14. சர்க்கரை

14. சர்க்கரை

சர்க்கரையைக் கொண்டு அக்குளைப் பராமரித்து வந்தால், சர்க்கரையானது அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். அதற்கு சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும்.

15. பேக்கிங் சோடா, ரோஸ் வாட்டர்

15. பேக்கிங் சோடா, ரோஸ் வாட்டர்

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு அக்குளை ஸ்கரப் செய்து வந்தால், அக்குள் கருமை நீங்குவதுடன், அக்குளில் இருந்து வெளிவரும் துர்நாற்றமும் நீங்கும். வேண்டுமானால், பேக்கிங் சோடாவுடன், ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்.

16. தேங்காய் எண்ணெய்

16. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் மூன்று முறை மசாஜ் செய்து வந்தால், அக்குள் கருமை நீங்கிவிடும். அதிலும் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து செய்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to remove under arms dark

How to remove under arms dark
Story first published: Friday, November 17, 2017, 9:35 [IST]