அரிசி கழுவிய நீர் எப்படி உங்களை அழகாக்கும்னு தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஆசிய பெண்களின் அழகிற்கு அரிசி தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அரிசி தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்து அளவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், போன்றவை அடங்கியுள்ளன. இந்த பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பிறந்த குழந்தையை இந்த அரிசி தண்ணீர் கொண்டு தான் குளிப்பாட்டுவார்கள்.

முகம் அழகாக தூய்மையாக இருக்க இப்பவும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த அரிசி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

How To Make Rice Water A Part Of Your Skin Care Routine

ஏன் தற்போதைய காலத்தில் கூட நிறைய பெண்கள் கெமிக்கல் பியூட்டி பொருட்களுக்கு பதிலாக அரிசி தண்ணீரை தான் பியூட்டி பொருளாக பயன்படுத்துகின்றனர்.

இந்த பொருளை வெவ்வேறு விதமாக கூட உங்கள் தினசரி பியூட்டி முறைகளில் பயன்படுத்தி கொள்ளலாம்.

எனவே எப்படி இந்த அரசி தண்ணீரை உங்கள் பியூட்டி பராமரிப்புக்கு பயன்படுத்தலாம் என்பது பற்றி தமிழ் போல்டு ஸ்கை இங்கே கூற உள்ளது.

இந்த முறைகளை பின்பற்றி உங்கள் கனவு சருமத்தை பெற இயலும். எனவே ட்ரை பண்ணி பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் க்ரீன் டீ

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் க்ரீன் டீ

2 டேபிள் ஸ்பூன்அரிசி தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இவற்றை கலந்து முகத்தை கழுவ வேண்டும். பிறகு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் பொலிவான சருமத்தை பெறலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் ரோஸ் வாட்டர்

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் ரோஸ் வாட்டர்

முகத்தில் உள்ள வெயிலினால் ஏற்பட்ட கருமை போன்றவற்றை போக்க 2-3 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த ஹோம்மேடு டோனர் கலவையை உங்கள் முகத்தில் அப்ளே செய்யும் போது உங்கள் முகத்தில் உள்ள மாசுக்கள், தூசிகள் போன்றவற்றை நீக்குகிறது. இந்த ஸ்பெஷல் டோனரை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் தூய்மையான மாசுக்கள் இல்லாத முகத்தை பெறலாம்.

 அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேன்

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேன்

1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு என்ற முறையில் இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் எல்லாம் மறைந்து மாசு மருவற்ற முகத்தை பெறலாம்.

 அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல்

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல்

2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இப்படி அரிசி தண்ணீரை பயன்படுத்தும் போது மிருதுவான மென்மையான சருமத்தை பெறலாம். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் மில்க் பவுடர்

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் மில்க் பவுடர்

ஒரு பெளலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கலக்கவும். நன்றாக கலந்து பேஸ்ட் மாதிரி ஆக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் சரும டேனை போக்குகிறது.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் லெமன் ஜூஸ்

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் லெமன் ஜூஸ்

4 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் மற்றும் 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் இவற்றை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் பொலிவற்ற சருமத்தை ஜொலிக்க வைத்து விடும்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய்

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய்

ஒரு பெளலில் வெள்ளரிக்காயை நறுக்கி எடுத்து கொள்ளவும். பிறகு அதை நன்றாக மசித்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீரை சேர்க்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமம் பொலிவாகி புதுப் பொலிவுடன் காணப்படும்.

 அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சந்தன பொடி

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சந்தன பொடி

1 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் மற்றும் 1 டீ ஸ்பூன் சந்தனப் பொடி இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும். இதை அப்படியே உங்கள் முகம் மற்றும் கழுத்தில் பேக் போட்டு அப்படியே 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும்.

இந்த ஸ்பெஷல் பேக் முகத்தில் உள்ள சுருக்கங்கள், சரும கோடுகள் போன்றவற்றை போக்குகிறது. இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் வயதான சரும பிரச்சினைகள் மாறி என்றும் இளமையான அழகான சருமத்தை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Make Rice Water A Part Of Your Skin Care Routine

How To Make Rice Water A Part Of Your Skin Care Routine
Story first published: Tuesday, December 19, 2017, 20:01 [IST]