For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் காணாமல் போகும் தெரியுமா?

தேமலை எளிதாக மறைய வைப்பது எப்படி

By Lakshmi
|

தேமல் என்பது இன்று பலரையும் தாக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் எந்த சோப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை உடனடியாக வாங்கி பயன்படுத்துவது என்பது தேமல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உடலுக்கு சோப்பை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை குறைந்தது, வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொள்ளுங்க. இந்த குளியல் பொடியை தினமும் உபயோகித்தாலும் நன்மை தான்...

ஆனால், இன்று நறுமணம் தரும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எனவே முடிந்தவரையில் வாரத்தில் இரண்டு தடவைகளாவது சோப்புக்கு பதிலாக இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்துங்கள். மேலும் தினமும் இரவு தூங்கும் போது உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகரிப்பதும் கூட சரும நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.

சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை.. உங்களது வீட்டின் அருகிலேயே இருப்பவை தான்... இந்த பகுதியில் தேமலுக்கான சில நாட்டுமருத்துவ குறிப்புகளை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பூவரச காய்கள்

1. பூவரச காய்கள்

பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் காணும் தேமல் அகலும்.

2. அருகம்புல்

2. அருகம்புல்

அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.

3. நாயுருவி இலை

3. நாயுருவி இலை

நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இந்த நாயுருவி இலையானது எளிதாக கிரமாப்புறங்களில் கிடைக்க கூடியது. அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. ஆரஞ்சு தோல்

4. ஆரஞ்சு தோல்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும். எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.

5. நன்னாரி வேர்

5. நன்னாரி வேர்

நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறையும்.

6. எலுமிச்சை தோல்

6. எலுமிச்சை தோல்

எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.

7. மஞ்சள்

7. மஞ்சள்

மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும் . துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

8. துளசி இலை

8. துளசி இலை

சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் குறையும். மேலும், சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.

9. கீழாநெல்லி

9. கீழாநெல்லி

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

10. தொட்டாற்சுருங்கி

10. தொட்டாற்சுருங்கி

தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.

11. கருங்சீரகம்

11. கருங்சீரகம்

கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

12. தேங்காய் எண்ணெய்

12. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் (200 மிலி), தேன் மெழுகு (15 கிராம்), தேன் (20 மிலி). எண்ணெயை சூடு செய்து மெழுகை இட்டு நன்கு உருகியவுடன், தேனையும் அதில் கலந்து ஆறவிடவேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.

13. பூவரசு இலை

13. பூவரசு இலை

பழுத்த பூவரசு இலை, வேப்பங் கொழுந்து, பொன்னாவரைப் பூ, குப்பைமேனி இலை, இலவம் இலை (இலவம் பஞ்சு மர இலை) கார்போக அரிசி, கருஞ்சீரகம் இதையெல்லாம் சம அளவு எடுத்து ஒண்ணாச் சேர்த்து அரைத்து தேமல் இருக்குற இடத்துல தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிக்கணும்.

14. முட்டையின் வெள்ளைக்கரு

14. முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப் பிஞ்சு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்தும் தடவலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

15. ஆடு தீண்டாப்பாளை

15. ஆடு தீண்டாப்பாளை

ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

16. வசம்பு

16. வசம்பு

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும். குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது. வேப்பிலைகளை அரைத்துத் தேமல் மீது தடவிவர தேமல் குறையும்

17. குப்பை மேனி கீரை

17. குப்பை மேனி கீரை

குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

18. மணத்தக்காளி கீரை

18. மணத்தக்காளி கீரை

கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும்

19. பூண்டு

19. பூண்டு

உடம்பில் தேமல் அதிகம் இருப்பவர்கள், வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து, மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து, குளித்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதுதான் பக்கவிளைவு இல்லாத எளிய மருந்து.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to get rid of skin white patches in natural way

how to get rid of skin white patches in natural way
Desktop Bottom Promotion