தாடி வச்சா தான் பெண்களுக்கு பிடிக்குமா? வேகமா தாடி வளர இத குடிச்சா போதும்!

Written By:
Subscribe to Boldsky

இப்பொழுது தாடி மீசை வைத்துக் கொள்வதும், விதவிதமான தாடி, மீசை ஸ்டைல்களை வைத்துக் கொள்வதும் தான் தற்போது டிரெண்டாக உள்ளது. ஆனால் சிலருக்கு தன் நண்பர்கள் வைத்து உள்ளது போலவே நல்ல பெரிய தாடி மீசையை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தாடி மீசையே வளராமல் இருக்கும்.

தாடி, மீசை சீக்கிரமாக வளர என்ன தான் தீர்வு உள்ளது என்பது பலரது கேள்வியாகவும், ஏக்கமாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஒரு சில ஆண்களுக்கு வயதானலும் கூட தாடி மீசை போன்றவை வளராமல் இன்னும் அரும்பு மீசையாகவே தான் இருக்கும் அவர்களுக்கு எல்லாம் தாடி மீசை சீக்கிரமாக வளர இந்த பகுதியில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன்பெருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்யை 10:1 என்ற விகிதத்தில் கலந்து அதை காட்டனில் நனைத்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் தாடி மீசை சீக்கிரமாக வளர்வதை காணலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் முடிவளர்ச்சியை தூண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நெல்லிக்காய் எண்ணெய்க்கு முடி வளர்ச்சியை தூண்டும் சக்தி உள்ளது எனவே நெல்லிக்காய் எண்ணெய்யை கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால் சீக்கிரமாக முடி வளரும்.

வெந்தய கீரை

வெந்தய கீரை

வெந்தயக்கீரையை அரைத்து அதில் சிறிதளவு நெல்லிக்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இலவங்கம் மற்றும் எலுமிச்சை

இலவங்கம் மற்றும் எலுமிச்சை

ஒரு டீஸ்பூன் பட்டை பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இது போன்று வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை பயன்படுத்தும் போது உங்களுக்கு அரிப்பு எரிச்சல் உண்டானால் இந்த முறையை தவிர்த்துவிடுவது நல்லது.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய் போலவே யூகலிப்டஸ் எண்ணெய்யும் கூட உங்களது தாடி மற்றும் மீசையின் வளர்ச்சியை தூண்ட உதவும். ஆனால் யூகலிப்டஸ் எண்ணெய்யை தனியாக பயன்படுத்த கூடாது. ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் உடன் சேர்த்து கலந்து முகத்தை மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் மையில்ட் சோப் போட்டு கழுவ வேண்டும். இதனை அடிக்கடி செய்து வந்தால் முகத்தில் தாடி நன்கு வளரும்.

 புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

அடிக்கடி ஷேவிங்

அடிக்கடி ஷேவிங்

மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், வளர்ச்சியானது அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியாக வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் அங்குள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்கள் வலுவோடு வளர்ச்சி பெறும்.

டெஸ்டோஸ்டிரோன்

டெஸ்டோஸ்டிரோன்

என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறைவாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தண்ணீர்

தண்ணீர்

உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்

தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்

ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Faster your Beard Growth Easier

How to Faster your Beard Growth Easier
Story first published: Tuesday, December 5, 2017, 16:50 [IST]
Subscribe Newsletter