For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் தூக்கி எறியும் தேங்காய் ஓட்டில் இத்தனை நன்மைகளா...?

கரித்தூளை கொண்டு பேசியல் செய்வது எப்படி

By Lakshmi
|

உங்களது சருமத்தை அழகுப்படுத்துவதற்காக நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு இருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்கு அதிகமாக பலன் கொடுக்கவில்லை என்பது போல நீங்கள் உணரலாம். இதற்கு காரணம் நீங்கள் அந்த பொருளை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான்..

எந்த ஒரு பொருளையும் நீங்கள் முறையாக பயன்படுத்தினால், மிகச்சிறந்த பலனை பெருவது என்பது உறுதி... பேசியல் செய்ய வேண்டும் என்று நீங்கள் பார்லருக்கு செல்ல பல காரணங்கள் உள்ளன. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், பருக்கள் விட்டு சென்ற தழும்புகள், முகத்தில் உள்ள வெள்ளை புள்ளிகள் போன்றவற்றை போக்கவும், முகத்திற்கு புதுப்பொலிவு தருவதற்காகவும் தான் இருக்கும்.

how to do charcoal facial step by step

ஆனால் நீங்கள் பேசியல் செய்வதற்கு நிகரான பலன் ஒரே மாஸ்க்கில் கிடைக்கும் என்றால் நீங்கள் அந்த மாஸ்க்கை பயன்படுத்த யோசிப்பீர்களா என்ன... இந்த பகுதியில் சருமத்திற்கு அதிக பலன்களை தரக்கூடிய கரித்தூள் பேஸ் மாஸ்க்கை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரித்தூள்:

கரித்தூள்:

கரித்தூள் பழங்காலமாகவே இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் நீங்கள் கூட கரித்தூளைக் கொண்டு பல் துலக்குவது பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில் இந்த கரித்தூள் உங்களது பற்களை வெண்மையாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

கரித்தூளை கொண்டு பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் இது உதவுகிறது. இதனை ஒரு முறை டிரை செய்து பார்த்தால் நீங்கள் இது உங்களது முகத்தில் செய்யும் மாயத்தை கண்டு மீண்டும் மீண்டும் டிரை செய்ய ஆசை கொள்வீர்கள்...

சரும பாதுக்காப்பில்...

சரும பாதுக்காப்பில்...

கரித்தூள் சரும பாதுகாப்பில் மிக அதிக பங்கு வகிக்கிறது. கரித்தூள் பல அழகு சாதன பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது உங்களது முகத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களால் ஆன அனைத்து வகையான மாசுக்களையும் உறிஞ்சி எடுத்து உங்களது முகத்திற்கு ஒளிரும் ஒளியை தருகிறது..

தயார் செய்யும் முறை

தயார் செய்யும் முறை

கரித்தூளை எப்படி தயார் செய்வது என்பது பற்றி முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கரித்தூளை நீங்கள் முக்கியமாக தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும்.

கடைகளிலும் கிடைக்கும்

கடைகளிலும் கிடைக்கும்

நீங்கள் கரித்தூள் தயாரிக்க எல்லாம் நேரம் இல்லை என்று கருதினால், ஆக்டிவேட்டேட் சாக்ரோல் கேப்சூல் (activated charcoal capsule) ஆன்லைன் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை வாங்கி பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

  1. 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ ( non-toxic white glue)
  2. 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள் ( தேங்காய் ஒட்டில் இருந்து எடுக்கப்பட்டது)
  3. பழைய பிரஸ்
  4. டோனர்
  5. க்ளேன்சர்
முகத்தை சுத்தம் செய்தல்

முகத்தை சுத்தம் செய்தல்

முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களது முகத்தில் க்ளேன்சரை போட்டு நன்றாக மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும். க்ளேன்சர் இல்லை என்றால், பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

மாஸ்க் தயாரித்தல்

மாஸ்க் தயாரித்தல்

மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூவையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். நான்-டாக்சிக் ஒயிட் க்ளூவிற்கு பதிலாக நீங்கள் தேன் அல்லது முல்தானி மட்டியை இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். இந்த மாஸ்க்கை அப்ளை செய்த உடன் கைகளால் தொட்டு பார்த்து அசைக்க வேண்டாம். முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.

டோனர் பயன்படுத்தவும்

டோனர் பயன்படுத்தவும்

மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும்.

பராமரிப்பு

பராமரிப்பு

இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களது முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைப்பது உறுதி...!

குறிப்பு

குறிப்பு

உங்களது முகத்தின் ஒரு சிறு பகுதியில் முதலில் அப்ளை செய்து பாருங்கள். எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டானால் இந்த மாஸ்க்கை நீங்கள் உபயோக்கிக்க வேண்டாம்.

காலம்

காலம்

இந்த மாஸ்க்கை நீங்கள் தாரளமாக வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் அத்தனையும் நீங்கி முகம் புதுப்பொலிவு பெரும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த மாஸ்க்கை அப்ளை செய்யும் போது பழைய ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். கரி ஆடைகளில் படாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் இது கரையாக படிந்து விடும்.

பார்லர்களில்...

பார்லர்களில்...

பார்லர்களில் இந்த மாஸ்க் டிரிட்மெண்டுக்காக ஆயிரக்கணக்கில் பெருகிறார்கள். நாமும் அதிக பலன் கிடைக்கிறது என்று இதனை அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம். நீங்கள் இந்த முறையை மிகக்குறைந்த செலவில் விடுமுறை நாட்களில் வீட்டிலேயே செய்து நல்ல பலனை பெறலாம். நிச்சயம் டிரை செய்து பாருங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to do charcoal facial step by step

how to do charcoal facial step by step
Desktop Bottom Promotion