ஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா? இந்த இன்ஸ்டென்ட் குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங

Written By:
Subscribe to Boldsky

நமது சருமம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில சமயம் பொலிவாக இருக்கும். சிலச் அமயம் டல்லாக அமையும். சரியான தூக்கம், களைப்பு, நீர் மற்றும் உணவு பற்றாக்குறை அகிய்வற்றால் நமது சருமத்தில் பொலிவில் மாற்றஜ் உண்டாகும்.

How to brighten your skin instantly

மற்ற சாதரணம் சமய்த்தில் நமது முகம் அழகாய் இருக்கும். ஆனால் ஏதாவது ஃபங்க்ஷனோ அல்லது விழாவோ அப்போது பார்த்து முகம் மிகவும் களையிழந்து போயிருக்கும். நாம் ஏற்படுத்திக் கொண்ட டென்ஷன்தான் இதற்கு காரணம். அந்த சமயங்களில் நீங்கல் என்ன செய்யலாம். கீழே சொன்னவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் -1

டிப்ஸ் -1

பீட்ரூட்டை சிறு துண்டு களாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட் ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங் கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும்.

டிப்ஸ்-2

டிப்ஸ்-2

கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

 டிப்ஸ்- 3 :

டிப்ஸ்- 3 :

வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண் டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.

டிப்ஸ்-4 :

டிப்ஸ்-4 :

கோதுமை மாவுடன் தயிரைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளியுங்கள். மினுமினுப்பான தேகம் பெறுவீர்கள்.

டிப்ஸ்- 5:

டிப்ஸ்- 5:

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to brighten your skin instantly

Instant remedies to get flawless skin in a few minutes,
Story first published: Tuesday, April 11, 2017, 8:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter