முகப்பரு தழும்பு மறையனுமா? இரவில் இந்த ஒரு டிப்ஸ் தினமும் செய்து பாருங்க!!

Written By:
Subscribe to Boldsky

சருமத்தில் உண்டாகும் பலப் பிரச்சனைகளில் முகப்பரு, கருமை, கரும்புள்ளி, மற்றும் தழும்புகள். இவற்றை போக்க பல வித குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம்.

How to banish your acne mark

எதுவுமே சரிவரவில்லை என்றால் உடனே நீங்கள் உபயோகப்படுத்தும் குறிப்புகளை மாற்ற வேண்டும். ஆனால் அதற்காக விதவிதமான க்ரீம்களை நீங்கள் முயற்சிக்க் கூடாது. நீங்கள் இயற்கையான ஆயுர்வேத குறிப்புகளை முயற்சிக்க வேண்டும். மாறி மாறி ஆயுர்வேத குறிப்புகளை பயனபடுத்துவதால் பிரச்சனை உண்டாகாது. மாறாக நல்ல பலன் தரும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் :

பால் :

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் சருமத்துளைகளிலிருக்கும் விடாப்பிடியான அழுக்கு வெளியேறி உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

இள நீர்

இள நீர்

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். இள நீரிலுள்ள கஞ்சியை சருமத்தில் பூசிப்பாருங்கள். சருமம் ஜொலிக்கும்.

சீரகம் :

சீரகம் :

சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

பரு தழும்பு மறைய :

பரு தழும்பு மறைய :

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு ஸ்பூன் அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுத்து அதன் பின் கழுவுங்கள். முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

வேப்பிலை :

வேப்பிலை :

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்துபொடி செய்து கொள்ளுங்கள். அதனை பாலில் குழைத்து முகத்தில் தடவி கழுவினால் வேர்க்குரு, பருக்கள், கரும்புள்ளிகள் வராமல், முகமும் கருத்துப் போகாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to banish your acne mark

Home remedies to banish your acne scars
Story first published: Friday, February 10, 2017, 10:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter