உங்க வறண்ட சருமம் பளபளன்னு மின்னனுமா? இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பொதுவாக எண்ணெய் பசை சருமத்திற்கான அழகு குறிப்புகள் தான் எங்கு பார்த்தாலும் கொடுக்கப்படுகின்றன. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பருக்கள் தொந்தரவு இருக்காது. மற்றபடி முகத்தில் அழுக்கு படிதல், வயது முதிர்ச்சி போன்ற எல்லா தொல்லைகளும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களைப்போல் இவர்களுக்கும் இருக்கும்.

Homemade scrubs for dry skin

குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் வறண்ட சமருமம் உள்ளவர்கள் மேலும் வறட்சியினால் பாதிக்கப்படுவர். அவர்களின் சருமத்தை பொலிவாக்க சில ஸ்க்ரப்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

முகத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்க்ரப்கள் அழகு சார்ந்த செயல்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்க்ரப் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகி ஆரோக்கியம் கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 காபி கொட்டை ஸ்க்ரப்:

காபி கொட்டை ஸ்க்ரப்:

காபி கொட்டைகள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கின்றன. வறண்ட சருமத்திற்கு இது ஒரு நல்ல தீர்வாகும் .

காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக சூழல் வடிவில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் தேய்த்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும். இயற்கையான முறையில் சருமம் புத்துயிர் பெற இது உதவுகிறது.

சர்க்கரை ஸ்க்ரப்:

சர்க்கரை ஸ்க்ரப்:

வெதுவெதுப்பான நீரை முகத்தில் தெளிக்கவும். மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுக்கவும். க்ளென்சிங் க்ரீமை ஒரு கிண்ணத்தில் போடவும். நைசாக அரைத்த சர்க்கரையை அதில் சேர்க்கவும். இரண்டையும் கலந்து கெட்டியான பேஸ்டை உருவாக்கவும்.

இந்த கலவையை முகத்தில் தடவவும். பின்பு சூழல் வடிவில் தேய்க்கவும். இந்த கலவை கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும். நன்றாக தேய்த்தவுடன் துணியால் அந்த கலவையை முகத்தில் இருந்து நீக்கவும். குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வறண்ட சருமத்திற்கான இந்த ஸ்க்ரப் சருமத்தில் உள்ள துளைகளை மூடி, முகத்தை பொலிவாக்கும்.

 க்ரீன் டீ மற்றும் தேன்:

க்ரீன் டீ மற்றும் தேன்:

க்ரீன் டீ வயது முதிர்வை தடுக்கும் ஒரு சிறந்த பொருள் . முகத்தில் உள்ள சுருக்கங்கள், கட்டிகள் மற்றும் தழும்புகளை போக்க இவை உதவுகின்றன.

க்ரீன் டீயை கொதிக்க வைக்கவும். அதில் 1 ஸ்பூன் டீயை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். நன்றாக கலந்து கொண்டு, தேனை சேர்க்கவும். ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை தேனுக்கு உண்டு. இந்த ஸ்கரப்பை முகத்தில் தடவவும். சில நிமிடங்கள் நன்றாக முகத்தை தேய்க்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்:

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்:

தேங்காய் எண்ணெய் உடலுக்கு சிறந்த மருந்து மற்றும் எலுமிச்சை சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வறண்ட சருமத்திற்கு எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்க்ரப்கள் நல்ல தீர்வை கொடுக்கும்.

½ கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இதனை சேர்ப்பதால் இந்த ஸ்க்ரபுக்கு சுத்தீகரிக்கும் தன்மை கிடைக்கிறது . முகத்தை நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

கடலை எண்ணெய் மற்றும் வெஜிடபிள் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

 பாதாம் ஸ்க்ரப்:

பாதாம் ஸ்க்ரப்:

பாதாம் சிலவற்றை எடுத்து அரைத்து கொள்ளவும். 1 கப் அரைத்த பாதாமுடன், சிறிது பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.

இதனுடன் எலுமிச்சை சாறு, ரோஜா எண்ணெய், லவெண்டேர் எண்ணெய் போன்றவற்றில் எதாவது ஒன்றை நறுமணத்திற்காக சேர்க்கலாம். பின்பு இந்த கலவையை முகத்தில் தடவவும். சூழல் வடிவில் சில நிமிடங்கள் தேய்த்த பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும்.

இந்த குறிப்புகளை செய்வதற்கு எளிமையாக இருக்கும். பலனும் அருமையாக இருக்கும். முயற்சித்து பாருங்கள். ஸ்க்ரப் செய்து முகத்தை கழுவியவுடன் முகத்தில் ஒரு பொலிவை நிச்சயம் உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade scrubs for dry skin

Homemade scrubs for dry skin
Story first published: Tuesday, October 10, 2017, 20:30 [IST]