For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்திலுள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்கான கைவைத்தியங்கள்!!

முகத்திலுள்ள கரும்புள்ளிகளை போக்க வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு எப்படி வைத்தியம் செய்யலாம் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

சரும அழகை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து கொன்டே இருக்கிறோம். பலரும் பாதிக்க படக்கூடிய சரும பிரச்னை, கரும் புள்ளிகள்.

சரும துளைகளில் ஏற்படும் அடைப்பு மற்றும் இறந்த செல்கள் சருமத்தின் மேல் பகுதியில் படர்தல் போன்றவை கரும் புள்ளிகளுக்கு காரணமாகின்றன. அவை எளிதில் சருமத்தை விட்டு போவதில்லை.

Homemade recipes to treat blackheads

அதனை கைகளால் கிள்ளும் போது அடுத்த இடங்களிலும் பரவுகிறது. கிள்ளிய இடத்தில தழும்புகள் தோன்றுகிறது. இவற்றை போக்கும் முறைகளை பற்றியதுதான் இந்த தொகுப்பு.

இந்த கரும்புள்ளிகளை போக்க சந்தையில் பல விலை உயர்வான க்ரீம்கள் விற்கப்படுகின்றன. இதனால் வலி தான் மிஞ்சும். பலன்கள் பெரிதாக கிடைப்பதில்லை. இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொன்டே கரும் புள்ளிகளை அகற்றுவதற்கான வழிகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பணமும் நேரமும் மிச்சமாகும். பலனும் விரைவில் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டை தூள் மாஸ்க்:

பட்டை தூள் மாஸ்க்:

ம்புள்ளிகள் தொடர விடாமல் செய்கிறது. பட்டை உடலுக்கு வறட்சியை ஏற்படுத்தும் என்பதால் அதனுடன் ஈரப்பதத்தை கொடுப்பதற்காக தேன் சேர்க்கப்படுகிறது.

செய்முறை:

1 ஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளவும்.

இரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தில் மெல்லிய படலமாக தடவவும்.

ஒரு காட்டன் துணியை எடுத்து மென்மையாக முகத்தில் அழுத்தவும்.

10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.

பின்பு துணியை எடுத்துவிட்டு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

 முட்டை மாஸ்க்:

முட்டை மாஸ்க்:

சருமத்தை இறுக்கமாக மாற்ற முட்டை மாஸ்க் நல்லது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றி மேலும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தடுக்கிறது. முட்டையில் உள்ள புரதச்சத்தும் மற்ற மினரல்களும் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

செய்முறை:

முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொள்ளவும்.

வெள்ளை கருவை உங்கள் முகத்தில் தடவவும்.

நன்றாக காய விட்டு, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நேரில் முகத்தை கழுவவும்.

முட்டையுடன் தேன் அல்லது எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ளலாம்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீ ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் பல்லூட்டச்சத்துகள் நிறைந்தது. இவை கரும்புள்ளிகளை நீக்க வல்லமை கொண்டவை. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க க்ரீன் டீ உதவுகிறது.

செய்முறை:

க்ரீன் டீ இலைகளளை நன்றாக தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த இலைகள் இல்லாவிட்டால் க்ரீன் டீ பைகளை கொதிக்கும் நீரில் 1 மணி நேரம் போடவும்.

அந்த நீரை வடிகட்டி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

சற்று நேரம் கழித்து, அந்த நீரில் ஒரு பஞ்சை முக்கி எடுக்கவும்.

கரும்புள்ளிகள் உள்ள இடத்தில அந்த பஞ்சை வைக்கவும்.

20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ஓட்ஸ் மாஸ்க் :

ஓட்ஸ் மாஸ்க் :

இறந்த செல்லகளை நீக்கும் ஒரு ஸ்க்ரப் இந்த ஓட்ஸாகும். பாக்டீரியாவை நீக்கி, அதிக எண்ணெய்யை வெளியேற்றுகிறது. எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.

செய்முறை:

2 ஸ்பூன் ஓட்ஸுடன் 3 ஸ்பூன் தயிர் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் நன்றாக தடவவும்.

10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

தக்காளி மாஸ்க்:

தக்காளி மாஸ்க்:

ஞ்சி சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

செய்முறை:

தக்காளியை எடுத்து விழுதாக்கி, கரும்புள்ளிகளில் தடவவும்.

15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

வறண்ட சருமமாக இருந்தால், தக்காளியுடன் , சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சருமம் மென்மையாகும்.

இந்த மாஸ்குகளை பயன்படுத்துவதற்கு முன், ஆவியில் முகத்தை காண்பிப்பதால், துளைகள் திறக்கும். எளிதில் கரும்புள்ளிகள் அகலும்.

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை போக்க முயற்சிக்கும்போது உடனடி பலன்கள் கிடைக்காது தொடர் சிகிச்சை நல்ல பலனை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade recipes to treat blackheads

Homemade recipes to treat blackheads
Story first published: Friday, September 22, 2017, 17:26 [IST]
Desktop Bottom Promotion