For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 லேயே வயதான முகம் வந்துவிட்டதா? உடனடியாக நீங்க ஆரம்பிக்க வேண்டிய குறிப்பு இது!!

30 களில் சதை தொய்ந்தால் வயதான தோற்றம் கிடைக்கும். அதனை தவிர்க்க என்ன மாதிரியான குறிப்புகளை நாம் கையாளலாம் என இந்த கட்டுரையில் காணலாம்.

By Hemalatha
|

பெரும்பாலும் பெண்கள் 30 வயதை கடந்தவுடன் பெரிதாக சதை தொய்வு இருக்காது. அதனால் அப்போது கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல முகத்தில் சதை தொய்வு லேசாக ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் கவலை கொள்வோம். 35 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும்.
அதன் பின் அடுத்த பெண்களுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

அழகுணர்ச்சி என்பது எல்லார்க்கும் இருக்க வேண்டியதுதான். அது தவறில்லை. மணமான பின் எதற்கு என்று அப்படியே விடும்போது விரைவில் முதிர்ச்சி கொண்டு தாழ்வு மனப்பான்மை சிலருக்கு உண்டாகிறது.

சதை தொய்வை தடுக்க

இதனை தடுக்க சிம்பிளாக நீங்கள் செய்ய வேண்டியது... வரும் முன் காப்போம்!!

சரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

முல்தானி மட்டி -ம 1 கப்

1 ப்ளாக் டீ பேக் - 1

ஆலிவ் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

காபித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்

ஹாஜல் நட் சாறு- 10 துளிகள்.

ஒரு கிளாஸ் கிண்ணம்.

ஸ்டெப் -1 :

ஸ்டெப் -1 :

நீரை சுட வைத்து அதில் ப்ளாக் டீ பேக்கை போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு அதன் பின் அந்த நிறம் மாறிய நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் - 2 :

ஸ்டெப் - 2 :

இந்த நீரில் முல்தானி மட்டியை சிறிது சிறிதாக கட்டியாகாமல் கலக்க வேண்டும். அது முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்குங்கள்.

ஸ்டெப் - 3 :

ஸ்டெப் - 3 :

இந்த கலவையில் காபித் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஹாஜல் நட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து க்ரீம் போல் பதத்திர்கு கொண்டு வாருங்கள்.

ஸ்டெப் - 4 :

ஸ்டெப் - 4 :

மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது டீ டிகாஷனையோ அல்லது ஆலிவ் எண்னெயையோ ஊற்றிக் கொள்ளலாம்.

ஸ்டெப் - 5 :

ஸ்டெப் - 5 :

இந்த கலவையை உங்கள் முகம், வயிறு, கழுத்து மற்றும் தொங்கும் சதையுள்ள கைகளுக்கும் போட வேண்டும்.

ஸ்டெப் - 6 :

ஸ்டெப் - 6 :

20 நிமிடங்கள் காய வைத்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பின்னர் மிருதுவான துண்டினால் துவட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தாலும் உடனே மாய்ஸ்ரைசர் க்ரீன் போட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் தெங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

ரிசல்ட் :

ரிசல்ட் :

இவ்வாரு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் மீண்டும் உங்கள் இருபதுகளில் இருப்பது போல் மாறிவிடுவீர்கள். பயன்படுத்திப் பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைத்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

பின்பற்றவேண்டியவை :

பின்பற்றவேண்டியவை :

முகத்திற்கு தினமும் எண்ணெய் தடவுவது கட்டாயமாகும். அதுவும் 30 வயது ஆரம்பித்தவுடன் முகத்தில் வறட்சி ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade cream to use in 30s to prevent saggy skin

Homemade cream to use in 30s to prevent saggy skin
Story first published: Monday, November 6, 2017, 18:02 [IST]
Desktop Bottom Promotion