கருவளையங்களை போக்க மேக்கப் மட்டும் போதாது..! இதுவும் வேணும்!

Written By:
Subscribe to Boldsky

கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் உங்களது முகம் மிகவும் பொலிவிழந்து, சோர்வாக காணப்படும். இது முகத்தில் ஒரு குறையாகவே தெரியும். என்ன தான் முகம் அழகாக இருந்தாலும் கூட, இந்த கருவளையங்கள் உங்களது முகத்தின் அழகை கெடுத்து விடும் தன்மை கொண்டது. இந்த கருவளையங்கள், ஒரு சிலருக்கு மரபு ரீதியாக உருவாகலாம். உடலில் ஏதேனும் சத்து குறைபாடு இருந்தாலும் உண்டாகலாம். அல்லது இரவு தூங்காமல் இருப்பது, அதிக நேரம் கண் விழித்து படிப்பது, கணினி, செல்போன் போன்றவற்றை பார்ப்பது, மன அழுத்தம் போன்றவற்றினால் உண்டாகலாம். இதற்காக நீங்கள், வெறும் மேக்கப் மட்டும் செய்தால் போதாது. சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரி

வெள்ளரி

உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் பலன்.

டீ பேக்

டீ பேக்

உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக இருந்தால் இன்னும் சிறப்பு.

உடனடி மாற்றத்திற்கு...

உடனடி மாற்றத்திற்கு...

கார்போக அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.

சாமந்திப்பூ

சாமந்திப்பூ

2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை நீக்கும்.

தாமரை

தாமரை

பிங்க் நிற தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.

காய்கறிகள்

காய்கறிகள்

முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

மேக்கப்

மேக்கப்

கண்களுக்குப் போடுகிற எந்த மேக்கப்பையும் நீக்காமல் தூங்கக் கூடாது. மேலும் கண்களுக்கு உபயோகப்படுத்தும் மேக்கப் பொருட்கள் கட்டாயமாக தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியம்.

நைட் க்ரீம்

நைட் க்ரீம்

இரவில் கண்களுக்கடியில் தரமான நைட் க்ரீம் தடவிக் கொள்ளலாம். அண்டர் ஐ க்ரீம் போன்றவற்றையும் கண்களுக்கு பயன்படுத்தலாம்.

பன்னீர்

பன்னீர்

சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்கு குளிர்ச்சியை தரும். இயற்கையான பன்னீரை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உணவில்..

உணவில்..

வைட்டமின் சி சத்துள்ள தக்காளி, மாங்காய், கொய்யா, குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகளவில் சேர்க்க வேண்டும். வைட்டமின் சி சத்து உடலில் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வேறு ஏதேனும் உடல் நலக் கோளாறு காரணமாக கண்களுக்கடியில் கருவளையம் வராமலிருக்கவும் இது உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies for under eye dark circles

Home Remedies for under eye dark circles
Story first published: Saturday, November 4, 2017, 11:21 [IST]