அடர்த்தியான புருவம் கிடைக்க இந்த வழிகளை உபயோகிச்சு பாருங்க!!

By: Siva lingam
Subscribe to Boldsky

முகத்தின் பொலிவிற்கும், முகத்தை பளிச்சென வைத்திருப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது கண்ணின் புருவம்தான். ஒருசிலருக்கு இந்த புருவம் மிகவும் மெல்லியதாகவும், சிலருக்கு பெரிய புருவமும் இருக்கும். இந்த புருவத்தை இயற்கை பொருட்களின் மூலம் பெரிதாக்கவும், கவர்ச்சியாக்குவதும் எப்படி? என்பது குறித்து பார்ப்போம்

முகத்தின் மொத்த அழகில் மிகப்பெரிய பங்கு புருவத்திற்கு உண்டு. புருவத்திலும் கண்ணிலும் மை இட்டால் போதும், முகம் மிகப்பெரிய வித்தியாசத்தை பெற்றுவிடும். அதிலும் பெரிய புருவங்கள் இருப்பவர்கள் இளமையுடன் தோன்றுவார்கள்.

home remedies for fuller eyebrows

இதனால் மெல்லிய புருவம் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஒருசில இயற்கை பொருட்களான பொருட்களை பயன்படுத்தி வந்தால் போதும் அனைவரையும் போல பெரிய புருவத்தை பெற்று அழகை அதிகரித்து கொள்ளலாம்.

கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் புருவமும், முகமும் ஜொலிக்கும் என்பது நிச்சயம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 1. முட்டை:

1. முட்டை:

முட்டையில் இயற்கையிலேயே புரோட்டீன் அதிகம் உள்ளதால் இந்த புரோட்டீன்கள் நமது உடலில் புருவம் உள்பட அனைத்து பகுதிகளிலும் முடிகள் அடர்த்தியாக வளர உதவுகின்றன.

ஒரே ஒரு முட்டையை உடைத்து நன்றாக கலக்கி இரண்டு புருவங்களிலும் தடவி அதன் பின்னர் இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதேபோல் வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். கவர்ச்சியான புருவங்களை பெறலாம்

 2. தேங்காய் எண்ணெய்:

2. தேங்காய் எண்ணெய்:

தொடர்ச்சியாக தேங்காய் எண்ணெய் தலையில் தேய்த்து வருபவர்களுக்கு முடி கொட்டுதல் என்ற பிரச்சனையே வராது. அதேபோல் தான் புருவ முடியும்.

இரண்டு புருவங்களிலும் தேங்காய் எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்வது போல் செய்ய வேண்டும். அதன் பின்னர் இரவு முழுவதும் அதை விட்டுவிட்டு காலை எழுந்தவுடன் குளித்தால் போதும், புருவத்தின் முடி அடர்த்தி ஆகிவிடும்

 3. வெங்காய சாறு:

3. வெங்காய சாறு:

வெங்காய சாற்றில் சல்பர் நிரம்பி உள்ளதால், இந்த சல்பர் முடி வளர்வதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். வெங்காயத்தை கட் செய்து அதனை புருவத்தில் நன்றாக தேய்க்க வேண்டும்.

வெங்காய சாறு புருவத்தில் நன்றாக படும்படியாக ஒரு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து தேய்த்துவிட்டு பின்னர் மெல்லியதான கிளீசரின் கொண்டு முகத்தை கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அழகிய புருவங்களை பெறலாம்

 4. ஆமணக்கு எண்ணெய்:

4. ஆமணக்கு எண்ணெய்:

வீட்டில் தயார் செய்யும் புருவ வளர்ச்சிக்கு உதவும் மிக எளிய பொருள் ஆமணக்கு எண்ணெய். ஆமணக்கு எண்ணெயை ஒரு பஞ்சில் கொஞ்சம் ஊற்றி பின்னர் அதை கண்புருவத்தில் பூசி சிறிய அளவில் மசாஜ் செய்ய வேண்டும்.

ஆமணக்கு எண்ணெயில் உள்ள நன்மை செய்யும் அமிலங்கள் கண் புருவத்தின் வளர்ச்சிக்கு நல்ல நன்மருந்தாகும்

5 சோற்றுக் கற்றாழை:

5 சோற்றுக் கற்றாழை:

சோற்று கற்றாழையில் உள்ள என்சைம்கள் புருவத்தின் முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர பெரிதும் உதவி செய்யும். கடைகளில் விற்கும் சோற்று கற்றாழை ஜெல் வாங்கி புருவத்திற்கு பயன்படுத்துவதை விட வீட்டிலேயே சோற்று கற்றாழை வாங்கி ஜெல் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

8. எலுமிச்சை:

8. எலுமிச்சை:

கடைசியாக புருவத்தின் அடர்த்திக்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்வது எலுமிச்சைதான். தொடர்ச்சியாக எலுமிச்சை சாறு குடித்து வந்தால் அதில் உள்ள வைட்டமின் C மற்றும் வைட்டமின் B கண்புருவ முடி வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

home remedies for fuller eyebrows

home remedies for fuller eyebrows
Story first published: Tuesday, January 10, 2017, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter