Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
பாத வெடிப்பை விரைவில் போக்க வேண்டுமா? ஈஸியான வழிகள்!!
பாத வெடிப்பு அடிக்கடி வரும். குளிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். வலியையும் ஏற்படுத்தும். அதனை குணப்படுத்த இங்கே எளிய வழிகள் சொல்லப்பட்டுள்ளன.
பித்த வெடிப்பை நம்மீது நல்ல மதிப்பை அடுத்தவ்ருக்கு பெற்று தராது. நம்முடைய ஒரு அலட்சிய போக்கையே காண்பிக்கும். பித்த வெடிப்பு அழகை குறைத்து காண்பிப்பதோடு ஆரோக்கியமற்ற சூழ் நிலையையே எடுத்துக் காட்டுகிறது.

வெடிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் காத்திட முடியும். அதுபோல் வேகமாக மறையச் செய்து விட முடியும். எப்படி என பார்க்கலாம்.

அரிசி மாவு :
சிறிது அரிசி மாவில் தேன், ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து பேஸ்ட் போல்ச் செய்து கொள்ளுங்கள். அதனை பாதங்களில் தேய்த்து 10 நிமிடம் ஊறிய பின் கழுவினால் மிருதுவான பாதம் கிடைக்கும்

வேசலின் :
வேசலின் அல்லது வேற பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து அதனுடல் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தேய்த்து கழுவவ வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் வெடிப்பு மறைந்துவிடும்.

வாழைப் பழம் :
வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது தேன் கலந்து பாதத்தில் த்டவுங்கள். காய்ந்ததும் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் பாத வெடிப்பு மறைந்துவிடும்.

ஓட்ஸ் மற்றும் ஜொஜொபா எண்ணெய் :
ஓட்ஸை மசித்து அதில் ஜொஜொபா எண்ணெய் கலந்து பாதங்களில் த்டவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும்.

வெஜிடேபிள் எண்ணெய் :
தினமும் இரவு தூங்குவதற்கு முன் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்யுங்கள். பின் சாக்ஸ் அணிந்து தூங்கச் செல்லுங்கல். வெடிப்புகள் விரைவில் மறைந்து பாதங்கள் மென்மையாவது உறுதி



Click it and Unblock the Notifications
