For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்!

வீட்டிலேயே தலைமுடிக்கான எண்ணெய் தயார் செய்வது எப்படி

By Lakshmi
|

தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது நாம் தினசரி அனுபவித்து வரும் ஒன்றாகும். தலையில் உண்டாகும் சில பிரச்சனைகளால் இந்த முடி உதிர்தல் உண்டாகிறது. தலைமுடி உதிர்தல் பிரச்சனையானது, தலையில் உள்ள பொடுகுகளாலும் உண்டாகலாம். தலையில் உள்ள பொடுகுகளானது வெளியில் உள்ள தூசி, புகை போன்ற அழுக்குகள் தலையில் படிவதால் உண்டாகின்றன. இந்த பொடுகுகள் தலைமுடிகளை உதிரச் செய்வதோடு மட்டுமின்றி, முகத்தில் பருக்களையும் தோற்றுவிக்கின்றன.

தலையில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தனித்தனியாக மருந்து வாங்கி பயன்படுத்துவது என்பது கடினமான ஒன்றாகும். நீங்கள் சந்தைகளில் வாங்கி பயன்படுத்தும் எண்ணெய்களில் என்னென்ன கலந்திருக்கும் என்பது பற்றி உங்களுக்கு முழுதாக தெரியாது.. சிலருக்கு கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவது பிடிக்காமலும் இருக்கும். ஆனால் நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி இந்த இயற்கையான கூந்தல் தைலத்தை தயார்ப்படுத்தி வைத்து விட்டால், தினசரி உங்களது கையால் தயாரிக்கப்பட்ட இயற்கை எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

இந்த பகுதியில் தலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும், இயற்கையான மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தல் தைலம் 1:

கூந்தல் தைலம் 1:

தேங்காய் எண்ணெய் பழங்காலமாக முடி வளர்ச்சியை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதோடு கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி போன்றவை முடியின் வளர்ச்சியை தூண்டவும், தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

தேவையான பொருட்கள் :

தேவையான பொருட்கள் :

  1. தேங்காய் எண்ணெய் - 50 கிராம்
  2. ஆலிவ் எண்ணெய் - 50 கிராம்
  3. பாதாம் எண்ணெய் - 50 கிராம்
  4. வைட்டமின் எண்ணெய் - 50 கிராம்
  5. கடுகு எண்ணெய் - 50 கிராம்
  6. நல்லெண்ணெய் - 50 கிராம்
  7. கரிசலாங்கண்ணித் தைலம் - 50 கிராம்
  8. பொன்னாங்கன்னித் தைலம் - 50 கிராம்
  9. மருதாணித் தைலம் - 50 கிராம்
  10. வேம்பாலம் பட்டை - 50 கிராம்
  11. சூரியகாந்தி எண்ணெய் - 50 கிராம்
பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த கலவைகளை நன்கு கலந்து, மிதமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் அவ்வப்போது தேய்த்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும். இதில் சில குறிப்பிட்ட பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக கிடைக்கும்.

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

கூந்தல் தைலம் 2:

கூந்தல் தைலம் 2:

நெல்லிக்காயை பாலில்வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாகும்.

டீ டிகாஷன் :

டீ டிகாஷன் :

டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சபழச்சாறு கலந்து தலையில்தேய்த்து குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

கூந்தல் தைலம் 3:

கூந்தல் தைலம் 3:

கறிவேப்பில்லையை உணவில் சேர்த்துக் கொண்டாலும் முடி கருமையாக வளரும், செம்பருத்தி முடியை மிருதுவாக்க உதவுகிறது. வெந்தயம் இயற்கையாக முடியை சுத்தம் செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

  1. கறிவேப்பிலை - 2 கை அளவு,
  2. செம்பருத்தி இலை - 1 கை அளவு,
  3. மருதாணி இலை - 1 கை அளவு,
  4. செம்பருத்தி பூ - 5,
  5. நெல்லிக்காய் - 2,
  6. வெந்தயம் - 1 தேக்கரண்டி.,
  7. தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்.
கூந்தல் தைலம் 4:

கூந்தல் தைலம் 4:

கற்றாழை உங்களது உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகளை நீக்க கற்றாழை பயன்படுகிறது. கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றன.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை.
  2. படிகாரம்
  3. நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.
செய்முறை:

செய்முறை:

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.

சாப்பிட வேண்டியவை

சாப்பிட வேண்டியவை

முடி வளர்ச்சிக்கு வெறும் கூந்தல் தைலங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தால் போதாது.. உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். எனவே நீங்கள் கீரை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், காய்ந்த திராட்சைபழம் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Made hair oil for all type of hair problems

Home Made hair oil for all type of hair problems
Story first published: Monday, November 6, 2017, 14:39 [IST]
Desktop Bottom Promotion