திராட்சை இந்த பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?

Written By:
Subscribe to Boldsky

நீங்கள் முகத்திற்கு ஏராளமான பொருட்களை உபயோகப்படுத்தியிருப்பீர்கள் ஆனால் என்றாவது திராட்சையை உங்களது முகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறீர்களா? இந்த திராட்சையை தான் பழங்காலமாக அழகிற்காக பயன்படுத்தி வந்தார்கள்.. இந்த திராட்சையில் அழகை பாதுகாக்கும் விட்டமின் சி நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஏராளமான அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகளும் நிறைந்துள்ளன.

எனவே இந்த திராட்சையை பயன்படுத்தினால், நீங்கள் அழகான மற்றும் ஜெலிக்கும் சருமத்தை பெறுவதோடு மட்டுமின்றி, உங்களது சருமத்தினை சுருக்கங்கள், கரும்புள்ளிகள், கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கலாம். இந்த பகுதியில் திராட்சையை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன்பெருங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. திராட்சை மற்றும் யோகார்ட்

1. திராட்சை மற்றும் யோகார்ட்

இரண்டு மூன்று கருப்பு திராட்சைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் யோகார்ட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளுங்கள். இதனை நன்றாக கலந்து கழுத்து மற்றும் முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இந்த மாஸ்க்கை தினசரி உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

2. முல்தானிமெட்டி

2. முல்தானிமெட்டி

சில திராட்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை ஸ்மூத்தான பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் ஆகிவற்றை கலந்து முகத்திற்கு அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து இதனை ரிமூவ் செய்து விடுங்கள். இதனால் உங்களது முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

3. கேரட் மற்றும் திராட்சை

3. கேரட் மற்றும் திராட்சை

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு திராட்சை பேஸ்ட், க்ரீம், அரிசி மாவு மற்றும் கேரட் சாறு போன்றவற்றை எடுத்து அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்திற்கு மற்றும் கழுத்துக்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவுங்கள். இது உங்களது முகத்தை இறுக செய்யும். சருமத்தில் உள்ள துளைகளை நீங்கும்.

4. தேன் மற்றும் திராட்சை

4. தேன் மற்றும் திராட்சை

தேன் மற்றும் திராட்சையை எடுத்து நன்றாக குழைத்து ஸ்மூத் பேஸ்ட்டாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுகள். இது உங்களது முகத்தை பளிச்சென்று மாற்றும்.

5. மசாஜ்

5. மசாஜ்

சில திராட்சைகளை எடுத்து அதை நேரடியாக உங்களது முகத்தில் வைத்து மசாஜ் செய்யுங்கள். அல்லது திராட்சையை மட்டும் அரைத்து முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். இதனால் உங்களது முகம் பளிச்சிடும்.

6. பப்பாளி

6. பப்பாளி

திராட்சை மற்றும் பப்பாளியை ஒன்றாக அரைத்து முகத்திற்கு மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

7. சீஸ்

7. சீஸ்

சிறிதளவு சீஸை எடுத்து அதனுடன் ஒரு சில திராட்சைகளையும் கலந்து முகத்திற்கு மாஸ்க்காக போடுங்கள் இவ்வாறு செய்வதால் உங்களது முகம் பளிச்சென்று இருக்கும்.

8. ஆரஞ்ச்

8. ஆரஞ்ச்

ஆரஞ்ச் ஜூஸ் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவு திராட்சை சாறையும் கலந்து உங்களது முகத்தில் தடவுங்கள் இதனால் உங்களது முகம் பொலிவு பெரும்..

9. பேக்கிங் சோடா

9. பேக்கிங் சோடா

சிறிதளவு பேக்கிங் சோடா, சிறதளவு கோதுமை மாவு மற்றும் சிறிதளவு திராட்சை போன்றவற்றை ஒன்றாக கலந்து உங்களது முகத்திற்கு பேக் போல போடுங்கள். இது உங்களது முகத்தின் அழகை மெருகேற்றும்.

10. புதினா

10. புதினா

சிறிதளவு புதினா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சில திராட்சைகளை எடுத்து எலுமிச்சை சாறையும் உடன் சேர்த்து நன்றாக கலந்து உங்களது முகத்திற்கு பேக் போடுங்கள் இதனால் பளிச்சிடும் முகத்தை நீங்கள் எளிதாக பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbal Beauty Benefits of Grapes

Herbal Beauty Benefits of Grapes