Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
அழகை கெடுக்கும் இந்த கரும்புள்ளிகளை போக்குவது எப்படி? சூப்பர் டிப்ஸ்!
கரும்புள்ளிகளை போக்க சில அழகுக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன
கரும்புள்ளிகள் முகத்தில் இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. முகப்பருக்களை கிள்ளுவதால் இந்த கரும்புள்ளிகள் வருகின்றன. க்ரீம்கள் இதனை போக்க உதவினாலும், ஒரு சிலருக்கு க்ரீம்கள் சரியாக வராது. ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதுமட்டுமின்றி அதிகளவு க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இந்த பகுதியில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவது என்பது பற்றி காணலாம்.

1. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

2. வெந்தய கீரை
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

3. தயிருடன் எலுமிச்சை
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

4. சர்க்கரை மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

5. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கய வைத்து பின்பு கழுவ வேண்டும். இதில் உள்ள பிளிச்சீங் தன்மை முகத்தில் உள்ள கருமைகளை மறைக்கிறது.

6. எலுமிச்சை தேன்
வெயிலில் சுற்றி திரிவதனால் உங்கள் முகம் கருப்பாகி விட்டதா அதை வெள்ளையாக்க எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் மிருதுவாகும்.

7. பால், சந்தனம்
பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். வாரத்தில் மூன்று முறை செய்தால் போதுமானது.

8. முல்தானி மெட்டி
முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் தழும்புகள் மறையும்.

9. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் சிறிது லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைய தோன்றும்.



Click it and Unblock the Notifications
