For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கைகள் பட்டு போல இருக்கனுமா? இதோ சூப்பரா சின்ன சின்ன டிப்ஸ் !!

மிருதுவான பட்டுப் போல கைகள் பெற இந்த கட்டுரையில் எளிய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. படித்து பயன்பெறுங்கள்.

By Ambika Saravanan
|

அலுவலகத்தில் செக்ரெட்டரி வராதபோது முதலாளிகளுக்கு கை உடைந்தது போல் இருக்கும். அதாவது அவர்களின் பொறுப்பு அந்த அளவுக்கு முக்கியமானது . முதலாளியின் வேலை மற்றும் அப்பொய்ன்ட்மென்ட் போன்றவற்றை நிர்வகிக்கும் செக்ரட்டரி போல் தான் நமது கைகளும். உடலில் எத்தனை பாகங்கள் இருந்தாலும் கை உடைந்தது போல் என்று தான் நாம் உவமை படுத்துகிறோம். கைகளின் பங்கு இன்றியமையாதது, அதுவும் பெண்களுக்கு. இரண்டே இரண்டு கைகளை வைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் வேலைகள் ...அப்பப்பா

சமைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, தோட்ட வேலைகள் செய்வது, அயர்ன் செய்வது, இப்படி பல வேலைகளை செய்வதற்கு கைகள் அவசியம். இவ்வளவு பணிகளை செய்வதால் நமது கைகள் வறண்டு, கடினமாக மாறுகின்றன. வயது அதிகமாகும்போது இந்த கடின தன்மை மேலும் அதிகரிக்கிறது.

Effective home remedies for dry hands to get rid of wrinkles

மேல் தோல், அடித்தோல் மற்றும் உட்புற தோல் என்று மூன்று லேயர்கள் தோலில் உள்ளன. பலவிதமான தொற்றுகள் , புற ஊதா கதிர்கள், மாசு ஏற்படுத்தும் பொருட்கள் போன்றவற்றில் இருந்து உடலை காப்பது மேல்தோலின் பணியாகும். மேல்தோல் ஈரமாகவே இருக்கும்போது இத்தகைய சரும சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை; கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும்.

எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இங்கே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கை, கால்களுக்கு பயன்படுத்தினால், கை, கால்களில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறண்ட கைகளுக்கான காரணங்கள்:

வறண்ட கைகளுக்கான காரணங்கள்:

தண்ணீர் - கைகள் நாள்முழுதுதும் தண்ணீரில் நனைந்தபடி இருந்தால் அதன் உட்பகுதி ஈரப்பதத்தை இழக்கும். தண்ணீரில் அடிக்கடி கைகளில் படும்போது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் இழக்க நேரிடும்.

வறண்டக்காற்று - எல்லா காலத்திலும் கைகள் வறண்டு காணப்படலாம். குறிப்பாக குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்றால் மேல்தோலில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கைகள் வறண்டு போகலாம்.

சோப்பு - எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கும் எண்ணத்தில் தயார் செய்யப்படுவதால், சோப்பு சருமத்தை வறட்சியாக்கும்.

கடினமான பொருட்கள் - பாத்திரம் தேய்க்க, வீட்டை சுத்தப்படுத்த போன்ற வேலைகள் செய்ய பயன்படுத்தும் பொருட்களில் அழுக்குகளை நீக்க கடினமான இரசாயன பொருட்களை சேர்க்கப்பட்டிருப்பதால் அவற்றை கைகளால் உபயோகப்படுத்தும்போது கைகள் ஈரப்பதத்தை இழக்கின்றன.

முழங்கை :

முழங்கை :

உடலின் பிற பாகங்களை விடக் கருப்பாக இருக்கும் உங்கள் கையின் மூட்டுப்பகுதியைப் பராமரிப்பது முக்கியம். கையின் மூட்டுப்பகுதியைக் குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது சுத்தம் செய்தால்தான் அப்பகுதியில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்க முடியும். மூட்டுப்பகுதியை பளிச்செனவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள எலுமிச்சை சிறந்த பலனைத் தரும்.

மாய்ஸ்ரைசர் சோப்பு:

மாய்ஸ்ரைசர் சோப்பு:

சோடியம் லாரில் சல்பேட் , ட்ரைக்ளோசன் , செயற்கை டை , செயற்கை நறுமணம், போன்றவற்றை மூலப்பொருளாக கொண்டிருக்கும் சோப்கள் வறட்சியை அதிகப்படுத்தும். வைட்டமின் ஈ , கற்றாழை, ஹிமாலயன் உப்பு போன்றவை கலந்து செய்யப்பட்ட சோப்பு ஈரப்பதத்தை அதிகப்படுத்தும். வறண்ட சருமத்தை மேம்படுத்தும்.

கை மற்றும் பாதங்களில் உள்ள கருந்திட்டுக்களைப் போக்க புதினா மற்றும் தேங்காய்ப்பால் உள்ளடங்கிய கலவையை மாய்ச்சுரைசராகப் பயன்படுத்தலாம். இது வறட்சியைப் போக்குவதோடு உங்கள் சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்

க்ளோவ்ஸ் :

க்ளோவ்ஸ் :

கட்டாயமாக சில நேரம் தண்ணீரில் கை வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் ரப்பர் க்ளோவ்ஸ் அணிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் லெதர் க்ளோவ்ஸ் அணிந்து கொள்ளலாம். கைகள் அதிக நேரம் நீரில் நனைக்கப்பட்டால், வேலை முடிந்தவுடன் சிறிது நேரம் வெந்நீரில் கைகளை வைக்கவும்.

ட்ரயர் பயன்படுத்தி கைகளை காயவைக்காமல் துண்டுகளால் கைகளை துடைக்கவும். கைகழுவி 3 நிமிடத்திற்குள் மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தவும்.

 இரவு சிகிச்சை:

இரவு சிகிச்சை:

இரவு உறங்க செல்லும் முன்பு கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசேர் போட்டு விட்டு உறங்குவது நல்லது. இதனால் நீண்ட நேரம் ஈரப்பதம் கைகளில் இருக்க முடியும். கைகளை சாக்ஸ் கொண்டு மூடி கொள்வதால் ஈரப்பதம் வெளியேறாமல் இருக்கும்.

 நீர்ச்சத்து :

நீர்ச்சத்து :

நிறைய தண்ணீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறைந்த பட்சம் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது . உடல் வறட்சி இல்லாமல் இருக்க உதவுகிறது.

நமது கைகள் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் மிகவும் முக்கியம். அதனை எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெப்ப நிலை, வெளிப்புற காரணிகளால் ஏற்படும் சேதங்களை எளிய முறையில் அப்புறப்படுத்தி நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வரவழைத்து கொள்ளலாம். பெண்கள் நினைத்தால் முடியாதது இல்லை!

கைகளில் கருமையை போக்க :

கைகளில் கருமையை போக்க :

கை மற்றும் பாதங்களில் உள்ள கருமையைப் போக்க புதினா மற்றும் தேங்காய்ப்பால் கலந்த கலவையை தடவினால் தகுந்த ஈரப்பதம் கிடைக்கும். இது வறட்சியைப் போக்குவதோடு உங்கள் சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective home remedies for dry hands to get rid of wrinkles

Effective home remedies for dry hands to get rid of wrinkles
Story first published: Saturday, October 14, 2017, 21:40 [IST]
Desktop Bottom Promotion