உங்கள் சருமம் வறண்ட சருமமா? இப்படி பராமரியுங்கள்!!

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

சீரற்ற சருமம் என்பது பொதுவாக அதிகப்படியான வெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படுவது. வெப்பநிலை மாற்றத்தால் நமது சருமம் அதிகமாக வறண்டு சீரற்ற நிலையை அடைகிறது.

இந்த காலத்தில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இது. இப்படி ஆகும் போது நமது சருமத்திற்கு அதிகப்படியான அக்கறை தேவைப்படுகிறது என்று தான் அர்த்தம்.

Easy ways to prevent flaky skin in a week,

அதிகப்படியான குளிர்ச்சி மற்றும் அதிகப்படியான வெப்பம் நமது சருமத்தை பாதிப்பதன் விளைவாக சருமம் சீரற்ற நிலைமையை அடைகிறது. இந்த சீரற்ற சருமம் பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதுடன் அரிப்பு மற்றும் அலர்ஜியை கூட சில நேரங்களில் ஏற்படுத்தக்கூடும்.

அதுமட்டுமல்லாமல் லேசான வலி மற்றும் புண்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இங்கே இந்த சீரற்ற சருமத்தை சரி செய்வதற்கான சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி இப்போது பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வெந்நீர் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்

வெந்நீர் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்

இந்த சருமப் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக வெந்நீர் உபயோகிப்பதைத் தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அது மிக மோசமாக சருமத்தை பாதித்துவிடும்.

இந்த தருணங்களில் பொதுவாக வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரைத் தான் உபயோகிக்க வேண்டும். அதுவே சருமத்துளைகளை சரிசெய்து அதில் உள்ள அழுக்குகள் வெளியேற வழி செய்யும். எனவே, வெந்நீரை உபயோகிக்காமல் குளிர்ந்த நீரை உபயோகிப்பதே மிகச் சிறந்தது.

 சோப்பின் தரத்தினை பரிசோதிக்க வேண்டும்

சோப்பின் தரத்தினை பரிசோதிக்க வேண்டும்

எப்பொழுதும் நாம் உபயோகிக்கும் சோப்பின் தரத்தினை ஆராய்ந்து பார்ப்பது தான் மிகச் சிறந்தது. அதுவும் வறண்ட மற்றும் சீரற்ற சரும பிரச்சனையால் அவதிப்படுவோர் நிச்சயமாக அவர்களது சோப்பின் தரத்தை ஆராய வேண்டும். பொதுவாக அவர்கள் ஆல்கஹால் குறைவாக உள்ள சோப்பினைத் தான் உபயோகிக்க வேண்டும். இதற்கு மாறாக அதிக அளவில் ஆல்கஹால் உள்ள சோப்பினை உபயோகித்தால் சருமத்தில் எரிச்சல் ஏற்படும். அது சரும பிரச்சனையை அதிகரித்துவிடும்.

சருமத்தை ஈரமாக வைத்திருப்பது

சருமத்தை ஈரமாக வைத்திருப்பது

வறண்ட மற்றும் சீரற்ற சருமத்தை சரி செய்யும் மற்றொரு வழி தான் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வது. ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாய்ஸ்சுரைசரை பொருத்து தான் உங்கள் சருமம் நன்றாக இருக்குமா இல்லையா என்பது. ஆல்கஹால் அதிகமாக உள்ள பாடி லோஷன் மற்றும் பழச் சாற்றினால் ஆன லோஷன்களையும் பயன்படுத்துவதை தவிர்த்தே ஆக வேண்டும். அவற்றை தவர்ப்பதே சிறந்த முறையாகும்.

நறுமண எண்ணெய்களை உபயோகியுங்கள்

நறுமண எண்ணெய்களை உபயோகியுங்கள்

இரசாயன பொருட்கள் நிறைந்த லோஷன்களை உபயோகிப்பது சருமத்திற்கு மேலும் பிரச்சனைகளைத் தான் உருவாக்க செய்யும். இதற்கு பதிலாக இயற்கை நறுமணகளை பயன்படுத்தினால் அது சருமத்தை வறட்சி அடையாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சிறிது தேங்காய் எண்ணெயுடன் இயற்கை நறுமண எண்ணெயையும் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து காலை எழுந்தவுடன் கழுவிட வேண்டும். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் சிறந்த முறையாகும்.

மேக்கப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்

மேக்கப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்

சீரற்ற சருமத்தால் அவதிப் படுபவர்கள் கண்டிப்பாக மேக்கப் போடுவதைத் தவிர்த்தே ஆக வேண்டும். தினமும் மேக்கப் போடுவது என்ற எண்ணம் கூடவே கூடாது. அப்படி போட்டால் அது ஒரு வித எரிச்சலை உண்டாக்கும்.

அப்படி மேக்கப் போட்டே ஆக வேண்டும் என்னும் நிலைமை வந்தால் நீங்கள் இயற்கை முறையிலானா மேக்கப் பொருட்களைக் கொண்டு போட்டுக் கொள்ளலாம். இது உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பு அளித்துக் காக்கும்.

ஸ்க்ரப்பிங்

ஸ்க்ரப்பிங்

வறண்ட மற்றும் சீரற்ற சருமத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் சருமத்திற்கு ஸ்க்ரப்பிங் ஒரு மிகச் சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது. லோபா மற்றும் ஈரத்துணியினை வைத்து முகத்தை மெதுவாக மற்றும் பொறுமையாக துடைக்க வேண்டும்.

இது இறந்த இரத்த செல்களை மற்றும் முகத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான அழுக்குகளை நீக்கி சரும எரிச்சலில் இருந்து காக்கிறது. அதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்

தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்

சூரிய வெளிச்சத்தால் முதலில் பாதிப்படைவது நமது சருமம் தான். இதனால், சருமம் சிவப்பாவது மற்றும் சருமத்தில் வீக்கம் போன்றவை ஏற்படுகின்றது. எனவே, நீங்கள் வெளியே போகும் முன்பு சன்ஸ்கிரீன் போட்டுக் கொண்டு போனால் உங்கள் சருமத்தை எளிதாக பாதுகாக்கலாம். இதனை தினமும் உபயோகித்து வந்தால் சருமத்தில் வறட்சி மற்றும் சீரற்ற நிலை ஏற்படுவதை எளிமையாக தடுத்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easy ways to prevent flaky skin in a week,

Easy ways to prevent flaky skin in a week,
Story first published: Sunday, April 2, 2017, 10:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter