இந்த 5 சிகிச்சைகளை பார்லரில் மட்டும் தான் செய்ய வேண்டும்! இல்லை என்றால் விளைவுகள் பயங்கரமாகும் !

Written By:
Subscribe to Boldsky

அழகை கூட்டும் சில விஷயங்களான வாக்சிங் உட்பட அனைத்தையும் நாம் பார்லர் போகாமல், வீட்டிலேயே செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஒரு சில விஷயங்களை அழகுக்கலை வல்லுனர்களால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். ஏனெனில், ஒரு சில அழகுக்கலை சிகிச்சைகளை நாம் வீட்டிலேயே செய்து கொள்ளும் போது சில பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது என சரும பராமரிப்பு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருக்களை நீக்குதல்

மருக்களை நீக்குதல்

மருக்களை நீக்குவதற்கு நூல் போன்ற பொருட்களை கொண்டு மருவிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, மருக்கள் நீக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையை நீங்கள் வீட்டில் செய்தால் அது முற்றிலும் தவறானது. அதிக இரத்த கசிவை ஏற்படுத்திவிடும்.

வாக்சிங்

வாக்சிங்

வீட்டிலேயே வாக்சிங் செய்வதை சரியான முறை என்றும் கூறலாம், தவறான முறை என்றும் கூறலாம். வாக்சிங் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியம். கவனமில்லாமல் செய்தால் ஒரு சில நேரங்களில் தோல் உரிந்து வந்துவிடக்கூடும்.

கரும்புள்ளிகளை நீக்குதல்

கரும்புள்ளிகளை நீக்குதல்

கரும்புள்ளிகளை வேருடன் பிடுங்குவதற்கான சிகிச்சையை நாம் வீட்டிலேயே செய்தால், தொற்றுக்கள் ஏற்பட்டுவிடும். இது ஆபத்துகளை விளைவிக்கும். எனவே நீங்கள் முகப்பருக்களை பிடுங்குதல் மற்றும் கரும்புள்ளிகளை பிடுங்குதல் போன்றவற்றை மருத்துவரிடமே விட்டுவிடுவது நல்லது.

டை அடிப்பது!

டை அடிப்பது!

கண் இமைகளுக்கு நீங்கள் டை அடிப்பவராக இருந்தால், இதனை வீட்டில் முறையான பயிற்சி இன்றி செய்யாதீர்கள். இவ்வாறு செய்தால், கெமிக்கல்கள் கண்ணுக்குள் சென்று விட நீங்களே காரணமாகிவிடுவீர்கள். எனவே இதனை அழகுக்கலை நிபுணர்களிடம் விட்டுவிடுங்கள்.

திரெட்டிங்

திரெட்டிங்

திரெட்டிங் சிறந்த அழகுக்கலை நிபுணர்களிடம் செய்வதே மிகச்சிறந்தது. கண்களின் அருகில் மிக முக்கிய நரம்புகள் இருக்கும். இதனை கையாள தெரியாமல் செய்வது பெரும் ஆபத்தில் கொண்டு சேர்க்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do not do these parlor treatment at home

Do not do these parlor treatment at home
Story first published: Monday, August 7, 2017, 11:09 [IST]