தங்கமாய் முகம் ஜொலிக்கனுமா? இந்த ஃபேஸியல் மாஸ்க் ட்ரை பண்ணுங்க !!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

களங்கமில்லாத முகம் அனைவரையும் வசீகரிக்கும். "துடைத்து வைத்த குத்து விளக்கு போல் " என்று அந்த நாட்களில் கூறுவர். குத்து விளக்கை துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்தால் எவ்வளவு அழகுடன் பளபளப்புடன் தோன்றுமோ அதுபோல் பெண்கள் இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் தான் அது.

தெளிவான சருமம் என்பது இன்றைய மாசு படிந்த உலகில் இயற்கையாக சாத்தியமில்லாதது தான். ஆனால், சருமத்தை தொடர்ந்து பராமரிக்கும்போது இவை நிச்சயம் சாத்தியமாகும்.

ஒப்பனை பொருட்கள் மற்றும் பராமரிப்பு பொருட்கள் இரசாயன கலவையுடன் இருக்கும்போது தற்காலிக அழகை மட்டுமே தருகின்றன. இவற்றால் பண செலவும் அதிகம். பக்க விளைவுகளும் உண்டு. நீண்ட நாட்கள் பயன்படுத்தும்போது பல வித சரும சேதங்கள் ஏற்படுகின்றன. இரசாயன பொருட்களை பயன்படுத்தி சரும சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

Different Face masks to give flawless and glowing skin

மிக மிக எளிய முறையில் பணத்தையும் நேரத்தையும் மிச்சமாக்கும் வகையில் பல வழிமுறைகள் கொண்டு நமது அழகை அதிகரிக்க முடியும். அவற்றை பற்றியது தான் இந்த பதிவு.

மிகுந்த பொருட்செலவு இல்லாமல், வீட்டில் எப்போதும் இருக்கக்கூடிய வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, பால், மஞ்சள் தூள் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் அழகு குறிப்புகளை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மஞ்சள் மற்றும் வெள்ளரிக்காய் மாஸ்க் :

மஞ்சள் மற்றும் வெள்ளரிக்காய் மாஸ்க் :

வெள்ளரிக்காய் ஒரு குளிர்ச்சியான காய் . சருமத்திற்கு ஈரப்பதத்தை தந்து புத்துணர்ச்சியை தருகிறது. சருமத்தில் ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் கட்டிகளை குறைத்து சரும பொலிவை அதிகரிக்கிறது. இயற்கையான ஒரு டோனர் போல் செயல்படுகிறது.

மஞ்சள் , சருமத்தை புதுப்பித்து சமமான நிறத்தை வழங்குகிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை சருமத்தை சுத்தமாக வைக்க உதவுகிறது.

பாதி வெள்ளரிக்காயை தோல் உரித்து அரிந்து விழுதாக்கி கொள்ளவும். இதில் ½ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

இந்த விழுதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இந்த மாஸ்கை தினமும் பயன்படுத்தலாம். இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன் இதனை பயன்படுத்தலாம்.

 அவகேடோ மற்றும் தேன் மாஸ்க்:

அவகேடோ மற்றும் தேன் மாஸ்க்:

அவகேடோவில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இதனால் சருமத்திற்கு ஈரப்பதம் அதிகரித்து சுருக்கம் மற்றும் கோடுகள் மறைகிறது. தேனும் இதே தன்மைகளை கொண்டதால் இவை இரண்டும் இணைந்து சரும பொலிவை அதிகரிக்கின்றது.

பாதி அவகேடோ பழத்தை அறிந்து, அதில் உள்ள சதையை எடுத்துக் கொள்ளவும். போர்க் கொண்டு அந்த சதையை மசித்துக் கொள்ளவும். இதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்க்கவும் .

இந்த கலவையை முகத்திலும் கழுத்திலும் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். வாரத்தில் பல முறை இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

அவகேடோவிற்கு பதில் வாழைப்பழம் கூட பயன்படுத்தலாம். . தேன் இல்லாவிட்டாலும் வெறும் பழத்தை மசித்து முகத்தில் தடவலாம்.

உருளை கிழங்கு மற்றும் கடலை மாவு மாஸ்க்:

உருளை கிழங்கு மற்றும் கடலை மாவு மாஸ்க்:

கடலை மாவு சருமத்தை தோல் உரித்து இறந்த செல்களை நீக்குகிறது. சருமத்திற்கு பொலிவை தருகிறது. அதிகமான எண்ணெய் பசையை வெளியேற்றுகிறது. இதனால் கட்டிகள் மற்றும் பருக்கள் குறைகிறது. முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றுகிறது.

உருளை கிழங்கிற்கு ப்ளீச்சிங் தன்மை உண்டு. இது கொப்பளங்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.

5 ஸ்பூன் கடலை மாவு எடுத்துக் கொள்ளவும். ஒரு மிதமான அளவு உருளை கிழங்கை தோல் உரித்து, அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அந்த உருளை கிழங்கு சாறை கடலை மாவுடன் சேர்க்கவும். இரண்டையும் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.

இந்த பேஸ்டை முகத்திலும் கழுத்திலும் தடவவும். 20 நிமிடங்கள் நன்றாக காய்ந்தவுடன் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தலாம்.

கடலை மாவுடன் உருளை கிழங்கு சாறுக்கு மாற்றாக யோகர்ட், மோர், வெள்ளரிக்காய் ஜூஸ், க்ரீன் டீ , ரோஸ் வாட்டர், தேங்காய் நீர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பால் பவுடர் மற்றும் தேங்காய் தண்ணீர் மாஸ்க்:

பால் பவுடர் மற்றும் தேங்காய் தண்ணீர் மாஸ்க்:

சரும நிற இழப்பை தடுத்து, பொலிவை அதிகரிக்க பால் பவுடர் மற்றும் தேங்காய் தண்ணீர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

பால் பவுடரில் இருக்கும் புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் சருமத்தை புதுப்பிக்கிறது. தேங்காய் தண்ணீரில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் பல ஊட்டச்சத்துகள் சரும பொலிவிற்கு உதவுகின்றன. வயது முதிர்வை தடுக்கின்றன.

வாரம் ஒருமுறை :

வாரம் ஒருமுறை :

1 கிண்ணத்தில் 1 ஸ்பூன் பால் பவுடரை சேர்க்கவும். அதனுடன் சிறிது தேங்காய் தண்ணீரை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.

இந்த பேஸ்டை முகத்திலும் கழுத்திலும் நன்றாக தடவவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் சில முறை இதனை செய்யலாம். தேங்காய் தண்ணீருக்கு மாற்றாக எலுமிச்சை சாறையும் பயன்படுத்தலாம்.

சந்தன தூள் மற்றும் ரோஸ் வாட்டர் மாஸ்க்:

சந்தன தூள் மற்றும் ரோஸ் வாட்டர் மாஸ்க்:

சந்தன தூளை பயன்படுத்துவதால் இளமை மாறாமல் இருக்க முடியும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. சரும நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.

ரோஸ் வாட்டரில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மையால் சருமத்தின் இளமை மற்றும் பொலிவு அதிகரிக்கிறது.

2 ஸ்பூன் சந்தன தூளை ஒரு கிண்ணத்தில் போடவும்.

அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் ஊற்றி ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.

எண்ணெய் சருமத்திற்கு நன்மை :

எண்ணெய் சருமத்திற்கு நன்மை :

அந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வு தருகிறது.

முல்தானி மட்டி :

முல்தானி மட்டி :

முல்தானிமிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து இதே முறையில் கலந்து முகத்தில் தடவலாம். முகத்தின் அதிக எண்ணெய் தன்மையை இவை குறைக்க கூடும்.

என்ன வாசகர்களே! எளிதான முறையில் முக அழகை பராமரிக்கும் குறிப்புகளை தெரிந்து கொண்டீர்களா? இவற்றை பயன்படுத்தி உங்கள் அழகை இரட்டிப்பாக்குங்கள் !

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different Face masks to give flawless and glowing skin

Different Face masks to give flawless and glowing skin
Story first published: Tuesday, October 24, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter