வெளியே தெரியும் இந்த பகுதி அசிங்கமா இருந்தா நல்லவா இருக்கும்?

Written By:
Subscribe to Boldsky

அழகு பராமரிப்பு என்று வரும் போது முகத்திற்கு தான் அதிக அக்கறை காட்டுவோம். ஆனால் முகம் மட்டும் பளிச்சென்று இருந்து, கை, கால்கள் கருமையாக இருந்தால் நன்றாக இருக்குமா என்ன? முகத்திற்கு பிறகு அனைவரது கண்களிலும் படுவது நமது கை மற்றும் கால்கள் தான். இதன் அழகிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நமது முக்கிய கடமையும் கூட...

அதிலும் தற்போது அடிக்கும் வெயிலில் சிறிது நேரம் நடத்தாலே சரும நிறம் மாற ஆரம்பிக்கும் அளவில் வெயில் கொளுத்துகிறது. எனவே உங்கள் அழகு மேம்பட வேண்டுமானால் கை, கால்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அவற்றை தினமும் பின்பற்றி வந்தால் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறம் விரைவில் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வெள்ளரிக்காய்

1. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கி பொலிவு பெறும்.

2. ஆலிவ் ஆயில்

2. ஆலிவ் ஆயில்

தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு கை மற்றும் கால்களை மசாஜ் செய்து வர, கருமை மறைவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க ஆலிவ் ஆயிலுடன் குங்குமப்பூ சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.

3. இளநீர்

3. இளநீர்

இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் விரைவில் கருமை நிறம் நீங்கும்.

4. எலுமிச்சை சாறு

4. எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ, அதில் உள்ள வெளுக்கும் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.

5. தயிர்

5. தயிர்

தயிரும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டது. இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ஜிங்க் தான் காரணம். மேலும், தயிரை கை, கால்களுக்கு தினமும் தடவி வர, சரும வறட்சியும் நீங்கும்.

6. தக்காளி

6. தக்காளி

தக்காளியை அரைத்து அதனை கை, கால்களில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், சரும நிறத்தை மேம்படுத்தலாம்.

7. எண்ணெய் பசை சருமம்

7. எண்ணெய் பசை சருமம்

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.

8. ஆரஞ்சு தோல்

8. ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கை, கால்களின் நிறத்தை அதிகரிக்கலாம்.

9. ஓட்ஸ்

9. ஓட்ஸ்

ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தயிர் மற்றும் தக்காளி சாறு சேர்த்து கலந்து, கை, கால்களுக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ, கை, கால்களில் உள்ள கருமை நீங்கும் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் போய்விடும்.

10. நகப்பராமரிப்பு

10. நகப்பராமரிப்பு

கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் நன்கு அழகாக பொலிவோடு மின்னுவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், நகங்களில் போதிய எண்ணெய் பசையானது கிடைத்து, நகங்கள் வலிமையோடு இருக்கும். வேண்டுமெனில் ஆலிவ் ஆயிலையும் பயன்படுத்தலாம்.

11. அழுக்கு போக

11. அழுக்கு போக

சப்பாத்தி மாவு பிசைந்த பின்னர் கைகளை கழுவாமல், அப்போது கைகளில் சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து, கைகளில் சிறிது நேரம் மசாஜ் செய்தால், கைகளில் உள்ள அழுக்குகள் போவதோடு, இது ஒரு சிறந்த மாய்ச்சுரைசராகவும் இருக்கும். வெதுவெதுப்பான நீரில் உப்பு மற்றும் வாஸ்லின் சேர்த்து கலந்து, பாதங்களை அதில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, குதிகாலை சுத்தம் செய்ய உதவும் பிரஷ் அல்லது படிகக்கல்லை வைத்து ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.

12. க்ரீம் பயன்படுத்தவும்

12. க்ரீம் பயன்படுத்தவும்

தினமும் படுக்கும் முன் கால்களில் ஹீல்ஸ் க்ரீம்மை தடவி படுத்தால், பாதங்கள் பொலிவோடு இருப்பதோடு, குதிகால் வெடிப்பும் வராமல் இருக்கும். கைகள் வறட்சியுடன், கடினமாக இருந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கைகளை அதில் சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

13. ஆலிவ் ஆயில்

13. ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை கால்களில் தடவி, சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால்கள் நன்கு பொலிவோடு மென்மையாக இருக்கும். குதிகால் வெடிப்பு இருப்பவர்கள், தேனை குதிகாலில் தினமும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், குதிகால் வெடிப்பை போக்கலாம். வேண்டுமெனில் தேனிற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

14. ஸ்கிரப்

14. ஸ்கிரப்

கை மற்றும் கால்களுக்கு ஸ்கரப் செய்ய வேண்டுமெனில், அதற்கு ஓட்ஸ், தேன், பால் மற்றும் தண்ணீரை கலந்து, கை மற்றும் கால்களில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10 முதல் 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கை மற்றும் கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் போய்விடும்.

15. கருமை

15. கருமை

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

daily home care for legs and hands

daily home care for legs and hands
Story first published: Thursday, October 26, 2017, 9:48 [IST]
Subscribe Newsletter