For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான சருமத்திற்கு வாரம் ஒருமுறை இதை செய்தால் போதும்!

ஆரோக்கியமான சருமத்திற்கு செய்ய வேண்டியவை கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

பெண்கள் தங்களது அழகை அடிக்கடி சரியான முறையில் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். பெண்களது சருமம் மிகவும் மிருதுவாக இருப்பதால் இவர்களுக்கு எளிதில் சரும பாதிப்புகள் உண்டாகி விடுகின்றன. எனவே அடிக்கடி பெண்கள் தங்களது சருமத்திற்கு உரிய இயற்கை பராமரிப்பை தருவது அவசியம்.

எளிமையாக செய்யக் கூடிய வேலை என்றும் உடனடி பலன் கிடைக்கும் என்று கெமிக்கல் பொருட்களுக்கு மாறுவதால். சருமம் எளிதில் முதுமையடைந்து விடும். சுருக்கங்கள் உண்டாகும். இளமை தோற்றம் போகும். ஆனால் இயற்கை பொருட்கள் அதிமாக உங்களது சருமத்தை பாதிப்பதில்லை. இந்த பகுதியில் உங்களது சருமம் பளபளப்பாக மாற சில அழகுக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கருவுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடம் ஊறவையுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதும். பளிச்சென்று வித்தியாசம் தெரியும்.

பப்பாளி

பப்பாளி

கனிந்த பப்பாளிப்பழத் துண்டை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவலாம். முகம் அப்படியே மின்னும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

இரண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்.. அதே அளவு ஆரஞ்சு ஜூஸ் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் மாசுமறுவற்று, பூனை முடிகள் அகன்று முகம் பளபளக்கும்.

எலுமிச்சை சர்க்கரை

எலுமிச்சை சர்க்கரை

குளிக்கப் போகும்போது ஒரு பெரிய கரண்டி சர்க்கரையும் ஒரு எலுமிச்சம் பழமும் கொண்டு செல்லுங்கள். உடல் முழுக்க சோப்பு தேய்த்த பிறகு, லெமன் சாறுடன் சர்க்கரை கலந்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளியுங்கள். உடம்பு பட்டுப் போலாகிவிடும்.

பேரிச்சை

பேரிச்சை

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1 உலர்ந்த திராட்சை பழம்-10 இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

beauty tips for healthy skin

beauty tips for healthy skin
Story first published: Saturday, October 28, 2017, 11:13 [IST]
Desktop Bottom Promotion