ஒரு வாசலின் டப்பா உங்க எல்லா சரும பிரச்சனைகளை போக்கிவிடும்!! எப்படின்னு தெரிஞ்சுகோங்க!!

Posted By:
Subscribe to Boldsky

உங்க வீட்ல வாசலின் கைவசம் இருந்தா போதும். பல சரும பிரச்சனைகளை போக்கலாம். சின்ன சின்ன சரும பிரச்சனைகளை அப்படியே கண்டு கொள்ளாமல் விடும்போது அவை தீரா பாதிப்புகளாகிவிடும். ஆகவே முகப்பரு, சுருக்கம், வறட்சி போன்றவற்றை ஆரம்ப்த்துலேயே பார்த்து சரிபண்ணி விட்டால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

வாசலின் பெட்ரோலியம் ஜெல்லியால் செய்யப்படுவதுதான். இது சருமத்திற்கு பலவித நன்மைகளை தருகின்றன. எந்த மாதிரியான பிரச்சனைகளை அது போக்கும் என பார்க்கலாம்

வாசலினில் அமினோ அமிலங்கள் , விட்டமின் போன்றவை இருப்பதால் அதனுடைய நன்மைகள் சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுருக்கம் மறைய :

சுருக்கம் மறைய :

வாசலினை சுருக்கமிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பாக கண்கள் ஓரத்தில் மற்றும் கன்னங்களின் ஓரத்தில் தடவுங்கள். தினமும் காலை வேளை செய்யவும். இப்படி செய்வதால் சுருக்கங்கள் மறைவதை கண்கூடாக காணலாம்.

நன்மை :

நன்மை :

வாசலினில் அதிக அளவு விட்டமின் ஏ, ஈ ஆகியவை இருக்கின்றது. சுருக்கங்கள் மறைவதற்கு முக்கியமாக இந்த இரு விட்டமின்களே தேவை. இதனால் சுருக்கங்கள் விரைவில் மறைகின்றது.

கண்ணிமை :

கண்ணிமை :

தினமும் இரவில் கண்ணிமைகளுக்கு பூசிக் கொண்டு படுக்கவும். புருவங்களுக்கும் இதனை பயன்படுத்துங்கள். இதனால் அடர்த்தியாக கண்ணிமை மற்றும் புருவங்கள் வளரும்.

நன்மை :

நன்மை :

இது முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. கண்ணிமை மற்றும் புருவ வேர்க்கால்களை பலப்படுத்துவதால் நல்ல முடி வளர்ச்சி உண்டாகும்.

நகங்கள் :

நகங்கள் :

நகங்களுக்கு வாசலினை தடவி மசாஜ் செய்யவும் 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்தால் நகங்கள் உடையாமல் நன்றாக வளரும். நகங்களில் சொத்தை இருந்தால் அதன் பாதிப்பு குணமடையும்.

நன்மை :

நன்மை :

வாசலினில் இருக்கும் நல்ல ரசாயன மூலக்கூறுகள் நகங்களுக்கு போஷாக்கு அளிக்கின்றன. இதனால் ஆரோக்கியமான நகங்கள் வளர்கின்றது.

மேக்கப் ரிமூவர் :

மேக்கப் ரிமூவர் :

முகத்தில் போட்ட மேக்கப்பை சாதரணமாக முகம் கழுவி போக்கக் கூடாது. அப்படி செய்வதால் சரும துளைகளில் அந்த மேக்கப் துகள்கள் அடைத்துக் கொண்டு சரும பாதிப்பை தரும். ஆகவே முகத்தை கழுவதற்கு முன் முகம் முழுக்க வாசலினை தடவி ஒரு டிஸ்யூ பேப்பரலா துடைத்து எடுங்கள். அதன் பின் முகம் அக்ழுவினால் சருமம் ஃப்ரெஷாக இருக்கும்.

முகப்பரு தழும்புகள் :

முகப்பரு தழும்புகள் :

முகப்பருக்கள் மறைந்தாலும் அதன் தழும்புகள் சரும அழகை கெடுக்கும் வகையில் இருக்கும். இதற்கு வாசலினை பயன்படுத்தலாம். வாசலினை தினமு முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்வதால் நாளடைவில் முகப்பருத் தழும்புகள் மறையும்.

பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு :

பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு :

வாசலினை 1 ஸ்பூன் அளவு எடுத்து சூடான ஆலிவ் எண்ணெயில் கலந்து அதனை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் கூந்தல் நன்றாக வளரும்.

பாத வெடிப்பிற்கு :

பாத வெடிப்பிற்கு :

பாத வெடிப்பிற்கு மிகச் சிறந்த சாய்ஸ் வாசலின்தான். தினமும் வாசலினை பாதங்களுக்கு பயன்படுத்தி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும். பாதங்களில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து மென்மையாக மாறிவிடும்.

உதடு :

உதடு :

உங்கள் உதடு அடிக்கடி வெடித்து கருத்து போயிருந்தால் வாசலினை பயன்ப்படுத்துங்கள். தினமும் தூங்குவதற்கு முன் வாசலினை உதட்டில் பூசிவிட்டு படுக்கச் செல்லுங்கள். நாளடைவில் உதட்டின் கருமை மறைந்து மென்மையாகவும் வெடிப்பில்லாமல் பொலிவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty Hacks using Vaseline

Beauty Hacks using Vaseline
Story first published: Saturday, December 9, 2017, 17:00 [IST]
Subscribe Newsletter