உடனடி நிறம் பெற பக்க விளைவில்லாத ஆயுர்வேத அழகுக் குறிப்புகள்!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவாள். அழகான சருமம் பெற பல வழிகள் இந்த நவீன காலத்தில் உள்ளது. அழகு நிலையங்கள் ஒவ்வொரு தெருவிற்கு ஒன்று வந்து விட்டது.

அங்கு எல்லா வித அழகு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படட்டு, பெண்களை அழகாக மாற்றுகின்றனர். அழகு நிலையங்களில் பெண்களை தற்காலிகமாக அழகு செய்கின்றனர். அந்த அழகு முயற்சிகளால் பல வித பக்க விளைவுகள் ஏற்படுகிறது. சரும சேதம் ஏற்படுகிறது. கூடுதலாக பண மற்றும் நேர விரயம் ஏற்படுகிறது.

Apply Lemon Juice & Rose Water On Your Skin & Watch What Happens

செயற்கை அழகு சிகிச்சைகளை விடுத்து இயற்கை முறையில் அழகு சிகிச்சைகளை நமது வீட்டிலேயே மேற்கொள்வதன் மூலம் பக்க விளைவுகள் இல்லாத அழகான சருமத்தை பெறலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே செய்வதால் பணமும் மிச்சமாகும். நேரமும் குறையும். இந்த பதிவில் நாம் காணப்போவது அழகான, பிரகாசமான சருமத்தை பெற இயற்கையான சில வழிமுறைகள்.

இரசாயன கலவை இல்லாத ஒரு தயாரிப்பு என்பதால் சருமத்திற்கு இவை எந்த ஒரு தீங்கை ஏற்படுத்தாது. வாருங்கள், இதன் செய்முறையை பார்க்காலம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை மாஸ்க்:

எலுமிச்சை மாஸ்க்:

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு

ரோஸ் வாட்டர்

காட்டன் பால்ஸ்

செய்முறை:

செய்முறை:

இரவில் உறங்கச் செல்வதற்கு முன் இந்த செய்முறையை செய்யலாம்.

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறையும் ரோஸ் வாட்டரையும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து அந்த பாத்திரத்தில் ஊற்றி கலக்கவும். சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பிறகு காட்டன் பஞ்சை அந்த கலவையில் நனைத்து முகத்தில் தடவவும். இரவு முழுதும் இப்படியே விட்டு விட்டு, காலையில் மென்மையான க்ளென்சர் கொண்டு முகத்தை கழுவவும். ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம். சருமத்தில் இருக்கும் திட்டுக்கள் மறைவதை காணலாம்.

மாற்றம் :

மாற்றம் :

எலுமிச்சை சாறில் இருக்கும் ப்ளீச் தன்மை சருமத்தை பொலிவாக்கும். இதனை இரவு நேரத்தில் செய்வது நல்ல பலனை கொடுக்கும். பகல் நேரத்தில் எலுமிச்சை சாறை முகத்தில் தடவி, வெளியில் போகும்போது, சருமம் சூரிய ஒளி பட்டு கருமை நிறமாகலாம் ஆகவே இரவு நேரத்தில் இதனை பயன்படுத்தி சருமத்தை பிரகாசிக்க வைக்கலாம்.

 கற்றாழை மாஸ்க் :

கற்றாழை மாஸ்க் :

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல்

மஞ்சள் தூள்

ரோஸ் வாட்டர்

செய்முறை:

கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இதனை உங்கள் சருமத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவவும். பின்பு சிறிது ரோஸ் வாட்டரால் கழுவவும். சருமத்தில் சிறிதளவு வறட்சி இருந்தால் மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தவும்.

இது எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற ஒரு மாஸ்காகும் . கற்றாழை அதிகமான எண்ணெய் பசையை உறிஞ்சி முகத்திற்கு பொலிவை தருகிறது. மஞ்சளும் ரோஸ் வாட்டரும் இணைந்து சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுத்து உடனடி பொலிவை தருகிறது.

யோகர்ட் மாஸ்க் :

யோகர்ட் மாஸ்க் :

தேவையான பொருட்கள்:

யோகர்ட்

ஆலீவ் எண்ணெய்

தேன்

மஞ்சள் தூள்

செய்முறை:

யோகர்ட் 2 ஸ்பூன் எடுத்து அதில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையுடன் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதனை பயன்படுத்தலாம்.

மாற்றம் :

மாற்றம் :

மஞ்சள் இயற்கையான முறையில் முகத்திற்கு பிரகாசத்தை கொடுக்கிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. ஆலிவ் எண்ணெய் சிராய்ந்த மாய்ஸ்ச்சரைசேராக பயன்படுகிறது. யோகர்ட் சருமத்தை தூய்மை படுத்தி பொலிவை தருகிறது.

பப்பாளி மாஸ்க் :

பப்பாளி மாஸ்க் :

தேவையான பொருட்கள்:

பப்பாளி

தேன்

யோகர்ட்

செய்முறை:

½ கப் பப்பாளியுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் யோகர்ட் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அந்த விழுதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும்.

பப்பாளியில் உள்ள பப்பைன் என்னும் கூறு, சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. யோகர்ட் சோர்வான முகத்தை பொலிவாக்குகிறது.

 தக்காளி மாஸ்க்:

தக்காளி மாஸ்க்:

தேவையான பொருட்கள் :

தக்காளி பேஸ்ட்

யோகர்ட்

செய்முறை:

1 ஸ்பூன் தக்காளி பேஸ்டுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

இந்த பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்திற்கு பொலிவைத் தருகிறது. சரும நிறமாற்றம் மற்றும் பருக்கள் வருவது தடுக்கப்படுகிறது. தக்காளி அலர்ஜி இருப்பவர்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் .

தேங்காய் பால் மாஸ்க்:

தேங்காய் பால் மாஸ்க்:

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால்

தேன்

எலுமிச்சை சாறு

செய்முறை:

2 ஸ்பூன் தேங்காய் பாலுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். உங்கள் சருமத்தில் ஒரு உடனடி மாற்றத்தை உங்கள் உணர முடியும்

இது போன்ற மாஸ்க்குகளை வீட்டில் ஓய்வாக இருக்கும்போது பயன்படுத்தி வந்தால் விரைவில் சருமம் பொலிவாகும். அழகு நிலையும் சென்று தற்காலிக அழகை பெறுவதை விட, எளிய முறையில் வீட்டில் இருந்த படியே உங்கள் அழகை நிரந்தரமாக்கி கொள்ளலா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Apply Lemon Juice & Rose Water On Your Skin & Watch What Happens

Apply Lemon Juice & Rose Water On Your Skin & Watch What Happens
Story first published: Saturday, October 21, 2017, 13:39 [IST]