சருமத்திற்கு இதெல்லாம் எப்போதும் பயன்படுத்தலாம் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் சரியான முறையில் சருமத்தை பராமரிக்கவில்லையெனில் அவை சருமத்தை வெகுவாக பாதிக்கிறது. அதோடு வெளியிலிருந்து வரக்கூடிய மாசு, சரியான ஆலோசனையின்றி நீண்ட நாட்கள் பயன்படுத்தும் கெமிக்கல்களாலும் நம்முடைய சருமம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகலாம்.

Amazing beauty tips for your skin

சில நேரங்களில் அழகு படுத்திக் கொள்ள என்று நீங்கள் ஆரம்பிக்கும் பல விஷயங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சருமத்தில் நிறைய விளைவுகளை சந்திக்கிறது.

உங்களுடைய சருமத்தை எளிதாக பராமரிக்கலாம். சருமத்தை பராமரிக்க வேண்டும் என்றால் நிறைய செலவாகும் என்று நினைத்து பயப்பட வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உங்களுடைய சருமத்தை அழகாக மாற்றலாம். சருமத்தை அழகாக மாற்ற இயற்கையான பொருட்கள் என்னென்ன தேவை அதனை எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காயை நன்றாக துண்டு துண்டுகளாக நறுக்கி அதனை கண்களில் வைத்துக்கொண்டால் கண்கள் குளிர்ச்சியாகும்.

வெள்ளரிக்காயுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து சருமத்தில் பூசிடுங்கள். பின்னர் பத்து நிமிடங்களில் கழுவிடலாம். இப்படிச் செய்வதனால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறிடும். அதோடு உடல் வெப்பத்தால் உண்டான கொப்புளங்களும் மறையும்.

வெள்ளரியை சாறாக்கி அதனை ஃபேஷியல் டோனராகவும் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதனால் உங்கள் சருமம் நீண்ட நேரத்திற்கு பிரஷ்ஷாக இருக்கும்.

கற்றாழை :

கற்றாழை :

இது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதனை செடியிலிருந்து எடுத்து அப்படியே கூட பயன்படுத்தலாம். வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு முகத்தில் திட்டு திட்டாக கருமை படரும்.

அப்படியிருப்பவர்கள் தினமும் கற்றாலை ஜெல்லைத் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழையில் ஆண்ட்டி பாக்டீரியா துகள்கள் இருக்கின்றன, இவற்றை சருமத்தில் பயன்படுத்தினால் பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

உதட்டில் அடிக்கடி புண் ஏற்பட்டாலோ அல்லது உதடு வெடித்து காணப்பட்டாலோ அங்கே கற்றாழையை தடவலாம்.

அல்லது கற்றாலையுடன் ஆலிவ் ஆயிலைக் கலந்து தடவினால் நல்ல பலன் கிடைத்திடும். இது சிறந்த சன்ஸ்க்ரீனாகவும் பயன்படுகிறது.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை பழத்தை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான காட்டன் துணியை எடுத்து அதில் முக்கி முகத்தை நன்றாக துடைத்திடுங்கள். எலுமிச்சை சாற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் உள்ள அழுக்களை எல்லாம் நீக்கிடும். இதனால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

அதோடு சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கிடுவதால் சருமத்தில் பருக்கள் தோன்றாமல் தடுக்கச் செய்திடும்.

தேன் :

தேன் :

தேனில் அதிகப்படியான் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதனை சருமத்தில் தடவுவதால் அவை சருமத்தில் ஈரப்பதத்தை கிடைக்கச் செய்கிறது.

பொதுவாக சருமத்தில் தோன்றிடும் பல்வேறு பிரச்சனைகளின் மூலக்காரணமே சருமம் வறட்சியுடன் இருப்பதால் தான். அதனை தவிர்க்க தேனை தினமும் பயன்படுத்தலாம்.

தினமும் பயன்படுத்தும் போது அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் உங்கள் சருமத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்பிருப்பதால் அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ரோஸ் வாட்டர் :

ரோஸ் வாட்டர் :

இது மிகவும் குளிர்ச்சியானது. பஞ்சினை ரோஸ்வாட்டரில் நனைத்து அவற்றைக் கொண்டு முகத்தை துடைத்தாலே போதுமானது. இவை சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதுடன் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.

சருமத்துவாரங்களில் அழுக்குகள் நீக்கப்படுவதால் முகம் பளிச்சென்று தெரியும்.

குங்குமப்பூ :

குங்குமப்பூ :

குங்குமப்பூவில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டிபாக்டீர்யல் துகள்கள் நிறையவே இருக்கிறது. முகத்தில் இருக்கும் தழும்புகளை நீக்குவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

குங்குமப்பூவில் இரண்டு ஸ்பூன் பால் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் தோன்றியிருக்கும் கருமை மறைந்திடும்.

குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்தால் சில நிமிடங்களில் அவற்றின் நிறம் தண்ணீரில் இறங்கிடும். அதனை உதட்டில் தடவி வர உதட்டில் வறட்சி நீங்கிடும். அதோடு நல்ல நிறமாகவும் மாறும்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீ தயாரித்து அவற்றை ப்ரிட்ஜில் வைத்து கூலாக்கிடுங்கள். பின்னர் அதனை எடுத்து முகத்தை கழுவினால் பிரஷ்ஷான லுக் கிடைக்கும். அதே போல நீண்ட நேரம் கணினி முன்பு உட்கார்ந்து வேலைப் பார்ப்பவர்களுக்கு கண்கள் டயர்டாக இருக்கும் அதோடு கருவளையமும் வரும் இதனைத் தவிர்க்க பயன்படுத்திய டீ பேகை எடுத்து கண்களில் அப்படியே வைத்திருக்கலாம்.

இதனால் நல்லன் பலன் கிடைக்கும். இதிலிருக்கும் அதிகப்படியான ஆண்ட்டி பாக்டீரியா சருமத்தை பாதுகாக்கிறது. க்ரீன் டீ பேஸ் பேக் கூட போடலாம். வாரத்தில் இரண்டு முறை இப்படிச் செய்வதனால் சருமத்தில் பருக்கள் தோன்றாது.

மஞ்சள் தூள் :

மஞ்சள் தூள் :

இது நம் அன்றாட சமையல் பொருட்களிலிருந்தே கிடைக்கக் கூடியது. மஞ்சள் தூள் சருமத்தை அருமையாக பாதுகாக்கிறது. காலங்காலமாக பின்பற்றப்படும் இந்த மஞ்சள் அழகு ரகசியம் இன்றளவும் தொடர்கிறது.

மஞ்சளை பிற பொருட்களுடன் கலக்காமல் அப்படியே பேஸ்பேக்காக கூட போட வேண்டும். சில நிமிடங்களில் அது காய்ந்திடும். காய்ந்ததும் அதனை கழுவிவிடலாம்.

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெய் :

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்க்ரீமில் ஒரு சொட்டு பாதாம் ஆயில் கலந்து பூசினால் நல்ல பலன் கிடைக்கும். அதைவிட பாதாம் ஆயிலை வேறு எந்த பொருளுடனும் கலக்காமல் அப்படியே எடுத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்வதால் சருமம் பொலிவுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். இதனை நீங்கள் தினமும் கூட செய்யலாம் .

புதினா :

புதினா :

புதினாவை அரைத்து முதலில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சாறினை உங்கள் முகத்தில் டோனராக பயன்படுத்தலாம். இவை சருமத்தை பொலிவாக காட்டிடும்.

வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

தயிர் :

தயிர் :

தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்தையும் பராமரிக்க உதவுகிறது. நியூட்டிரிசியன்கள் நிறைந்த தயிரை நம் சருமத்தில் அப்ளை செய்வதால் சருமத்திற்கு ஏகப்பட்ட நன்மைகள் உண்டு.

தயிரில் இருக்கும் ஜிங்க் சருமத்தில் இருக்கும் திசுக்களை உற்சாகப்படுத்துகிறது. இதனால் சருமத்தில் பருக்கள் தோன்றுவதை தவிர்க்கலாம். சருமத்தில் மேல் பகுதியில் தயிரை தடவுவதால் சரும வறட்சியிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

சருமத்திற்கான அழகு சாதனப் பொருட்களில் முக்கிய இடம் வகிப்பது லேட்டிக் ஆசிட் இது மிகச்சிறந்த மாய்ஸ்சரைசராகவும் செயல்படும். லேட்டிக் அமிலம் தயிரில் நிறையவே இருக்கிறது. அதோடு முகத்தில் சுற்றுப்புறப்புறத்தால் உண்டாகும் பாக்டீரியா தொற்றினையும் அழித்திடுகிறது.

தயிரில் உள்ள ஹைட்ராக்ஸில் அமிலம் நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதனால் தயிரை தினமும் பயன்படுத்துவதால் சருமம் பொலிவடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing beauty tips for your skin

Amazing beauty tips for your skin
Story first published: Friday, October 20, 2017, 16:46 [IST]
Subscribe Newsletter