Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இளமையான சருமத்தை தரும் சிவப்பு திராட்சை ஃபேஸியல் மாஸ்க் !!
30 வயதை கடந்ததுமே கொலாஜன் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். அதன் அறிகுறிகள் நம் முகத்திலுள்ள கன்னப்பகுதிகளில் உள்ள கொழுப்புகள் கரைந்து தசைகள் தளர ஆரம்பிக்கும்.
இதனால் முகச் சதைகளுக்கு பிடிமானமில்லாமல் தொங்கி போய் வயதான தோற்றத்தை தரும். கவலைப் ப்டாதீர்கள். இது உடனே நடக்கக் கூடிய நிகழ்வல்ல. ஆனால் படிப்படியாக ஆரம்பிப்பது கண்கூடாக தெரியும். இதனை தவிர்க்க முடியாவிட்டாலும் தள்ளிப் போடலாம் அல்லவா.

அதிக புரோட்டின் நிறைந்த சோயா, ஓட்ஸ் ஆகியவை கொலாஜனை தூண்டும். ஆகவே அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்சத்து நிறைந்த காய்கள் பழங்கள் கட்டாயம் உங்கள் டயட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது தவிர்த்து நிறைய நீர் குடிப்பது மிக மிக அவசியம்.
அதோடு, சருமத்திற்கு ஊட்டம் தரும் அழகுகுறிப்புகளை அவ்வப்போது பயன்படுத்தினால் உங்கல் சருமம் இறுகி, 20 வயது போலவே காட்சியளிக்கும். அப்படி ஒரு வகையான குறிப்புதான் நீங்கள் பார்க்கப்போவது.
தேவையானவை :
சிவப்பு திராட்சை - சில
ஸ்ட்ரா பெர்ரி - சில
யோகார்ட் - 2 டீ ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
சிவப்பு திராட்சையிலும், ஸ்ட்ரா பெர்ரியிலும் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அதிலும் ஸ்ட்ரா பெர்ரியில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இவை சுருக்களை நீக்குகிறது. சரும செல்களை உயிர்ப்பிக்கிறது.
செல் வளர்ச்சி முகத்தில் அதிகரிக்கும். இதனால் மீண்டும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இப்படி இளமையை நீட்டிக்கச் செய்யலாம். அது தவிர நாம் சேர்க்கும் யோகார்டில் உள்ள கிருமி எதிர்ப்பு திறன் சருமத்தை பாதிப்புகளிலிருந்து காக்கிறது.
ஈரப்பதத்தை முகத்திற்கு அளிக்கிறது. தேன் சருமத்திற்கான அருமையான குணம் பெற்ற பொருளாகும். இவை சருமத்தை மென்மையாக்கும். மிளிரச் செய்யும். சுருக்களை போக்கும்.
சிவப்பு திராட்சை மற்றும் ஸ்ட்ரா பெர்ரியை நன்றாக மசித்துக் கொண்டு அதில் யோகார்ட் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். சிலனிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 3 நாட்கள் செய்து பாருங்கள். முகம் புதிதாய் தெரியும்.



Click it and Unblock the Notifications



