Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
புது அம்மாவிற்கான அன்னாசி ஸ்க்ரப் !!
பெண்களின் அழகு எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி வைத்திருப்பது எளிதல்ல. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி அவர்களின் அழகு பிரதிபலிக்கும். காரணம் அவர்களின் உடலமைப்பு.
பொதுவாகவே மாதவிடாய் சமயத்தில் பெண்களின் அழகு அதிகரிக்கும். சருமம் பளபளப்பாக, புது தேஜஸை தரும் விதமாக மின்னும். சரியாக மாதவிடாய் முடிந்து 10 நாட்களுக்கு பிறகு சருமம் பொலிவில்லாமல் தொய்ந்து போவது போலிருக்கும். இது எல்லாமே ஹார்மோன் செய்யும் மாயம்தான்.

அதேபோல், குழந்தை பிறந்ததும் சம நிலையற்ற ஹார்மோன்களால சிலருக்கு முகம் உழுவதும் கருமைடைந்துவிடும். இதற்கு காரணங்கள் இல்லை. கழுத்துப் பகுதியும் முகமும் கருப்பாகி, முகப்பருக்கள் திடீரென் அதிகரித்திற்கும்.
வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எண்ணெய் சருமமாக மாறும். இப்படி அழகே மாறிவிட்டதே என கவலைப் படாதீர்கள்.
அந்த நேரத்தில் தாய்மை என்ற அழகை விட வேறோன்றும் பெரிதில்லை. அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் இழந்த சருமத்தை மீண்டும் எளிதில் பெற உதவுகிறது இங்கே கூறப்பட்டுள்ள அழகுக் குறிப்பு.
அன்னாசி ஸ்க்ரப் :
அன்னாசி துண்டுகள் - 1 கப்
வாழைப்பழம் - அரை துண்டு
சர்க்கரை - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
ரோஜா இதழ் - சில
அன்னாசியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் வாழைப்பழத்தையும் சேர்த்து மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் சர்க்கரை, தேங்காய் என்ணெய் கலந்து நன்றாக கலக்கி அதன் மேல் ரோஜா இதழை தூவி வைத்துக் கொள்ளுங்கள்.
குளிப்பதற்கு முன் இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் ஊற விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
இதனை தொடர்ந்து உபயோகித்து வந்தால், உடலில் திடீரென உண்டான கருமை மறைந்து மிருதுவாக மாறும். செய்து பாருங்கள். புதிய அம்மாவிற்கான அழகு உங்கள் தோற்றத்திலும் தெரியும்.



Click it and Unblock the Notifications





