மழைக்காலத்தில் சருமத்திற்கான டாப் 7 அழகுக் குறிப்புகள்!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

வெய்யில் காலத்தில் எண்ணெய் வழிதல், முகப்பரு, கருமை ஆகிய பிரச்சனைகள் முடிந்து மழைக்காலத்தில், வறட்சி, சுருக்கம், எரிச்சல் என மாறி மாறி சருமம் ஏதாவது ஒரு வகையில் பாதித்துக் கொண்டேயிருக்கும்.

Monsoon beauty tips for all skin types

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மழை மற்றும் குளிர் காலத்தில் தப்பித்தனர். ஆனால் வறண்ட மற்றும் சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இனிதான் பிரச்சனை ஆரம்பம்.

சருமம் மேலும் வறண்டு, எரிச்சலை உண்டாக்கும். சுருக்கங்கள், பொலிவின்மை என சருமம் பாதிப்பிற்கு உள்ளாகும்.

Monsoon beauty tips for all skin types

நாம் சருமத்தை நன்றாக பாதுகாத்தால், அப்படியே காலம் முழுவதும் இளமையாகவும் அழகாகவும் பராமரிக்கலாம். இது நம் கையில்தான் உள்ளது இந்த மழைக்காலத்தில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தையும் . பராமரிப்பையும் எப்படி வழங்குவது எனப் பார்க்கலாம்.

ஸ்ட்ரா பெர்ரி தெரபி :

ஸ்ட்ரா பெர்ரி - 4-6

ப்ரெட் தூள் -2 டேபிள் ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 2 டீ ஸ்பூன்

முல்தானி மட்டி அல்லது ஃபுல்லர்ஸ் எர்த் போன்ற ஏதேனும் ஒரு க்ளே- 2 டேபிள் ஸ்பூன்

Monsoon beauty tips for all skin types

முதலில் ஸ்ட்ரா பெர்ரியை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் மற்ற பொருட்களை எல்லாம் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் போடவேண்டும். காய்ந்ததும் கழுவிடுங்கள்.

ஃபேஸியல் ஸ்க்ரப் :

அரிசி மாவு - 1 டீ ஸ்பூன்

பாதாம் பொடி - 1 டீஸ்பூன்

தயிர் -2 ஸ்பூன்.

மேலே சொன்னவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். தூங்கப் போகும் முன், இந்த ஸ்கரப்பை முகத்தில் தேய்க்கவும். அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். தினமும் இரவில் செய்யுங்கள்.

Monsoon beauty tips for all skin types

சந்தன பேக் :

அரைத்த சந்தனம் -1 டேபிள் ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - கால் கப்

மஞ்சள் - அரை ஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து முகத்தில் தேய்க்கவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

Monsoon beauty tips for all skin types

ஓட்ஸ் ஸ்கர்ப் :

ஓட்ஸ் - 3 டீ ஸ்பூன்

முட்டைவெள்ளைக் கரு - 1

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

தயிர் - 1 டீ ஸ்பூன்

மேலே சொன்ன எல்லாபொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் முகத்தை சுத்தமாக கழுவியபின். இந்த கலவையை முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் காய விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

Monsoon beauty tips for all skin types

வாழைப்பழ பேக் :

புதினா இலைகள்- கைப்பிடி

வாழைப்பழம் - 1

புதினா இலையை பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை மசித்து அதனுடன் புதினா பேஸ்டை கலந்து முகத்தில் பேக் போல போடுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவுங்கள்.

Monsoon beauty tips for all skin types

இலந்தை எண்ணெய் பேக் :

இலந்தை எண்ணெய் (ஜொஜொபா) - 3 டீ ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

தேன்- 1 ஸ்பூன்

மேலே சொன்னவற்றை ஒன்றாக கலந்து, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தேய்த்து காய விடுங்கள்.பின்னர் முகத்தை கழுவிக்க் கொள்ளலாம். மழைக்காலத்தில் வறண்ட சருமட்தில் அற்புதமாக வேலை செய்யும் பேக் இது.

Monsoon beauty tips for all skin types

முள்ளங்கி பேக் :

முள்ளங்கி - துருவியது கால் கப்

எலுமிச்சை சாறு -

Monsoon beauty tips for all skin types

முல்லங்கியை அரைத்து கால் கப் எடுத்த்துக் கொள்ளுங்கள். அதில் சில எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பேக்காக போடவும் 10 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவவும்.

English summary

Monsoon beauty tips for all skin types

Monsoon beauty tips for all skin types
Please Wait while comments are loading...
Subscribe Newsletter