கழுத்திலுள்ள கருமையை போக்க புதினாவை பயன்படுத்தலாம் !! எப்படி தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

புதினா என்றாலே புத்துணர்ச்சிதான். அதோடு புதிய என்ற பெயர் அதன் பெயரிலேயே கொண்டுள்ளது. அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் வீட்டமின் சியை கொண்டுள்ளது.

How to get rid of dark neck

இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அதே போல் சருமத்திர்கும் நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம். எப்படியென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுத்தில் கருமை மறைய :

கழுத்தில் கருமை மறைய :

தேவையானவை :

புதினா சாறு

எலுமிச்சை சாறு

தயிர்

இது இயற்கை முறையில் ப்ளீச் செய்கிறது. சோர்வு மற்றும் பொலிவிழந்த சருமத்தை உடனடியாக பளிச்சிட செய்கிறது.

புதினா சாறு தயிர் தலா 1 ஸ்பூன் எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்தில் தடவினால் கருமை மறைந்துவிடும். தினமும் உபயோகப்படுத்தலாம்.

தலைமுடி வளர்ச்சி அதிகரிக்க :

தலைமுடி வளர்ச்சி அதிகரிக்க :

இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டி, பொடுகை தடுக்கும். புதினா எண்ணெய் சில துளி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் மசாஜ் செய்யவும்.

முகப்பரு :

முகப்பரு :

முகப்பரு இருக்குமிடத்தில் செயல் புரிந்து கிருமிகளை அழிக்கிறது. முகப்பரு மீது தடவுங்கள். ஆனால் முகப்பரு உடைந்திருந்தால் அதன் மீது த்டவ வேண்டாம். ஏனென்றால் இது பாதிப்பை அதிகப்படுத்தும்.

ஃபேஸியல் ஸ்க்ரப் :

ஃபேஸியல் ஸ்க்ரப் :

நாட்டு சர்க்கரை 1 ஸ்பூன் , ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் அதனுடன் புதினா சாறு 2 ஸ்பூன் கலந்து ஸ்கரப்பாக முகத்தில் தெய்த்தால் அழுக்கு, இறந்த செல்கள் வெளியேறி சருமம் ஜொலிக்கும்.

சுருக்கம் மறைய :

சுருக்கம் மறைய :

ஆப்பிள் சைடர் வினிகருடன் புதினா சாறு மற்றும் நீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவிவிடலாம். இதனால் சுருக்கங்கள் காணாமல் போய்விடும், இளமையான சருமம் கிடைக்கும்.

வறண்ட கூந்தலுக்கு :

வறண்ட கூந்தலுக்கு :

ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து அதனுடன் புதினா எண்ணெய் சில துளி கலந்து தலையில் த்டவி மசாஜ் செய்தால் வறண்ட கூந்தல் பொலிவு பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get rid of dark neck

Mint helps to remove dark around neck.using methods are provided here.
Story first published: Monday, November 14, 2016, 18:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter