Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
முகப்பொலிவு அதிகரிக்க வார இறுதி நாட்களில் இந்த பழங்களைக் கொண்டு மாஸ்க் போடுங்க...
நாம் அடிக்கடி வாங்கி சாப்பிடும் பழங்களைக் கொண்டு பராமரித்து வர, சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை வேகமாக மறையும். முகப்பொலிவை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் இதோ!
முகப்பொலிவை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தாமல், நற்பதமான பழங்களைக் கொண்டு பராமரித்து வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்படும். அதுவும் நாம் அடிக்கடி வாங்கி சாப்பிடும் பழங்களைக் கொண்டு பராமரித்து வர, சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை வேகமாக மறையும்.

இங்கு முகப்பொலிவை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை வார இறுதி நாட்களில் முகத்திற்கு போட்டால், சோர்ந்திருக்கும் முகத்தை பிரகாசமாக்கலாம்.

வாழைப்பழம்
வறட்சியான சருமத்தினருக்கு வாழைப்பழம் மிகவும் சிறந்தது. இது சருமம் அதிகம் வறட்சியடைவதைத் தடுக்கும்.
அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, சிறிது தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் கோலின் பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சரும பொலிவு அதிகரிக்கும்.

ஆரஞ்சு
எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஆரஞ்சு பழம் உகந்தது. அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாற்றுடன் 1 ஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காலமைன் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

ஆப்பிள்
நார்மல் சருமத்தினருக்கு ஆப்பிள் பழம் நல்லது. ஆப்பிள் சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும். எனவே ஆப்பிளை அரைத்து, அத்துடன் பால், பால் பவுடர் மற்றும் முல்தானி மெட்டி போன்றவற்றை சேர்த்துக் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் pH அளவை தக்க வைப்பதோடு, சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும்.

ஸ்ட்ராபெர்ரி
காம்பினேஷன் சருமம் உள்ளவர்களுக்கு ஸ்ட்ராபெர்ரி பழம் மிகவும் நல்லது. அதற்கு ஸ்ட்ராபெர்ரி மற்றும் சிறிது புதினாவை ஒன்றாக அரைத்து, அத்துடன் கோலின் பவுடர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் இருக்கும்.

இளநீர்
இளநீர் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இந்த வகையான சருமத்தினர் தங்கள் சருமத்திற்கு எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் பயன்படுத்த முடியாது. ஒருவேளை பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.
ஆகவே 1 டேபிள் ஸ்பூன் இளநீரில், 2 டேபிள் ஸ்பூன் காலமைன் பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5-7 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.



Click it and Unblock the Notifications
