கண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் !!

Written By:
Subscribe to Boldsky

கண்களைச் சுற்றிலும் மிக மென்மையான சருமம் காணப்படும்.

வயதாகாவிட்டாலும் சிலருக்கு எளிதில் சுருக்கம் உண்டாகும் அதற்கு மிக முக்கிய காரணம் கண்களில் உண்டாகும் வறட்சியே.

Home remedies to get rid of crow's feet

அதோடு சரியான அளவு நீர் குடிக்காத போதும் கண்களில் சுருக்கம் உண்டாகிவிடும்.

காபி டீ அதிகமாக குடிக்கும்போது நீர்சத்துக்கள் குறைந்து கண்களில் விரைவில் சுருக்கம் உண்டாகிவிடும். இந்த சுருக்கங்களை போக்க முக்கியமாக அதிக நீர் அருந்துங்கள்.

அதன்பின்னர் சரும வறட்சியையும் சுருக்கங்களையும் சரிப்படுத்தும் விதமாக இங்கே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தினால் சுருக்கங்கள் மறைந்து கண்கள் அழகாய் பளிச்சிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கோகோ பட்டர் :

கோகோ பட்டர் :

கோகோ பட்டர் கோகோ கொட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. இது சுருக்களை மறையச் செய்யும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் இரவில் கோகோ பட்டரை சிறிது எடுத்து கண்களைச் சுற்றிலும் லேசாக பூசி மசாஜ் செய்துவிட்டு படுங்கள். சில நாட்களிலேயே சுருக்கங்கள் மறைந்துவிடும்.

ஷியா பட்டர் :

ஷியா பட்டர் :

இதுவும் வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தப்படுவது. ஷியா பட்டர் சருமத்தை மென்மைப்படுத்தி ஈரப்பதம் அளிக்கும். கண்களைச் சுற்றில் தினமும் இரு வேளை பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும்.

பெட்ரோலியம் ஜெல்லி :

பெட்ரோலியம் ஜெல்லி :

பெட்ரோலியம் ஜெல்லி வெடிப்புகளையும் சரும பாதிப்புகளையும் சரிப்படுத்தும். கண்களைச் சுற்றிலும் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சுருக்கங்களை எளிதில் மறையச் செய்யலாம்.

ஜுஜுபா எண்ணெய் :

ஜுஜுபா எண்ணெய் :

இது பலவித அழகு சாதனக் க்டைகளிலும் ஆயுர்வேத கடைகளிலும் கிடைக்கும். இது மிகவும் சென்ஸிடிவான சருமத்திற்கும் ஏற்றது. சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் அளிக்கும்.

கற்றாழை :

கற்றாழை :

இது சருமத்தால் விரைவில் உறிஞ்சப்படும். துரிதமாய் அதன் பாதிப்புகளை சரி செய்து கண்களை இளமையாக்குகிறது. கற்றாழையின் சதைப் பகுதியை தினமும் தடவி வாருங்கள்.

வெள்ளரி சாறு :

வெள்ளரி சாறு :

வெள்ளரி சுருக்கங்களை மறையச் செய்யும். கண்களில் காணப்படும் கருவளையத்தையும் காணாமல் போகச் செய்யும். வாரம் 3 நாட்கள் வெள்ளரிச் சாறை எடுத்து கண்களில் தடவி காய்ந்ததும் கழுவவும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies to get rid of crow's feet

Home remedies to get rid of Crow's feet that gives you amazing results
Story first published: Monday, October 10, 2016, 14:40 [IST]
Subscribe Newsletter