மெத்தென்ற பாதம் கிடைக்க எளிமையான டிப்ஸ் !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

என்னதான் முகம் ராஜ குமாரியாக ஜொலித்தாலும், பாதத்தில் கரடுமுரடாக வெடிப்பு இருந்தால், அழகு எடுபடாது. அருவருப்பாய்தான் உள்ளுக்குள் நினைப்பார்கள். பாதங்கள் மென்மையான மெத்தென்று இருந்தால் தனி அழகை கொடுக்கும்.

பாதத்தில் வெடிப்பு மீண்டும் மீண்டும் வரக் கூடியது. இதனாலேயே சோர்ந்து போய் பெரும்பாலோனோர் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் பார்லரில் பெடிக்யூர் செய்து கொள்வார்கள். அது தவறு. தினமும் பராமரிக்க வேண்டும்.

அதிக குளிர்ந்த தரையென்றால் எளிதில் வெடிப்பு வரும். ஆதலால் பெரும்பாலும் சாக்ஸ் போட்டே வீட்டிலிருங்கள். வெடிப்பே வராது. அது தவிர சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் உபயோகித்தால் வெடிப்பெ எட்டிப்பார்க்காதவாறு செய்துவிடலாம். எப்படி என தெரிந்து கொள்ளலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெடிப்புகள் மறைய :

வெடிப்புகள் மறைய :

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.

உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

பப்பாளி :

பப்பாளி :

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

 வேப்பிலை :

வேப்பிலை :

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும்.

 வெடிப்பு வராமல் தடுக்க :

வெடிப்பு வராமல் தடுக்க :

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

 வெடிப்பு வராமல் தடுக்க :

வெடிப்பு வராமல் தடுக்க :

சுடு நீரில் சிறிது சமையல் சோடா எலுமிச்சை சாறு சிறிது ஷாம்பு கலந்து அதில் உங்கள் கால்களை அமிழ்த்துங்கள். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக பாதத்த்தை தேயுங்கள். இப்படி வாரம் இருமுறை செய்தால் வெடிப்பு வராது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Home remedies to cure Heel Crack

Follow these Tips to get rid of Heel crack.
Story first published: Saturday, August 27, 2016, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter