Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
இந்த ஹெர்பல் ஆவி பிடிப்பதால் என்ன பயன் தெரியுமா?
முகத்திற்கு தேவையான போஷாக்கை அளித்தால் முகம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்கும். ஆவி பிடிப்பதால் அழுக்குகள் வெளியேறி, சருமம் சுவாசிக்கும். முகப்பருக்கள், கிருமிகள் தடுக்கப்படும்.
சருமத்துளைகளின் வழியாக எண்ணற்ற தூசுக்கள் மற்றும் அழுக்குகள், க்ரீம்கள் படிந்திருப்பது நம் கண்ணிற்கு தெரியாது. அவைகள்தான் நமது சுருக்கத்திற்கு காரணம்.
இறந்த செல்கள் வெளியேற முடியாமல் அங்கேயே தங்கி விரைவில் முதுமை தோற்றத்தை தந்துவிடும்.

அதனால் வறண்ட சருமம் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை, எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஆவி ஆவி பிடித்தால் உங்கள் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, சுத்தமாகவும் இள்மையகவும் இருக்கும். அவ்வாறான ஹெர்பல் ஆவி முறையைப் பற்றி இங்கு காண்போம்.

தேவையானவை :
நீர்
ரோஜா எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய்
தேயிலை மர எண்ணெய்
சாமந்தி பூ எண்ணெய்
எலுமிச்சை தோல் - துறுவியது.

செய்முறை :
முதலில் சுத்தமான நீரை கொதிக்க வையுங்கள். நன்றாக கொதிக்கும் நிலை வந்தவுடன் அடுப்பை குறைத்து ரோஜா எண்ணெயை 3 துளி விடவும்.

செய்முறை :
அதன் பின் எலுமிச்சை துறுவலை சேர்க்கவும். எலுமிச்சை வாசனை வரும் வரை காத்திருங்கள்.

செய்முறை :
பின்னர் லாவெண்டர் மற்றும் சாமந்தி பூ என்ணெயை 3 துளிகள் மற்றும் தேயிலை மர எண்ணெயை விடவும்.

செய்முறை :
ஒரு நிமிடத்திற்கு பிறகு இந்த நீரை இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி ஆவி பிடிக்க வேண்டும்.

செய்முறை :
அந்த நீரின் சூடு குறையும் வரை ஆவிபிடித்த பின் பருத்தி துண்டினால் முகத்தை ஒத்தி எடுங்கள். பின்னர் மாய்ஸ்ரைஸர் க்ரீன் அல்லது தேங்காய் என்ணெய் தடவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
