வயதான தோற்றத்தை தடுக்கும் ஆன்டி ஆஜிங் க்ரீம்கள் நிஜமாகவே பயனுள்ளதா?

Posted By: Hemalatha
Subscribe to Boldsky

இந்த க்ரீமை பயன்படுத்தினால் 10 வயது குறைந்து காண்பீர்கள். இளமையாக இருக்கலாம் என்ற ரீதியில் நிறைய கம்பெனிகள் தங்களது க்ரீம்களை மார்கெட்டிங்க் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இவை நிஜமாகவே பயன் தருமா? எப்படி அவை வயதான தோற்றத்தை தள்ளிப் போடுகிறது என ஆயிரம் கேள்விகள் உங்களுக்கு வரலாம்.

Does anti-aging cream work against aging proces

அதற்கான பதிலை சரும மருத்துவரும், சரும மருத்துவ மையத்தின் மெடிக்கல் டைரக்டருமான, சிரிஷா சிங் என்பவர் கூறுகிறார் கேளுங்கள்.

வயதான தோற்றம் வருவது எப்படி?

முதுமை என்பது நம் உடலில் நடக்கும் மெதுமெதுவான மிக நுட்பமான மாற்றங்கள். 30வயது ஆரம்பங்களில் தோலிற்கு அடியிலுள்ள கொழுப்புகள் மெதுவாய் கரைய ஆரம்பிக்கும்.

இதனால் முகத்திலுள்ள சருமம் தளர்ந்து.தொங்க ஆரம்பிக்கும். சருமம் மிருதுவாகிவிடும். மெல்லிய கோடுகள் நெற்றி கன்னங்களில் விழ ஆரம்பிக்கும். கண்களுக்கு அடியில் சதைப்பை, மற்றும் புருவம் தொங்குதல் என தெரிய ஆரம்பிக்கும்.

பின்னர் முகத்தில் உள்ள குருத்தெலும்புகள் தேயும்போது, மூக்கின் வடிவம், தாடையின் வடிவம் மாற ஆரம்பிக்கும். இப்படிதான் வயதான தோற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

Does anti-aging cream work against aging proces

இது நாம் சாப்பிடும் உணவு, சரியான தூக்கம் மகிழ்ச்சியான மன நிலை ஆகியவற்றை பொறுத்து இது ஒருவருக்கொருவர் மாறுபடும்.

முதுமை அடைவதில் ஆசிய மக்களுக்கும்,ஐரோப்பிய மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. ஆசிய மக்களுக்கு 20 களில் முகப்பரு, கரும்புள்ளி போன்ற சரும பிரச்சனைகளும், 40 களில் சுருக்கங்கள் வருவதுமாக இருக்கும்.

ஆனால் ஐரோப்பிய மக்களுக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடும்.

ஆன்டி ஆஜிங் க்ரீம் வயதாவதற்கு எதிராக எவ்வாறு செயல்படும் :

ஆன்டி ஆஜிங் க்ரீம்களில், ரெட்டினால்,பெப்டைட்,அமினோ அமிலங்கள், விட்டமின்கள், ஸ்டெம் செல் மற்றும் நிறைய மூலிகை சாறுகளை கலந்து செய்கிறார்கள்.

இவை தோலின் மேல் புறத்தி செயல்படுமே தவிர, தோலிற்கு உட்புறத்தில் இருக்கும் கொழுப்பு செல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாது.

Does anti-aging cream work against aging proces

இவை மேலோட்டமாக பூசி மறைப்பது போலத்தான் செயல்படும். ஆனால் நிஜமாக முதுமையை தள்ளிப் போடச் செய்யாது. நீங்கள் ஆன்டி ஆஜிங் க்ரீம்களை உபயோகப்படுத்துவதை நிறுத்தினால் உங்கள் முகத்தில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிப்பதை உணர்வீர்கள்.

ஆகவே விளம்பரங்களிலும், கடைகளிலும் சொல்வது போல் முதுமையை தள்ளிப்போடும் ஆன்டி ஆஜிங் க்ரீம்கள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களே. இளமையை உள்ளிருந்து தரும் போஷாக்கினால் நீட்டிக்கச் செய்யலாம். அது மரபு சார்ந்தும் இருக்கலாம்.

இருப்பினும் ஆன்டி ஆஜிங் க்ரீம்கள் ஓரளவிற்கு பயன் தருவதால் உபயோகப்படுத்தலாம். ஆனால் அவற்றை தகுந்த சரும மருத்துவரிடம் ஆலோசித்து, தரம் வாய்ந்தவற்றையே உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

English summary

Does anti-aging cream work against aging proces

Does anti-aging cream work against aging proces
Please Wait while comments are loading...
Subscribe Newsletter