ஏசி அறையில் ஏன் தூங்கக் கூடாது என்று தெரியுமா? இந்த தவறுகள்தான் சரும முதிர்ச்சிக்கு காரணம்

Written By:
Subscribe to Boldsky

எத்தனை வயதானாலும் சிலர் இளமையாகவே இருப்பார்கள். சிலர் இளம் வயதிலேயே வயதான தோற்றம் பெறுவார்கள். இதற்கு அவர்களின் உணவு முறைதான் முக்கிய காரணம். மரபு இரண்டாம் பட்சம்தான்.

Common Mistakes that spoil your skin

நீங்கள் செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள் அழகை பாதிக்கிறது. முதுமையை தருகிறது என தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பு உணவை குறைப்பது :

கொழுப்பு உணவை குறைப்பது :

கொழுப்பே இல்லாமல் சாப்பிடுவது தவறு. ஹார்மோன் சுரப்பிற்கு மட்டுமல்லாது உங்கள் உள்ளுறுப்புகளை பாதுகாக்கவும் சருமத்தை ஊட்டமாகவும் வைக்க கொழுப்பு மிக அவசியம்.

அளவுக்கு அதிகமான கொழுப்புதான் கேடு. ஆனால் உடல் எடை குறை வேண்டுமென கொழுப்பே இல்லாமல் சாப்பிட்டால் விரைவில் முதிர்ச்சியான தோற்றம் பெறுவீர்கள்.

அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வது :

அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வது :

கம்ப்யூட்டர் மேசையில் ஊன்றியபடி கூன் விழுந்தபடி அமர்வது உங்கள் உடல் தோற்றத்தை பாதிக்கும். எலும்புகள் குறிகி த்சைகள் தளர ஆரம்பிக்கும். உங்கள் உடல் தோற்றம் முதுமையை காட்டும்.

5 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் :

5 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் :

குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கத்தை குறைத்து வேலை செய்வது அல்லது பொழுதை கழிப்பது செல் வளர்ச்சியை பாதிக்கும். செல் இறப்பு அதிகம் உண்டாகும் விளைவு முதுமையான தோற்றம்.

ஸ்ட்ரா வைத்து குடிப்பது :

ஸ்ட்ரா வைத்து குடிப்பது :

ஜூஸ் அல்லது எதை குடித்தாலும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிப்பது தவறு. இது வாயை சுற்றிலும் அதிக சுருக்கம் உண்டாக்கிவிடும். புகைபிடிப்பதும் ஒரு காரணம்.

அதிக நேரம் டிவி பார்ப்பது :

அதிக நேரம் டிவி பார்ப்பது :

நீண்ட நேரம் அமர்ந்தபடியே டிவி பார்ப்பது இளமையை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சூரிய ஒளி படாமல் இருப்பது :

சூரிய ஒளி படாமல் இருப்பது :

சூரிய ஒளி படாமலே இருந்தாலும் உங்கள் சருமம் பாதிப்படையும். அதிகாலை சூரிய ஒளியில் 10 நிமிடங்களாவது நிற்க வேண்டும்.

அதே சமயம் சக்தி வாய்ந்த புற ஊதாக்கதிர்கள் அதிகம் தாக்கும் மதிய வெயிலில் அதிக நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை சரும செல்களை அழிக்கும். அந்த மாதிரி சமயத்தில் சன் ஸ்க்ரீன் லோஷன் போடுவது நல்லது.

அதிக மேக்கப் :

அதிக மேக்கப் :

நமது சரும செல்களை சுவாசிக்க முடியாமல் எப்போதும் மேக்கப்புடன் இருந்தால் விரைவில் முதுமையான தோன்ற்றம் வந்துவிடும். சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை சுரக்கவிடாமல் தடுத்து சுருக்கங்களை வர வைத்துவிடும்.

இனிப்பு அதிகம் சாப்பிடுகிறீர்களா?

இனிப்பு அதிகம் சாப்பிடுகிறீர்களா?

அதிக இனிப்பை சாப்பிட்டால் உங்கள் வயதை கூட்டுகிறீர்கள் என அர்த்தம். சரும செல்களை பாதிக்கும். கண்களை சுற்றி வீக்கம், தளர்வான சருமம் ஆகிய்வற்றை இனிப்புகல் உருவாக்கும்.

ஒரே பக்கத்தில் படுப்பது :

ஒரே பக்கத்தில் படுப்பது :

ஒரே பக்கத்தில் படுத்தால் கன்னம் மற்றும் நாசி படுக்கையில் அழுந்தும்போது செல்லிறப்பு அதிகரித்து சுருக்கம் உண்டாகிவிடும். ஆகவே தலையணை அல்லது படுக்கையில் முகம் அழுந்த படுக்காதீர்கள்.

சில்லிடும் ஏசியில் படுப்பது :

சில்லிடும் ஏசியில் படுப்பது :

சில்லென்ற குளு குளு நிலையில் படுப்பது உங்கள் சருமத்தை அதிக வளர்ச்சியை உண்டாக்கிவிடும். வெதுவெதுப்பான நிலையே சருமத்தில் இயற்கை எண்ணெய் சுரக்கவும், மென்மையான சருமம் பெறவும் உதவும்.

மன அழுத்ததுடன் இருப்பது :

மன அழுத்ததுடன் இருப்பது :

எப்போதும் கவலைகளை சுமந்தபடி இருந்தால் அவை முகத்தில் பிரதிபலிக்கும். ஆகவே மன அழுத்தம் மற்றும் வேலை அழுத்தத்திலிருந்து விடுபட மனதிற்கு பிடித்தபடி மகிழ்ச்சியாய் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Mistakes that spoil your skin

Did you know that these 10 Miskates make your age faster.
Subscribe Newsletter