பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகள் எவை?

By: Srinivasan P M
Subscribe to Boldsky

பொதுவாக அழகு சார்ந்த பல பொரச்சனைகள் உங்களுக்கும் தோன்றிக் கொண்டிருக்கிறதா? எங்களிடம் தீர்வு உண்டு என்றாலும் இதற்கு நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம்.

இதில் ஒரே நாளில் மாயமாய் மறையச் செய்கின்ற மந்திரம் ஏதும் இல்லையென்றாலும் அந்த பிரச்சனை தீரும் என்று நிச்சயம் நீங்கள் நம்பலாம்.

common beauty problems that all women face

உண்மையில் ஒவ்வொருவருக்கும் குறைகள் இருக்கும். அவற்றை ஏற்றுக்கொண்டு நிம்மதியாக இருப்பதில் தான் அழகு என்பது உள்ளது.

எனவே இது போன்ற பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அவற்றிற்கான தீர்வு என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ரெச் மார்க் :

ஸ்ட்ரெச் மார்க் :

உடலெங்கும் வெளிறிய நிறமாற்றம் அடைந்த திட்டுத்திட்டாக புள்ளிகள் ஏறக்குறைய அனைத்து பெண்களுக்குமே வரக்கூடியது. சில ஆண்களுக்கும் கூட வரும்.

இது கொழுப்பு செல்கள் சிதைவதால் திசுக்களில் உண்டாகும் பாதிப்பாகும். இதனை சரி செய்ய நல்லெண்ணெயில் மஞ்சள் கலந்து உபயோகிக்கலாம். அல்லது தினமும் விட்டமின் ஈ எண்ணெயை உபயோகித்தால் நல்ல பலன் கிட்டும்.

 பரு:

பரு:

பரு ஒரு பொதுவான பிரச்சனைதான். வளரும் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்சனைதான் இது. இது தழும்புகளை குறிப்பாக அதிகம் தொடவோ தேய்க்கவோ அல்லது கிள்ளவோ செய்யும்போது ஏற்படுத்தும்.

அதன் மீது கற்றாழை சாற்றை தடவினால் அவற்றின் கடுமை குறைந்து அதனை குணப்படுத்தும்.

கண் சுருக்கங்கள் :

கண் சுருக்கங்கள் :

கண்களில் ஓரத்தில் வரும் சுருக்கங்கள் முதுமை துவங்குவதால் காரணமாக ஏற்படுவது. இது மிகவும் சென்ஸிடிவான பகுதி என்பதால் அதிக ஈரப்பதம் தேவைப் படுகிறது.

எனவே ஒரு நல்ல கண் க்ரீமை தேர்ந்தெடுத்து பயன்படுத்திவந்தால் இந்த பிரச்சனையைக் குறைக்கலாம்.

கருவளையங்கள்:

கருவளையங்கள்:

கடுமையான உழைப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக கண்களுக்கு கீழ் ஏற்படும் பாதிப்பு இது. வெள்ளரிச் சாறு போன்ற இயற்கை வைத்தியங்கள் இந்த பிரச்னையை ஒரு வார காலத்திற்குள் போக்கும் என்பதால் இது பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

செல்லுலைட்:

செல்லுலைட்:

செல்லுலைட் எனப்படும் சருமத் தடிப்புகள் ஒரு பொதுவான பரவலாகக் காணப்படும் பிரச்சனையாகும். இது கொழுப்பு சேர்வதினால் ஏற்படுகிறது.

இதன் மீது பிரஷ் கொண்டு தடவுவதும் காபி ஸ்க்ரூப் போடுவதும் இந்த முடிவில்லா பிரச்னைக்கு ஓரளவு பலன் தரும்.

முடி நுனிகள் வெடிப்பு

முடி நுனிகள் வெடிப்பு

இந்த வெடிப்பு அதிக முடிகளில் ஏற்படும்போது வெளிப்படையாகத் தெரியக்கூடியது. எனினும் முட்டையின் வெள்ளைக் கருவை முடிகளில் பயன்படுத்தினால் இந்த பிரச்னையை கொஞ்சம் சமாளிக்கலாம்.

 வறண்ட பொலிவில்லா முடி

வறண்ட பொலிவில்லா முடி

மிக அதிக அல்லது மிகக் குறைந்த ஈரப்பதத்தினால் இந்த பிரச்சனை ஏற்படலாம். இதனை தவிர்க்க தொடர்ந்து முடியை பராமரித்து வலுவூட்டுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

common beauty problems that all women face

common beauty problems that all women face
Story first published: Wednesday, November 23, 2016, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter