அடர்த்தியான புருவத்தை தரும் கற்றாழை சீரம்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பெண்களுக்கு அடர்த்தியான புருவமும், பெரிய இமைகளை கொண்ட கண்களும் மிக அழகான ஒரு தோற்றத்தை தரும். புருவமே இல்லாமல் பெரிய கண்களுடன் இருந்தால் அழகு கொஞ்சம் குறைந்துதானிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நிறைய பேருக்கு, பிறந்தது முதலே புருவங்கள் சரிவர வளர்ச்சி இருக்காது. அதற்காக அப்படியே விட வேண்டுமென்பதில்லை. போதிய பராமரிப்பு கொடுத்தால் நிச்சயம் மற்றவர்களைப் போல உங்களுக்கும் அடர்த்தியான வில் போன்ற புருவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை

Aloe vera serum for thin eyebrows
.

அப்படியொரு குறிப்பு இங்கே தரப்பட்டுள்ளது. உபயோகித்து பாருங்கள். பின்னர் உங்கள் பலனை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

தேவையானவை :

விளக்கெண்ணெய் - அரை டீஸ்பூன்

விட்டமின் ஈ எண்ணெய் - 2 கேப்ஸ்யூல்,

சோற்றுக் கற்றாழை சதைப்பற்று- 1 டேபிள் ஸ்பூன்

வாசலின் - 1 டேபிள் ஸ்பூன்

Aloe vera serum for thin eyebrows

விளக்கெண்ணெய் புருவத்தில் முடி வளர்ச்சியை தூண்டும். விட்டமின் ஈ மற்றும் வாசலின் அங்கே ஈரப்பதம் அளித்து, சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மிருதுவாக்கும். சோற்று கற்றாழை முடி வளர்ச்சியை தூண்டி புருவத்தை அடர்த்தியாக வளர்ச் செய்யும்.

Aloe vera serum for thin eyebrows

செய்முறை :

முதலில் விளக்கெண்ணெயில் விட்டமின் ஈ எண்ணெயை கலந்து, பின் சோற்றுக் கற்றாழை மற்றும் வாசலினை சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Aloe vera serum for thin eyebrows

இந்த க்ரீமை தினமும் இரவு தூங்குவதற்கு முன், புருவத்திலும் இமையிலும் தடவிவிட்டு தூங்குங்கள். க்ரீமை தடவதற்கு முன் புருவத்தின் முடிகளை லேசாக கிள்ளி விடுங்கள். இதனால் க்ரீம் தடவும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எளிதில் உறியப்படும். வளர்ச்சியையும் தூண்டும்.

English summary

Aloe vera serum for thin eyebrows

Aloe vera serum for thin eyebrows
Subscribe Newsletter