யுனானி மருத்துவ முறைப்படி முகப்பருக்களைப் போக்குவது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பருவைப் போக்க ஏராளமானோர் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். குறிப்பாக முகப்பரு எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் வரும். சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தாலே, பருக்கள் வந்துவிடும்.

பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்!!!

எனவே எண்ணெய் பசை சருமத்தினர் தங்களின் முகத்தில் உள்ள எண்ணெய் பசையைப் போக்குவதற்கு ஆயுர்வேதம், சித்த, ஹோமியோபதி என்று எத்தனையோ மருத்துவ முறைகளைப் பின்பற்றியிருப்பார்கள். ஆனால் யுனானி மருத்துவ சிகிச்சையை பின்பற்றி இருக்கமாட்டார்கள். உண்மையிலேயே யுனானி மருத்துவம் முகப்பருவிற்கு நல்ல தீர்வை வழங்கும்.

முகப்பருவைப் போக்கும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்!!!

இப்போது யுனானி மருத்துவ முறையில் முகப்பருவைப் போக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்ப்போம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவாய் மீன் எலும்பு (cuttlefish bone)

கணவாய் மீன் எலும்பு (cuttlefish bone)

கணவாய் மீன் எலும்பை எடுத்துக் கொண்டு, ஒரு கல்லில் தண்ணீர் சேர்த்து தேய்த்து கிடைக்கும் பேஸ்ட்டை முகப்பரு மீது வைத்து உலர வைக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு, முட்டை ஓடு மாஸ்க்

ஆரஞ்சு, முட்டை ஓடு மாஸ்க்

6 கிராம் உலர்ந்த ஆரஞ்சு தோல், முட்டை ஓடு, பார்லி, கடலைப் பருப்பு, ஸ்டார்ட், பாதாம் கெர்னல் போன்றவற்றை அரைத்து பொடி செய்து கொள்ளவும். பின் தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது முகப்பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், பருக்கள் விரைவில் அகலும்.

ஆப்பிள் மற்றும் தேன்

ஆப்பிள் மற்றும் தேன்

ஆப்பிளை துருவி, சிறிது தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் போய்விடும்.

ஓட்ஸ், தேன் மற்றும் தண்ணீர்

ஓட்ஸ், தேன் மற்றும் தண்ணீர்

ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் பொடி மற்றம் விளக்கெண்ணெய்

பாதாம் பொடி மற்றம் விளக்கெண்ணெய்

பாதாம் பொடியை விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் பருக்கள் இருந்தால் சீக்கிரம் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unani Medicine For Acne Treatment

Here are some unani medicine for acne treatment. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter