For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேக்கிங் சோடா கொண்டு கரும்புள்ளிகளைப் போக்குவது எப்படி?

By Maha
|

பெரும்பாலானோர் கரும்புள்ளி மற்றும் வெள்ளைப்புள்ளியால் அவஸ்தைப்படுவார்கள். இவைகள் பெரும்பாலும் மூக்கைச் சுற்றி, தாடையைச் சுற்றி தான் இருக்கும். மேலும் இவை அவ்விடத்தைக் கருமையாகவும், வெள்ளையாகவும் வெளிக்காட்டும். இவற்றை சரியான பராமரிப்புக்களின் மூலம் போக்க முடியும்.

கரும்புள்ளிகள் வருவதற்கு முறையான சரும பராமரிப்பு இல்லாமை, மோசமான உணவுகள், மாசடைந்த சுற்றுச்சூழல், சருமத்தில் எண்ணெய்ப்பசை இல்லாமை போன்றவை தான் காரணம். இந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க பல சமையலறைப் பொருட்கள் உள்ளன. அதில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரக்கூடியது தான் பேக்கிங் சோடா.

பேக்கிங் சோடா அந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை வேரோடு வெளியேற்றி, இறந்த செல்களையும் நீக்கிவிடும். அதற்கு அந்த பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்துவது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி, வாரம் ஒருமுறை பேக்கிங் சோடா கொண்டு பராமரிப்பு கொடுத்தால், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்ததும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவ வேண்டும்.

பேக்கிங் சோடா மற்றும் தக்காளி ஜூஸ்

பேக்கிங் சோடா மற்றும் தக்காளி ஜூஸ்

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களுக்கு இப்பிரச்சனை அதிகம் இருந்தால், வாரத்திற்கு 2 முறை செய்து வரலாம்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை ஜூஸ்

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை ஜூஸ்

பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வர, எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் அமிலம் விரைவில் கரும்புள்ளிகள் வெளியேறச் செய்யும். ஆனால் இம்முறை சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றதல்ல.

பேக்கிங் சோடா மற்றும் தேன்

பேக்கிங் சோடா மற்றும் தேன்

பேக்கிங் சோடா மற்றும் தேனை சரிசமமாக எடுத்துக் கொண்டு, ஒன்றாக கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து நீரில் கழுவி, சருமத்துளைகள் திறக்கப்பட்டு அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, கரும்புள்ளிகளும் போய்விடும்.

பேக்கிங் சோடா மற்றும் பால்

பேக்கிங் சோடா மற்றும் பால்

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக 5 நிமிடம் ஸ்கரப் செய்து, சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை கூட மேற்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Baking Soda To Remove Blackheads

In this article, we at Boldsky are listing out some of the easy ways to get rid of blackheads. Read on, try it and notice the difference by yourself.
Story first published: Saturday, December 19, 2015, 11:01 [IST]
Desktop Bottom Promotion