ஒரே நாளில் முகப்பருக்களைப் போக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

முகப்பரு, ஒவ்வொருவரின் அழகையும் கெடுக்கும் ஒன்று. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினரை அதிக அளவில் தாக்கும் ஒன்றும் கூட. பொதுவாக இது எண்ணெய் பசை சருமத்தினருக்கும், உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்களுக்கும், எப்போதும் தூசிகள் நிறைந்த பகுதியில் நீண்ட நேரம் இருப்பதாலும் ஏற்படும்.

இத்தகைய பருக்கள் சிலருக்கு முகத்தில் ஆங்காங்கும், மற்றும் சிலருக்கு முகம் முழுவதும் இருக்கும். இந்த முகப்பருக்களைப் போக்குவதற்கு பலரும் பல க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் இயற்கை வழி தான் எப்போதுமே கைக்கொடுக்கும்.

அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளைப் போட்டால், ஒரே நாளில் போக்கலாம். சரி, இப்போது அந்த ஃபேஸ் பேக்குகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் மற்றும் ஆப்பிள்

தேன் மற்றும் ஆப்பிள்

1 ஆப்பிளை துருவி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பருக்கள் மறைய ஆரம்பிக்கும்.

ஓட்ஸ் மற்றும் துளசி

ஓட்ஸ் மற்றும் துளசி

சுடுநீரில் 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த துளசியை போட்டு ஊற வைத்து, குளிர வைக்க வேண்டும். அதே சமயம் 1/3 கப் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் அதனை துளசி ஊற வைத்த நீரில் போட்டு கலந்து கெட்டியாக பிசைந்து, முகத்தில் தடவி 3 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

தயிர் மற்றும் எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சையை ஒன்றாக கலந்து மாஸ்க் போட்டால், நிச்சயம் பருக்கள் நீங்கும். அதிலும் 2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை

முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை

முட்டையின் வெள்ளைக்கருவில் பாதி எலுமிச்சையை பிழிந்து கலந்து, வெயிலில் நின்று முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் பருக்கள் மறையும்.

பட்டை மற்றும் தேன்

பட்டை மற்றும் தேன்

ஒரு டீஸ்பூன் பட்டை பொடியில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தை நீரில் கழுவி, பருக்கள் மீது தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களை போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Homemade Overnight Acne Masks

Acne is a problem that causes  anxiety not only among teenagers, but among adults as well. Anyone faced with this problem knows  that to get the maximum effect , it is necessary to combine different treatments.
Story first published: Monday, June 1, 2015, 15:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter