Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் வாழைப்பழம்!
வருடம் முழுவதும் மிகவும் விலை குறைவில் கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம். மேலும் இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. இத்தகைய வாழைப்பழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே இதனை உட்கொண்டால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கொடுப்பதில் வாழைப்பழத்திற்கு இணை எதுவும் கிடையாது.
வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது நமது சருமத்தில் நன்கு புலப்படும். எனவே இந்த வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வருவதோடு, அதனைக் கொண்டு நமது சருமத்தைப் பராமரிக்கவும் வேண்டும். இங்கு சருமத்தைப் பராமரிக்க வாழைப்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

சரும வறட்சி நீங்க...
நன்கு கனிந்த வாழைப்பழத்தில் பாதியை மசித்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும்.

பொலிவான சருமம் பெற...
சருமம் பொலிவிழந்த காணப்பட்டால், மசித்த வாழைப்பழத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

கரும்புள்ளிகள் நீங்க...
மசித்த வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

சொரசொரப்பான சருமம் நீங்க...
வாழைப்பழத்தை மசித்து, அதில் சர்க்கரை சேர்த்து, அதனைக் கொண்டு முகத்தை வட்ட வடிவில் ஸ்கரப் செய்து, முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம் இறந்த செல்களால் சருமத்தில் ஏற்பட்ட சொரசொரப்பு நீங்கி, சருமம் மென்மையாகவும், வறட்சியடையாமலும் இருக்கும்.

முதுமை தோற்றத்தைத் தடுக்க...
மசித்த வாழைப்பழத்துடன், சிறிது அவகேடோவை மசித்து சேர்த்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் முதுமைத் தோற்றம் தடுக்கப்படும்.

வீக்கமடைந்த கண்களுக்கு...
காலையில் எழுந்த பின் உங்கள் கண்கள் வீங்கியுள்ளதா? அப்படியெனில் வீட்டில் வாழைப்பழம் இருந்தால், அதனை மசித்து, கண்களின் மேல் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் உடனே குறையும்.



Click it and Unblock the Notifications
