பளபளக்கும் ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும் 11 தயிர் ஃபேஸ் பேக்குகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

அழகாக இருப்பதென்றால் யாருக்கு தான் பிடிக்காது? தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் பெண்களும் சரி, ஆண்களும் சரி மிகவும் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்காக அவர்கள் எடுக்கும் மெனக்கெடல் சாதாரணமானது அல்ல. காரணம் அதற்காக அவர்கள் விரயமாக்குவது அவர்களின் பணமும் நேரமும்.

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதற்கு செலவழிக்க வேண்டாமா? அதனால் தான் பலரும் தங்கள் பணத்தை அழகு நிலையங்களில் கொட்டுகின்றனர். இன்னும் சிலரோ அழகு பொருட்களை வாங்கி குவிப்பதில் பணத்தை கொட்டுகிறார்கள்.

ஆனால் சிக்கனமான முறையில் கூட நாம் நம் அழகை மேம்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மை தான்! நம் சமயலறையில் உள்ள சில அருமையான பொருட்களை கொண்டே நாம் நம் அழகை பராமரிக்கலாம். இதற்காக நீங்கள் உங்கள் பணத்தை அழகு பொருட்களின் மீது கொட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. நம் வீட்டில் உள்ள பல பொருட்களை இதற்கு பயன்படுத்தினாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் தயிரினால் ஏற்படும் சரும பயன்களைப் பற்றி விரிவாகர் பார்க்கலாம்.

தயிர் என்ற அருமையான பொருளை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தலாம். பளபளக்கும், ஆரோக்கியமான, அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் சுத்தமான மற்றும் தெளிவான முகத்தைப் பெற வேண்டுமானால், இதோ உங்களுக்கான சில தயிர் ஃபேஸ் பேக்குகள்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெறும் தயிர்

வெறும் தயிர்

தயிருடன் சேர்த்து சில அருமையான பொருட்களை கலந்து தயார் செய்யப்படும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் உங்கள் சருமத்திற்கு நன்மையை அளிக்கும். அதனை பார்ப்பதற்கு முன், வெறும் தயிரை மட்டும் கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக்கைப் பற்றி பார்க்கலாம். தயிரில் அதிகளவிலான லாக்டிக் அமிலம் உள்ளது. இது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். மேலும் இதில் அதிகமான அளவில் வைட்டமின்களும், கனிமங்களும் அடங்கியுள்ளது. இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு மற்றும் நீர்ச்சத்தையும் அளிக்கும். சரும வெடிப்பு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இதிலுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் இயற்கையான நிவாரணத்தை அளிக்கும்.

தயிரை கொண்டு 10 நிமிடங்களுக்கு உங்கள் முகத்தை மசாஜ் செய்து, பின் அலசிடுங்கள். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்கள் நீக்கி, சருமத்தை வலுவளுப்பாக்கும். மேலும் உங்கள் வறண்ட சருமத்தை நீர்ச்சத்துடன் இருக்க வைத்து, சரும துவாரங்களை இறுக்கமாக்கும். இதையெல்லாம் தாண்டி, உங்கள் முகத்திற்கு ஆரோக்கியமான பொழிவை அளிக்கும்.

வெள்ளரிக்காய் + தயிர்

வெள்ளரிக்காய் + தயிர்

வெள்ளரிக்காய் மற்றும் தயிர் கலந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு அளித்திடும் புத்துணர்வு மற்றும் நீர்ச்சத்தை வேறு எதனால் கொடுத்து விட முடியும்? தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்க உதவும். இதுப்போக, பருக்களை எதிர்த்து போராடி, சரும பதனிடுதலையும் நீக்கும்.

துருவப்பட்ட நற்பதமான வெள்ளரிக்காயை தயிருடன் கலந்து, இந்த எளிய பேக்கை தயார் செய்யுங்கள். இப்போது, இந்த பேக்கை உங்கள் முகத்தின் மீது தடவி விட்டு, 15-20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் முகத்தை குளிர்ந்த நீரில் அலசுங்கள். வேண்டுமானால், கண்களின் மீது இரண்டு துண்டு வெள்ளரியை வைத்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் + தேன் + தயிர்

ஓட்ஸ் + தேன் + தயிர்

அனைத்து வகையான சருமங்களுக்கும் இந்த ஃபேஸ் பேக் பெரும் உதவியாய் இருக்கும். உங்கள் சருமத்தின் செத்த அணுக்களை நீக்குவதோடு மட்டுமல்லாது, சருமத்திற்கு ஈரப்பதத்தையும் இது அளித்திடும். இதற்கு மேல் என்ன வேண்டும்? ஆகவே தெளிவான மற்றும் மாசற்ற சருமத்தைப் பெற வேண்டுமானால், இந்த பேக்கை பயன்படுத்துங்கள்.

மெல்லிசாக அரைக்கப்பட்ட ஓட்ஸ் மற்றும் தயிரை சரிசமமான அளவில் கலந்து, அதனுடன் கொஞ்சம் தேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை சுத்தமான முகத்தில் தடவிக் கொண்டு, அதனை காய விடுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடுங்கள்.

முட்டையின் வெள்ளை கரு + தயிர்

முட்டையின் வெள்ளை கரு + தயிர்

முட்டையின் வெள்ளை கரு உங்கள் உடலுக்கு மட்டுமல்லாது சருமத்திற்கும் நல்லதாகும். முட்டையில் வைட்டமின்களும், கனிமங்களும் வளமையாக உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். முட்டையின் வெள்ளை கருவை தயிருடன் கலந்து, அந்த அழகு குறிப்பை பயன்படுத்துங்கள்.

முட்டையின் வெள்ளை கரு ஒன்றை கொஞ்சம் தயிருடன் கலந்திடுங்கள். வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவிடுங்கள். அதன் பிறகு மாய்ஸ்சுரைஸர் தடவிடுங்கள்.

ஸ்ட்ராபெர்ரி + தயிர்

ஸ்ட்ராபெர்ரி + தயிர்

இந்த கலவை சுவைமிக்கதாக தெரியும். ஆனால் இது முகத்திற்கானதே தவிர உண்ணுவதற்கு அல்ல. உங்கள் சருமத்தை பிரகாசமடைய செய்யவும் சுத்தமான நிறத்தைப் பெறவும் இது உதவிடும்.

உங்கள் சருமத்தை உடனடியாக பளபளக்க வைக்க மசித்த 2 ஸ்ட்ராபெர்ரி பழங்களை 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் நீருடன் கலந்திடுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது தடவுங்கள். 15-20 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு இந்த மாஸ்க்கை துடைத்து எடுங்கள். பின் இயற்கையான மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள்.

தக்காளி + தேன் + தயிர்

தக்காளி + தேன் + தயிர்

ஈரப்பதம் அளிக்கும் குணத்தை கொண்ட தயிரையும் தேனையும், சருமத்தை பளபளக்க வைக்கும் குணத்தை கொண்டுள்ள தக்காளியுடன் சேர்த்து தயாரிக்கப்படும் இன்னொரு மாஸ்க்கும் உள்ளது. அனைத்து சரும வகைகளுக்கும் இது சிறந்து செயல்படும்.

1 தக்காளியை அரைத்து, அதனை 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிருடன் கலந்து, பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். இதனை உங்கள் முகத்தின் மீது தடவி, அதனை 15-20 நிமிடங்களுக்கு காய விடுங்கள். தேனுக்கு பதில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயையும் பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெயில் வைட்டமின்கள் வளமையாக உள்ளதால், உங்கள் சருமத்திற்கு இது பொலிவைத் தரும்.

அவகேடோ + ஆலிவ் எண்ணெய் + தயிர்

அவகேடோ + ஆலிவ் எண்ணெய் + தயிர்

வறண்ட மற்றும் சீரற்ற சருமத்தை உடையவர்களுக்கு இந்த பேக் ஒரு வரமாக அமையும். அவகேடோ மற்றும் ஆலிவ் எண்ணெயின் ஈரப்பதம் அளிக்கும் குணம் சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும். வறண்ட சருமத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் தயிர்.

அரை அவகேடோ பழத்தை எடுத்து, அதனை மசித்திடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தயிரை கலந்திடுங்கள். இதனை உங்கள் முகத்தின் மீது தடவி, 10-15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். முகத்தை கழுவினால் பிரகாசமான மற்றும் மென்மையான சருமத்தை நீங்கள் பெறலாம்.

ஆப்பிள் + தேன் + தயிர்

ஆப்பிள் + தேன் + தயிர்

சருமத்துடன் நட்பு பாவிக்கும் வைட்டமின்களை ஆப்பிள் வளமையாக கொண்டுள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள செத்த அணுக்களை நீக்கவும் இது உதவும். சருமத்திற்கு இதமளிக்கும் குணங்களை கொண்டுள்ள தேன் மற்றும் புத்துணர்வை அளிக்கும் குணங்களை கொண்டுள்ள தயிர் ஆகியவற்றுடன் இதனை கலந்தால், அது உங்கள் சருமத்தின் மீது மாயங்களை நிகழ்த்தும்.

அதற்கு ஆப்பிள் ஒன்றை எடுத்து, அதன் தோலை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் தேனை கலந்திடவும். இதனை உங்கள் முகத்தின் மீது தடவுங்கள். நன்றாக காய்ந்த பிறகு, முகத்தை அலசிடுங்கள். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், வழுவழுப்பான மற்றும் பளபளப்பான சருமத்தை நீங்கள் பெறலாம். இது சிறப்பாக செயல்பட கிரீன் ஆப்பிள் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு + தயிர்

ஆரஞ்சு + தயிர்

புத்துயிர், ஈரப்பதம், சுத்தரிப்பு மற்றும் மென்மையாக்கும் குணங்களை கொண்டுள்ள மற்றொரு ஃபேஸ் மாஸ்க்கான இது, அனைத்து சரும வகைகளுக்கும் சிறந்து செயல்படும். ஆரஞ்சு பழத்தின் நன்மைகளைப் பெற அதனை தயிருடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் அழகு சாதனமாக சீரான முறையில் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் ஆரஞ்சு ஜூஸை தயிருடன் கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தின் மீது தடவவும். 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசிடுங்கள். உங்களுக்கு வறண்ட அல்லது பதனிடுதலான சருமம் என்றால், இந்த மாஸ்க்குடன் தேனும் சேர்த்துக் கொள்ளலாம்.

மாம்பழம் + தயிர்

மாம்பழம் + தயிர்

ஆழமான புத்துணர்வை அளிக்கும் மாம்பழத்தை நம்மால் மறந்து விட முடியுமா? மாம்பழத்தில் பல அருமையான வைட்டமின்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இது உங்கள் சருமத்திற்கு மாயங்களை புரியும். வயதாகும் அறிகுறிகளை எதிர்த்தும் போராடும்.

2-3 டீஸ்பூன் தயிரை பழுத்த பாதி மாம்பழ கூழுடன் கலந்து, மென்மையான பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். இந்த இரண்டு பொருட்களும் உங்களுக்கு புத்துணர்வுடன் கூடிய சிவத்த மேனியை அளிக்கும்.

மஞ்சள் + தயிர்

மஞ்சள் + தயிர்

முகத்திற்கு முழுமையான அழகை எதிர்ப்பார்க்கிறீர்களா? அப்படியானால் இந்த பேக் உங்களுக்கானது! இதற்கு தேவையான பொருட்களை கலந்து முகத்தின் மீது தடவினால் பிரகாசமான, பொலிவுடன் கூடிய அழகான, சுத்தமான சருமத்தைப் பெறலாம். மேலும் பருக்களை போக்கி வயதாகும் அறிகுறிகளை நீக்கும்.

1 டீஸ்பூன் மஞ்சளை 3 டீஸ்பூன் தயிருடன் கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி விட்டு, 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவிடுங்கள். இதனுடன் கொஞ்சம் தேனையும் சேர்த்துக் கொண்டால் மென்மையான சருமம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

11 Homemade Curd Face Packs to Get Glowing and Healthy Skin

Yoghurt (curd) is one such amazing ingredient that can be used for a variety of reasons. If you are looking forward to flaunt a glowing, healthy and head-turning clean and clear face this wedding season, here are some fantastic DIY yoghurt face packs for you.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter