Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்குகளும்... அதன் நன்மைகளும்...
கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. இந்த தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன், கொழுப்புக்கள் முற்றிலும் இல்லாததால், உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு சிறந்த உணவுப்பொருள். இந்த பழமானது உடலுக்கு மட்டும் நன்மைகளை வாரிக் கொடுப்பது மட்டுமின்றி, அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது.
குறிப்பாக தர்பூசணி ஒரு சிறப்பான டோனர். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது முதுமையைத் தடுக்கும். மேலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு நன்மை அளிக்கும் வகையில் இதில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 95% நீர்ச்சத்து இருப்பதால், இது சரும வறட்சியை தடுப்பதுடன், பொலிவான சருமத்தை பெற உதவியாகவும் உள்ளது.
அதற்கு தர்பூசணியை சாப்பிடுவது மட்டுமல்லாமல், இதனைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடவும் வேண்டும். இங்கு தர்பூசணியை எந்த பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றினால், நிச்சயம் அழகான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற முடியும்.

தர்பூசணி மாஸ்க்
தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கி விட்டு, அதனை அரைத்து, பின் அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பால் பயன்படுத்தி துடைத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தர்பூசணி மற்றும் தேன்
சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்க வேண்டுமானால், அரைத்த தர்பூசணியில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டூம். இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்தினருக்கு மிகவும் சிறந்தது.

தர்ழுசணி மற்றும் தயிர்
மென்மையான சருமம் வேண்டுமெனில், அரைத்த தர்பூசணியுடன் தயிர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் மற்றும் நொதிகள் சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, பொலிவான மென்மையான சருமத்தைப் பெற உதவிபுரியும்.

தர்பூசணி மற்றும் அவகேடோ
அவகேடோவில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதற்கு அவகேடோவை அரைத்து, அதில் தர்பூசணி ஜூஸை ஊற்றி கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வெளிப்படும் முதுமைத் தோற்றத்தைத் தடுக்கலாம்.

தர்பூசணி மற்றும் சர்க்கரை
இந்த மாஸ்க் ஒரு சிறப்பான சரும அழுக்குகளைப் போக்குபவை. அதற்கு அரைத்த தர்பூசணியுடன், சர்க்கரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கிற்கு பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

தர்பூசணி மற்றும் பால்
இது ஒரு சூப்பரான டோனர். இதற்கு தர்பூசணி சாற்றில் பால் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். மேலும் இது ஒரு சிறந்த சரும கருமையைப் போக்க உதவும் முறை.

தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்
மிகவும் ஈஸியான முறையில் பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமெனில், தர்பூசணி சாற்றில், அரைத்த வெள்ளரிக்காய், தயிர் மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட வேண்டும்.

தர்பூசணி மற்றும் வாழைப்பழம்
முகப்பருவால் அவஸ்தைப்படுவோர், தர்பூசணி சாற்றில் வாழைப்பழத்தை மசித்து கலந்து, மாஸ்க் போட்டால், அவற்றில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றி, சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுத்து, முகப்பரு இல்லாத சருமத்தைப் பெற உதவும்.



Click it and Unblock the Notifications
