Latest Updates
-
Happy Diwali 2026: இந்தியா தவிர தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நாடுகள் என்னென்ன தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும் -
இந்தியாவின் 'மாந்திரீக பூமி' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
சுக்கிரதாதித்ய யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க உதடுகள் கருப்பா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
வெயிலால் கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சில டிப்ஸ்...
சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கத்திர்களின் தாக்கத்தினால், சருமத்தின் நிறமானது மாறிவிடுகிறது. அதிலும் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சூரிய தாக்கத்தினால், சருமமானது கருமையாகிவிடுகிறது. ஆனால் சரியான சரும பராமரிப்பை மேற்கொண்டு வந்தால், சூரியக்கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.
இப்போது சூரியக்கதிர்களினால் சருமத்தின் நிறம் மாறாமல் இருப்பதற்கு எந்த மாதிரியான பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதிலும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதன் படி பின்பற்றி வந்தால், சருமத்தை சூரியனிடமிருந்து பாதுகாக்கலாம்.

முற்றிலும் மூடவும்
சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால், எப்போதும் வெளியே செல்லும் போது, சூரியக்கதிர்கள் படாதவாறு, சருமத்தை மூடிக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் மறக்காமல், சன் ஸ்க்ரீன் லோசன் தடவி செல்ல வேண்டும்.

ஸ்கரப்
சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, ஸ்கரப் செய்வது சிறந்த வழியாகும். அதிலும் எப்போதெல்லாம் வெயிலில் சுற்றிவிட்டு, வீட்டிற்கு வந்தாலும், ஸ்கரப் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும். ஒருவேளை தினமும் செய்ய முடியாவிட்டால், வாரம் ஒருமுறையாவது தவறாமல் செய்து வர வேண்டும்.

கிளின்சர்
ரோஸ் வாட்டர், பால், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எலுமிச்சை கொண்டு சருமத்தை தினமும் பராமரித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம். மேலும் இந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் சருமத்தில் உள்ள கருமை நீங்குவதுடன், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

வாக்சிங்
சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளைப் போக்க உதவும் ஒரு முறை தான் வாக்சிங். இந்த முறையை கை மற்றும் கால்களில் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதுடன், சருமத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக் கூட ஒரு அருமையான சரும கருமையைப் போக்க உதவும் வழியாகும். அதிலும் மஞ்சள், முல்தானி மெட்டி, பால், எலுமிச்சை சாறு போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக்கை சருமத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் அழகு பராமரிக்கப்படுவதுடன், சருமத்தில் உள்ள கருமை போய்விடும்.



Click it and Unblock the Notifications
