Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஹேங்-ஓவர் சருமத்தை சரிசெய்ய சில ஈஸியான வழிகள்!!!
இரவு முழுவதும் பார்ட்டியில் இருந்து விட்டு வந்தால் பல நேரங்களில் உங்களுக்கு நீங்கள் ஹேங்-ஓவர் ஆகி விடும். ஆனால் உடல் மற்றும் மூளை மட்டும் ஹேங்-ஓவரால் பாதிப்பதில்லை. இரவு பார்ட்டி முடிந்து மறுநாள் எழுந்தால் உங்கள் முகத்தில் கூட ஹேங்-ஓவருக்கான அறிகுறிகள் தென்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹேங்-ஓவர் ஏற்பட்டால் உங்கள் முக சருமம் வெளிறி பொலிவிழந்து காணப்படும். ஹேங்-ஓவரால் உங்கள் சருமம் வறண்டு சொரசொரப்பாகவும் மாறும். ஹேங்-ஓவரால் உங்கள் கண்கள் கூட அயர்ந்து போய் இருக்கும்.
ஹேங்-ஓவரால் உடல் மற்றும் மூளை பாதிப்படியும் போது அதனை சரி செய்ய பல வழிகள் உள்ளது. ஆனால் அவைகள் முக சருமத்திற்கு உதவி புரிவதில்லை. சரும ஹேங்-ஓவரை நீக்க சில குறிப்பிட்ட டிப்ஸ் இருக்கிறது. முக சரும ஹேங்-ஓவரை நீக்க கீழ்கூரிய டிப்ஸ் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி பயனடையுங்கள்.

முகத்தை கழுவுங்கள்
இரவு முழுவதும் குதூகலமாக பார்ட்டி கொண்டாடி விட்டு காலையில் எழும் போது, முதலில் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். குளிர்ந்த நீர் உங்கள் முகத்திற்கு தெளிர்ச்சியை உண்டாக்கி சரும ஹேங்-ஓவரை நீக்கும். சருமத்திற்கு சக்தியை கொடுத்து, மீண்டும் புத்துனரச்சியை ஏற்படுத்த நல்ல ஃபேஸ் வாஷையும் பயன்படுத்துங்கள். முக சருமத்திலிருந்து ஹேங்-ஓவரை நீக்க இது முதல் படி மட்டுமல்ல, முக்கியமான படியும் கூட. அன்றாடம் காலை எழுந்தவுடன் முகம் கழுவ வேண்டியது அவசியமே. ஆனால் மோசமான ஹேங்-ஓவர் இருக்கும் காலையில் முகத்தை இரண்டு மூன்று முறை கூட கழுவலாம்.

மாய்ஸ்சுரைசர்
பார்ட்டிக்கு பின் சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்து அதற்கு ஈரப்பதம் அளித்திடுங்கள். ஹேங்-ஓவர் ஏற்படும் போது உங்கள் முகத்திலும் சருமத்திலும் வறண்ட திட்டுகள் உண்டாகும். அதனால் ஹேங்-ஓவர் ஏற்படும் போதெல்லாம் உங்கள் சருமத்தில் அதிகமான மாய்ஸ்சுரைசரை தடவுங்கள். ஈரபதம் ஏற்படுவதால் உங்கள் சருமம் நற்பதத்துடன் புத்துணர்ச்சி பெரும். முக சருமத்திலிருந்து ஹேங்-ஓவரை நீக்க இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

ஃபேஸ் மாஸ்க்
உங்கள் முகம் பொலிவிழந்து, சோர்வடைந்து போயிருந்தால், ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தி சருமத்தை மீண்டும் மின்னிடச் செய்யுங்கள். நற்பதமான பழங்களை கொண்ட ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தினால் உங்கள் சருமம் உடனடி பொழிவை பெரும். முக சருமத்தில் நீடிக்கும் ஹேங்-ஓவரை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இந்த வழி சிறப்பாக செயல்படுவதோடு நில்லாமல் உடனடி பயனை அளிக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பல ஃபேஸ் மாஸ்க்குகளை செய்யலாம். பன்னீர், முல்தானி மெட்டி, பால் மற்றும் பழங்களை கொண்டு ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். இந்த மாஸ்க்கை உங்கள் சருமத்தில் சரி சமமாக தடவுங்கள். அது காயும் வரை அப்படியே விட்டு விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

தண்ணீர்
மதுபானம் குடிப்பதால் உண்டாகும் ஹேங்-ஓவரை போக்க அளவுக்கு அதிகமான தண்ணீரை பருகுங்கள். உங்கள் சரும அணுக்களுக்கு நீர்ச்சத்து அளித்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திட உதவும் தண்ணீர். ஹேங்-ஓவரால் வறண்டு, பொலிவிழந்து காணப்படும் உங்கள் சருமம் தண்ணீர் குடிப்பதால் மேம்படும். அதோடு நிற்காமால் உடல் மற்றும் மூளை ஹேங்-ஓவரை நீக்கவும் கூட தண்ணீர் உதவி புரியும். அதனால் ஹேங்-ஓவரை நீக்க தண்ணீர் சிறப்பான வழியாக விளங்குகிறது.

உண்ணுங்கள்
முந்தைய நாள் இரவினால் உண்டான ஹேங்-ஓவரை நீக்க உணவுகள் உண்ணுவதும் ஒரு வழியாகும். உணவுகள் உண்ணும் போது ஆற்றல் அதிகரித்து மீண்டும் சுறுசுறுப்பாக மாறி விடுவீர்கள். நன்றாக உண்ணும் போது, உடலில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த ஹேங்-ஓவரும் நீங்கி. உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெற்று பொலிவோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications