Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
ஷேவிங் செய்த பிறகு சருமம் மென்மையா இல்லையா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
மிகச்சிறந்த ஷேவிங் செய்வது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் முழுமையான திருப்தியளிக்கும் விஷயமாகும். மிகச்சிறந்த உணர்வைத் தருவதுடன், நம்பிக்கையை அதிகரிக்கும் விஷயமாக 'க்ளீன் ஷேவ்' உள்ளது. ஒரு முக்கியமான சந்திப்பாகவோ அல்லது முக்கிய நாளோ எதுவாக இருந்தாலும் நீங்கள் துடிப்பாகவும், ஷேவ் செய்து மென்மையானவராகவும் இருக்க முயற்சி செய்வீர்கள். ஷேவிங் செய்து முடித்தவுடன் பிளேடால் சுரண்டப்பட்ட உங்களுடைய முகத்தின் தோலை நல்ல ஃபேஸியல் பேக் கொண்டு சரி செய்ய வேண்டியது அவசியமாகும். ஷேவிங் செய்யும் போது தோலிலுள்ள அடுக்குகளில் ஒன்று அல்லது இரண்டை நீங்கள் சுரண்டி எடுத்து விடுவீர்கள். எனவே, ஷேவிங் செய்த பிறகு தோலை மென்மையாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
நீங்கள் எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும் அல்லது தயாராக இருந்திருந்தாலும் உங்களுடைய கண்களுக்குத் தெரியாமல் சில காயங்களும், வெட்டுகளும் ஷேவிங் செய்யும் போது உருவாகும். ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் முன்னர் தேயிலை மர எண்ணெய் அல்லது ஒரு ஆன்டிசெப்டிக் களிம்பை தோலில் தடவுங்கள். இவ்வாறு செய்வதால் உங்களுடைய காயம்பட்ட தோல் புத்துயிர் பெறும் மற்றும் முகத்தின் தோல் ஈரப்பதமடையவும், மென்மையாகவும் மாறும். பெண்களைப் போல ஆண்களுக்கும் ஃபேஸியல் பேக் கிடைப்பதெல்லாம் இப்பொழுது சகஜமாகி விட்டது. மேலும், மென்மையான மற்றும் சமமான தோல் பகுதியை முகத்தில் கொண்ட ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது ஒரு ஆய்வு!
ஃபேஸியல் பேக்குகள் உங்கள் தோலை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றை ஈரப்பதமாக வைத்திருக்கவும் மற்றும் புத்துயிர் கொடுக்கவும் செய்கின்றன. இது தோலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தாகும். அதிலும் இயற்கையான மற்றும் மூலிகை சார்ந்த ஃபேஸியல் பேக்குகளை பயன்படுத்துபவர்கள் என்றென்றும் இளமையுடன் தோலை பராமரிக்க முடியும். வெள்ளரிக்காய், பப்பாளி, தேன், மஞ்சள் ஆகியவை ஷேவிங்கிற்குப் பிறகு பயன்படுத்தப்படும் சில பிரபலமான இயற்கையான ஃபேஸியல் பொருட்களாகும்.

வெள்ளரிக்காய்
ஷேவிங்கிற்குப் பின்னர் இயற்கையாக முகத்தைப் பராமரிக்க விரும்பினால் ஓட்ஸ், தயிர் ஆகியவற்றுடன் வெள்ளரிக்காயைச் சேர்த்து பயன்படுத்துங்கள். இவற்றை கலவையாக கலந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் உங்கள் முகத்தோலை குளுமைப்படுத்தவும் மற்றும் மென்மையாக மாற்றவும் செய்யும். ஷேவிங்கிற்குப் பிறகு, சுமார் 30 நிமிடங்களுக்கு இந்த கலவையை முகத்தில் போட்டிருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் ஃபேஸ் பேக்
பல நூற்றாண்டுகளாகவே தயாரிக்கப்பட்டு வரும் மருந்துகள் மற்றும் உணவுகளில் பயன்படுத்தப்படும் இயற்கையின் கொடையாக இருக்கும் கிருமிநாசினி தான் மஞ்சள். குடலை மாவு, பாதாம் எண்ணெய் மற்றும் தண்ணீருடன் சேர்த்து மஞ்சள் பொடியை சேர்த்து கலந்துவிட்டால் உங்களுக்கான ஆஃப்டர் ஷேவ் பேக் ரெடி. இந்த பேக் உங்கள் சருமத்தில் ஷேவிங்கின் போது ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதுடன், முகத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.

தேன்
நீங்கள் ஒவ்வொரு முறை ஷேவிங் செய்த பின்னும் பயன்படுத்த வேண்டிய பொருள் தேன் ஆகும். தேன் திறமையுடன் தனித்து நின்று செயல்படக் கூடிய ஃபேஸ் பேக் ஆகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஷேவிங்கிற்குப் பின்னர் தேனை உங்கள் முகத்தில் தடவிக் கொண்டு, 20-30 நிமிடங்கள் இருக்க வேண்டும். அதன் பின்னர் முதலில் வெதுவெதுப்பான தண்ணீரிலும், பிறகு குளிர்ந்த நீரிலும் முகத்தை கழுவ வேண்டும்.

வாழைப்பழம்
வறண்ட சருமம் கொண்ட ஆண்களுக்கு வாழைப்பழ ஃபேஸ் பேக் பலன் தரும். வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து கெட்டியான ஒருகலவையை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஷேவிங்கிற்குப் பின்னர் 10-20 நிமிடங்கள் முகத்தில் தடவி, தோலுக்கு புத்துயிர் கொடுங்கள்.

களிமண் ஃஃபேஸ் பேக்
இது சற்றே ஒழுங்கமைவில்லாத மற்றும் பூமியிலிருந்தே எடுக்கக் கூடிய ஃபேஸ் பேக் ஆகும். உங்கள் தோலுக்கு ஏற்ற வகையிலான களிமண்னை தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியமான விஷயமாகும். பூக்களின் சாறு அல்லது பழத்தோல்களின் சாறுகளுடன் களிமண்னை கலக்கவும். இந்த கலவையை உங்கள் தோலில் 20 நிமிடங்களுக்கு தடவி, காய விட்டு புத்துயிர் பெறுங்கள்.

பப்பாளி
பப்பாளியில் உள்ள 'பப்பாய்ன்' என்ற சிறப்பு என்ஸைம் இறந்த செல்களை நீக்கவும் மற்றும் தோலின் கழிவுகளை நீக்கவும் செய்யும் திறன் கொண்டதாகும். சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட காயங்கள் அல்லது தோல் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தி உங்கள் தோலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் குணம் இந்த என்ஸைமிற்கு உண்டு. இது ஒரு சுவையான ட்ரீட்மெண்ட் தானே!



Click it and Unblock the Notifications