Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஆண்களுக்கான சுலபமான சில வாக்சிங் டிப்ஸ்...
முடிகள் நிறைந்த ஆண்கள் வசீகரமானவர்களாகவும் கவர்ச்சியானவர்களாகவும் பார்க்கப்பட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் வளுவளுவென மென்மையாக இருக்கவே ஆண்கள் விரும்புகின்றனர். ரகசியமாக பெண்களும் கூட இவ்வகை ஆண்களின் மீது தங்களின் நாட்டத்தை திசை திருப்ப தொடங்கி விட்டார்கள். பல ஆண்களுக்கும் பல அளவில் உடலில் முடிகள் வளந்திருக்கும். அது ஆண்களின் ஹார்மோன்களுக்கான குணாதிசயமாகும்.
ஆனால் அவ்வகையான முடிகளை அகற்றி சுத்தமாக இருக்க வேண்டுமானால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய சிறந்த வழியாக விளங்குகிறது வாக்சிங். உங்கள் காதலி அல்லது தங்கை பயன்படுத்தும் இயற்கை வழிகள் உங்களுக்கு சரிபட்டு வராது. காரணம் உங்கள் முடி திடமாகவும் வலுவாகவும் இருக்கும்.
ஷேவிங் மூலம் 'மிஸ்டர் பெர்பெக்ட்' என்ற பெயர் வாங்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...
எவ்வளவு பெரிய தைரியசாலியான மற்றும் பலசாலியான ஆணாக இருந்தாலும் சரி, பலருக்கும் வாக்சிங் செய்வதால் ஏற்படும் வலி என்றால் பயமே. இதை வலியில்லாமல் செய்வார்கள் என்ற தப்பு கணக்கு போட்டு அழகு நிலையத்திற்கு சென்று விடாதீர்கள். இதற்கு சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதே சிறந்த வழியாகும். ஆண்களின் நெஞ்சு முடியை வாக்சிங் செய்வதற்கு முன்பும் பின்பும் பின்பற்றக் கூடிய டிப்ஸ் பல உள்ளது.
ஆண்களுக்கான வாக்சிங் டிப்ஸ் தெரியாத காரணத்தினால் இதுவரை வாக்சிங் செய்யாதவர்களில் நீங்களும் ஒருவரா? கவலையை விடுங்கள்! சிறந்த முறையில் வாக்சிங் செய்ய உங்களுக்காக சில வாக்சிங் டிப்ஸ்களை நாங்கள் அளிக்க உள்ளோம்.
தாடி மென்மையாக இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

தயாராகுங்கள்
வாக்சிங் செயல்முறை சிறப்பாக வருவதற்கு குறைந்தபட்ச நீளத்தில் இருக்க வேண்டும் உங்கள் முடி. வாக்சிங் செய்வதற்கு 3 வாரங்களுக்கு முன், அந்த இடத்தை நன்றாக ஷேவ் செய்து விடுங்கள். இதனால் வாக்சிங் செய்யும் போது 1 செ.மீ. தூரத்திற்கு முடி வளர அது உதவும். இல்லையென்றால் வாக்சிங் செய்வதற்கு முன்பு, போதுமான நீளத்திலான முடியை பெற, ட்ரிம் செய்தும் கொள்ளலாம்.

சோதனை முறை
ஆண்கள் தங்கள் நெஞ்சு முடியை வாக்சிங் செய்வதால் பருக்களும் சரும எரிச்சல்கல்களும் ஏற்படுவது பொதுவான ஒன்றே. அதனால் வாக்சிங் செய்வதற்கு முன்பாக உடலின் ஒரு சிரியா பகுதியில் சோதனை அடிப்படையில் சோதித்துக் கொள்வது ஒரு மிக முக்கிய டிப்ஸாகும். இதனால் சிக்கல்கள் உண்டாவதை தவிர்க்கலாம்; முக்கியமாக உங்களுக்கு சென்சிடிவ் சருமம் இருந்தால்.

சுத்தம் மற்றும் உலர்ந்த சருமம்
வாக்சிங் செய்வது முன்பு, செய்ய வேண்டிய இடத்தை சுத்தப்படுத்தி உலர்த்துவது ஒரு நல்ல ஐடியாவாகும். இதனால் வாக்சிங் செய்யும் போது தூசி, அழுக்கு அல்லது எண்ணெய் போன்றவைகள் படியாது. இந்த வாக்சிங் டிப்ஸ் ஆண்களின் சருமத்தில் மெழுகை நன்றாக ஒத்துப் போக செய்யும். நெஞ்சு முடியை வாக்சிங் செய்யும் ஆண்களுக்கு இது ஒரு முக்கிய டிப்ஸாகும்.

சீரான செய்முறை
வாக்சிங் செய்யும் போது ஏற்படும் அசௌகரியம், வாக்சிங் செய்யும் தரத்துடன் நேரடி தொடர்பில் உள்ளது. நீங்களே சுயமாக வாக்சிங் செய்ய போகிறீர்கள் என்றால், மெழுகை எப்படி தடவி, அந்த ஸ்ட்ரிப்பை அழுத்தி, மிக முக்கியமாக அதை எப்படி உருவ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தொழில் ரீதியானவர்களிடம் இருந்து உதவி பெறுவது மற்றொரு முக்கிய டிப்ஸாகும்.

இடத்தை அமைதிப்படுத்துங்கள்
வாக்சிங் செய்த இடத்தை குளிர்ந்த துணி அல்லது ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும். வாக்சிங் செய்த பிறகு நல்ல மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. வறண்ட சருமத்தை கொண்ட ஆண்களுக்கு இது ஒரு முக்கிய டிப்ஸாகும். மேலும் வாக்சிங் செய்வதால் உண்டாகும் சரும எரிச்சலுக்கும் இது உதவியாக இருக்கும்.

பராமரிப்பு
வாக்சிங் செய்த பிறகு செய்ய வேண்டிய பராமரிப்பு மிகவும் முக்கியமாகும். அழுத்துவதால் ஏற்படும் எரிச்சலை தவிர்க்க லூசான ஆடைகளை அணிவியுங்கள். வாக்சிங் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்காவது சூரிய ஒளியில் தென்படாமல் இருங்கள். இல்லையென்றால் நல்லதொரு சன்ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்துங்கள். கடுமையான ரசாயனங்கள் கலந்த க்ரீம் அல்லது லோஷன்களை பயன்படுத்தாதீர்கள்.



Click it and Unblock the Notifications
